பட்டு போன்ற அழகான சருமத்தை பெறுவதற்கு இந்த ஒரு பொருள் மட்டும் இருந்தால் போதும்.

skin care tips at home in tamil

சருமம் பராமரிப்பு

வணக்கம் நண்பர்களே இன்று நம் அழகு குறிப்பு பதிவில் நம் சருமத்தை அழகாகவும், வெள்ளையாகும், பளபளப்பாகவும் இருப்பதற்காக ஒரு அருமையான குறிப்பு பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாகவே பெண்ணாக இருந்தாலும்  சரி ஆணாக இருந்தாலும் சரி சருமத்தை பற்றி அதிகமான கவலைகள் இருக்கும், இது போன்ற காரணங்களால் பல விதமான கெமிக்கல் நிறைந்த கிரீம்களை உபயோகப்படுத்துவார்கள், ஆனால்  அதுவும் ஒரு சிலருக்கு அலர்ஜி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும், இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு இந்த அருமையான குறிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்.

முகத்தில் மரு வந்து அழகை கெடுக்கிறதா..! இனி இந்த மாதிரி செய்யுங்க..!

Skin Care Tips at Home in Tamil:

சரும பிரச்சனைகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் தோல்களை ஒழுங்காக பராமரிக்காமல் இருப்பது, சத்தான உணவுகளை தவிர்ப்பது, சூரிய ஒளி போன்றவற்றால் சருமம் தன்னுடைய பொழிவுகளை இழந்துவிடுகிறது. இது போன்ற பிரச்சனைகளால் சருமங்கள் மந்தமாகவும், கரடுமுரடாகவும், பருக்களுடனும் இருக்கிறது.

சரும பராமரிப்புக்கு ஒரு வாரத்திற்கு மூன்று முறையாவது மாய்ஸ்சரைசர் அவசியம் தேவைப்படுகிறது,  இந்த மாய்ஸ்சரைசர் இனி கடைகளில் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, நம் வீட்டிலே சுலபமாக செய்யலாம்.

வீட்டிலே மாய்ஸ்சரைசர் கிரீம் சுலபமாக செய்யும் முறை:

தேவைப்படும் பொருட்கள்:

  • நெய் 
  • தண்ணீர் 
  • எண்ணெய் 

செய்முறை:

  • முதலில் ஒரு சிறிய அளவு கிண்ணத்தை எடுத்து அதில் இரண்டு கரண்டி அளவு நெய் சேர்க்கவும்.
  • அடுத்ததாக குளிர்ந்த நீரை அந்த நெயை சேர்த்து நன்றக கலக்கி கொள்ளவும். அதன் பிறகு தேங்காய் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் போன்ற எண்ணெய்கள் இருந்தால் அதில் சேர்த்து கலந்து விட வேண்டும்.
  • இதனை தயாரித்து முடித்த பிறகு ஒரு கண்ணாடி ஜாடியில் எடுத்து பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
  • அரை மணி நேரம் கழித்து அந்த மாய்ஸ்சரைசரை வறண்ட சருமங்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

நெய் மாய்ஸ்சரைசர் பலன்கள்:

இந்த நெய் மாய்ஸ்சரைசர் தினமும் தடவி வருவதால் முகம் வெண்மையாகவும், மிருதுவாகவும் மாற்றம் அடையும், அதோடு இந்த நெய்யில் ஒமேகா 3,9. கொழுப்பு அமிலங்களும் வைட்டமிகள் நிறைந்து உள்ளதால் அனைத்து வகையான சருமத்திற்கும் மற்றும் சரும பிரச்சனைகளுக்கும் உதவியாக இருக்கும். இதை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது உங்களின் தோல்கள் மாற்றம் அடைவது நன்றாகவே தெரியும். எனவே இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் இந்த மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி அழகை பெறுங்கள்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil