வெயிலில் கருத்து போன உங்கள் முகத்தை பளிச்சென்று வைக்க இதை follow பண்ணுங்க…!

mugam karumai neenga tips in tamil

வெயிலில் ஏற்பட்ட கருமை நீங்க

ஹாய் நண்பர்களே..! இன்றைய அழகு குறிப்பு பதிவில் வெயிலினால் கருத்து போன முகத்தை பளிச்சென்று மாற்றுவது எப்படி என்று பார்க்கபோகிறோம். முகம் என்று சொன்னாலே ஒரு தனி அழகு தான். அந்த முகத்தை பளபளக்க வைப்பதற்கு நிறைய செய்முறைகள் வீட்டில் இருந்து ஒருசிலர் செய்து வருகின்றனர். சிலர் பார்லருக்கு சென்று அழகு சேர்த்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது வெளியில் நாம் செல்லும்போது நம்முடைய முகத்தில் வெயில் பளிச்சென்று வீசும். அதனால் உங்களுடைய முகம் கருத்து போய்விடும் என்று கவலை படாதீர்கள். இந்த பதிவை தொடர்ந்து படித்து முகத்தை பளிச்சென்று வைப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ முகம் 24 மணி நேரமும் பளபளப்பாக இருக்க இதை                                     டிப்ஸை  Follow பண்ணுங்க.!

வெயிலில் கருத்து போன முகத்தை பளிச்சென்று மாற்ற என்ன செய்ய வேண்டும்:

டிப்ஸ் – 1

முதலில் முகத்தை பளிச்சென்று மாற்றுவதற்கு முன்பு சில செய்முறைகளை செய்ய வேண்டும். அதற்கு முதலில் ஒரு கிரீம் தயார் செய்து அதனை முகத்தில் தேய்க்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:

  • காப்பித்தூள்- 2 ஸ்பூன் 
  • சர்க்கரை- 2 ஸ்பூன் 
  • தேன்- 2 ஸ்பூன் 

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து அந்த கிரீமை முகத்தில் தடவி தேய்த்து விடுங்கள். 10 நிமிடம் களித்து முகத்தை கழுவி விடுங்கள். இப்போது உங்கள் முகத்தில் வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கி விடும்.

டிப்ஸ் – 2

இப்போது உங்களுடைய முகம் வெயிலில் பட்டாலும் நிறம் மாறாமல் அப்படியே இருப்பதற்கு ஒரு கிரீம் தயார் செய்ய வேண்டும். அது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

  • மஞ்சள் தூள்- 1 ஸ்பூன் 
  • தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன் 
  • சர்க்கரை- 2 ஸ்பூன் 

செய்முறை:

ஸ்டேப்: 1

இந்த கிரீம் தயார் செய்வதற்கு ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அந்த கிண்ணத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

கடைசியாக தயார் செய்து இந்த கிரீமை உங்களுடைய முகத்தில் 10 நிமிடம் நன்றாக மசாஜ் செய்வது போல் தடவி விடுங்கள். அதன் பிறகு எப்போதும் போல முகத்தை தண்ணீரில் கழுவி விடுங்கள்.

நீங்கள் வெளியில் சென்று வந்த பிறகு உங்களுடைய முகம் கருத்து போகிருந்தால் இது மாதிரி செய்யும்போது முகத்தில் உள்ள கருமை நீங்கி எப்போதும் போல் பளிச்சென்று முகம் பளபளக்கும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil