Tips for Gray Hair to Black Hair Naturally at Home in Tamil
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களின் தலை முடிகென்று ஒரு தனி கவனத்தை செலுத்துவார்கள். அப்படி நாம் மிகவும் கவனமாக பார்த்து பார்த்து பராமரித்து வைத்திருக்கும் தலை முடியில் திடீரென்று ஏதாவது ஒரு பிரச்சனை வந்து விட்டது என்றால் நமது மனம் மிகவும் கஷ்டப்படும். அதிலும் குறிப்பாக தலையில் நரை முடி வந்து விட்டது என்றால் சொல்லவா வேண்டும். உங்கள் தலையில் உள்ள நரை முடி போக்க நீங்களும் பல வகையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
ஆனால் அவையாவும் நல்ல பலனை அளிக்க வில்லை என்றாலும் உங்களுக்கு மிக கஷ்டமாக இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்களின் தலையில் உள்ள நரை முடியை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Turn Grey Hair into Black Permanently Naturally in Tamil:
தலையில் உள்ள நரை முடியை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- வேப்பிலை பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- மருதாணி பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- காபி பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 1 டம்ளர்
கருஞ்சீரகத்தை அரைத்து கொள்ளவும்:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளையும் 1 மணிநேரத்தில் வேரிலிருந்து கருமையாக மாற்ற டீ தூளை இப்படி பயன்படுத்துங்கள் போதும்
கடாயை எடுத்து கொள்ளவும்:
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் அதில் நாம் அரைத்து வைத்துள்ள கருஞ்சீரக பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
நெல்லிக்காய் பொடியை கலக்கவும்:
அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
வேப்பிலை பொடியை சேர்க்கவும்:
அதனுடனே 1 டேபிள் ஸ்பூன் பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 2 மணி நேரத்தில் தலையில் ஒரு நரைமுடி கூட மிச்சம் இல்லாமல் கருப்பாக வேண்டுமா அப்போ தேங்காய் எண்ணெயுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்
மருதாணி பொடியை கலந்து கொள்ளவும்:
பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் மருதாணி பொடியை கலந்து கொள்ளுங்கள்.
காபி பொடியை சேர்த்து கொள்ளவும்:
இறுதியாக அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் காபி பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை 10 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறியவுடன் உங்களின் தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.
இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலையில் உள்ள அனைத்து நரை முடியும் இருந்த இடமே தெரியாமல் போகிவிடும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருமையாக மாற கடுகு எண்ணையுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |