வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருமையாக மாற கடுகு எண்ணெய்யுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்..!

Updated On: February 8, 2024 7:14 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Tips for White Hair to Black Hair Naturally at Home in Tamil

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே உள்ள ஒரு பெரிய பிரச்சனை என்றால் அது நரைமுடி தான். நமது முன்னோர்களின் காலத்தில் அதிக வயதானவர்களுக்கு கூட தலைமுடி நரைத்ததில்லை. அதற்கு காரணம் அவர்கள் பின்பற்றிய சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை தான். இன்றைய காலகட்டத்தில் உள்ள வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை எப்படி முரண்பாடாக உள்ளது என்று நாம் அனைவருக்குமே தெரியும். இதன் காரணமாக சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே நரைமுடி வருகின்றது.

அதனை போக்குவதற்காக நீங்களும் பல செயற்கையான முறைகளை கையாண்டிருப்பீர்கள். ஆனால் அவையாவும் நல்ல பலனை அளித்ததா..? என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதனால் தான் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் உங்களின் தலையில் உள்ள நரைமுடிகளை கருமையாக மாற்ற உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

White Hair to Black Hair Naturally in Tamil:

White Hair to Black Hair Naturally in Tamil

இயற்கையான முறையில் உங்களின் தலையில் உள்ள நரைமுடிகளை கருமையாக மாற்ற உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. கடுகு எண்ணெய் – 200 மி.லி 
  2. வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன் 
  3. கருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் 
  4. மருதாணி பொடி – 2 டேபிள் ஸ்பூன் 

கடாயை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து லேசாக வறுத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> நரைமுடியை வேரிலிருந்து கருப்பாக மாற்ற நித்தியகல்யாணி இலை மட்டும் போதும்

கடுகு எண்ணெயை சூடுப்படுத்தவும்:

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 200 மி.லி கடுகு எண்ணெயை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

மருதாணி பொடியை சேர்க்கவும்:

பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் மருதாணி பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி 1 மணி நேரம் ஆற விடுங்கள். பிறகு அதனை உங்களின் தலையில் தடவி 1 முதல் 2 மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் நரைமுடி நிரந்தரமாக கருமையாக மாறுவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் நரைமுடியை 1 மணிநேரத்தில் கருமையாக மாற்றுவது எப்படி

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now