சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்..! Turmeric face pack in tamil..!

Turmeric face pack in tamil

கஸ்தூரி மஞ்சள் அழகு குறிப்புகள்..! | Turmeric face pack in tamil

Turmeric face pack in tamil:- மஞ்சள் ஒரு கிருமிநாசினி பொருள் என்று நம் அனைவருக்கும் தெரியும். பெண்கள் தினமும் சாதாரண மஞ்சளை சருமத்தில் பூசுவதற்கு பதில், கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சள் சரும அழகை அதிகரிக்கும், Sensitive சருமம் உள்ளவர்கள் வெறும் மஞ்சளை பூசுவதற்கு பதில் கஸ்தூரி மஞ்சளுடன் சில பொருட்களை கலந்து சருமத்திற்கு பயன்படுத்திவதினால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும். இந்த பதிவில் சருமத்திற்கு அழகு தரும் கஸ்தூரி மஞ்சள் ஃபேஸ் பேக் சிலவற்றை பதிவு செய்துள்ளோம். சரி வாங்க அவற்றையெல்லாம் இப்பொழுது படித்து பயன் பெறுவோம்.

இதையும் படியுங்கள் 👉 பீட்ரூட் Face Pack – இவ்வளவு அழகு தருமா ?

கஸ்தூரி மஞ்சள் அழகு குறிப்புகள் / Turmeric face pack for dry skin

Step: 1 face cleansing | Turmeric and milk for tan removal:-

turmeric benefits for skin

ஒரு  பவுலை எடுத்து எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மூன்று ஸ்பூன் காய்ச்சாத பால், ஒரு சிட்டிகை அளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையினை சருமத்தில் இப்பொழுது அப்ளை செய்து நன்றாக காயவிடுங்கள், பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பால், கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேன் இவை மூன்று சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்குவதுடன், இயற்கையான முறையில் சருமத்தை என்றும் பளிச்சென்று வைத்து கொள்ளும்.

இதையும் படியுங்கள் 👉 கடலை மாவு முகத்திற்கு தரும் அழகு ரகசியங்கள்..!

Step: 2 Face scrubbing:

turmeric benefits for skin

அடுத்ததாக நாம் சருமத்தில் ஸ்க்ரப்பிங் (scrubbing) செய்யபோகிராம், இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் வெள்ளை சக்கரை, 1/2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது ஸ்க்ரப்பர் தயாராகிவிட்டது, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள் பின் 5 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களுக்கு புத்துயிர் அளிப்பதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். தேங்காய் எண்ணெய் மற்றும் கஸ்தூரி மஞ்சள் சருமத்தை மென்மையாகவும், பொலிவுடனும் வைத்து கொள்ளும்.

Step: 3 Face massage:

turmeric benefits for skin 3

 

அடுத்ததாக சருமத்திற்கு Face massage செய்ய வேண்டும். இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் இரண்டு வைட்டமின் ஈ மாத்திரையை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் இந்த கலவையை சருமத்தில் நன்கு அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள் அதாவது 10 முதல் 15 நிமிடங்கள் வரை சருமத்தை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.

முகத்திற்கு இவ்வாறு மசாஜ் செய்வதினால் சரும செல்கள் புத்துணர்ச்சியாக காணப்படும், மேலும் முகப்பருவினால் ஏற்படும் கரும் புள்ளிகள் மற்றும் கரும்திட்டுகள், சரும வறட்சி நீங்கி (turmeric face pack for tan removal) சருமம் பட்டுப்போல் ஒளிரும்.

இதையும் படியுங்கள் 👉 ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள்..!

Last step: 4 Face pack:

turmeric benefits for skin

இறுதியாக நாம் சருமத்திற்கு இயற்கையான முறையில் face pack தயார் செய்ய போகிறோம், இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள்.

அவற்றில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 1/2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் ஆகியவற்றில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது face pack தயார் இந்த ஃபேஸ் பேக்கினை முகத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின் கழுத்து பகுதியிலும் நன்றாக அப்ளை செய்யுங்கள் பின்பு 30 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிந்த நீரில் கழுவ வேண்டும்.

இந்த முறையினை வாரத்தில் ஒரு முறை செய்து வரலாம், முகத்திற்கு இது போன்று அடிக்கடி பேசியல் செய்வதினால் முகம் வெள்ளையாகவும், மென்மையாகவும், முகம் வசீகரமாக காணப்படும்.

குறிப்பு: இந்த நான்கு ஸ்டெப்ஸையும் தொடர்ச்சியாக (step by step) செய்ய வேண்டும்.

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami