இந்த பொருள் 1 கைப்பிடி இருந்தால் போதும் முகம் மட்டுமில்லாமல் உடலும் வெள்ளையாகும்..!

ulunthu face pack in tamil

இயற்கையாக முகம் வெள்ளையாக

நண்பர்களே தினமும் முகம் பார்க்கும் போது அனைவரும் யோசிப்போம் நாம் இப்படி இருந்தால் நல்லா இருப்போம் அப்படி இருந்தால் நல்லா இருப்போம் என்று யோசிப்போம். ஆனால் நம் உடனே செய்யும் தவறு என்வென்றால் செயற்கை கிரீம்களை வாங்கி முகத்தில் தடவுவது தான் நமக்கு தெரிந்த ஒன்று. அது முகத்தில் உடலில் தடவினால் உடல் முழுவதும் 2 நாட்களின் வெண்மையான நிறத்தை கொடுக்கும் அதே இயற்கை முறையில் முகத்தை வெண்மையாக Face பேக் போட்டால் முகம் எப்போதும் வெண்மை நிறத்தை இழக்காது. அது எப்படி செய்வது முகம் மட்டுமில்லாமல் உடல் முழுவதும் வெண்மையாக என்ன செய்யலாம் வாங்க தெரிந்துகொள்ளாம்.

இயற்கையாக முகம் வெள்ளையாக:

முதலில் வீட்டில் அம்மாக்கள் இட்லி மாவு அரைப்பது பொதுவாக நடக்கூடிய ஒன்று அதில் தான் நாம் கலராக இருக்கக்கூடிய அற்புதமான விஷயம் உள்ளது. இட்லிக்கு மாவு அரைத்தால் முதலில் உளுந்து அரைப்பார்கள். அதேபோல் அந்த உளுந்து மாவு அரைக்கும் போதே அதில் ஒரு கைப்பிடி அளவுக்கு உளுந்தை எடுத்து மிக்சி ஜாரில் போட்டு மாவு பதம் வரும் வரை அரைக்கவும். கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கவேண்டும்.

அரைத்த உளுந்தில் மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் பீட்ருட் சாறு சேர்த்துகொள்ளவும். பீட்ருட்டை தனியாக சாறு பிழிந்துகொண்டு செய்யலாம் இல்லையென்றால். அரைத்து அதில் சேர்த்து கொள்ளலாம்.

பின்பு இரண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை அரிசி மாவாக இருந்தாலும் சரி வேறு அரிசி மாவாக இருந்தாலும் நல்லது தான். அத்தனையும் சேர்த்துக்கொண்டு.

பின் இந்த கலவையுடன் புளிக்காத தயிர் சேர்த்துக்கொள்ளவும். உளுந்த மாவு, பீட்ரூட் சாறு, அரிசி மாவு மற்றும் தயிர் ஆகிய இந்த நான்கு பொருட்களும் நன்கு கலந்து பேஸ்ட் போல செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை முகம் மட்டுமில்லாமல் கை, கால், உடல் முழுவதும் தடவி கொண்டு 10, அல்லது 20 நிமிடம் கழித்து தண்ணீரால் துடைத்து எடுத்துவிட்டால் முகத்தில் கை வைத்தால் முகம் வளுவளுப்பாக இருக்கும். அதேபோல் முகம் மிருதுவாக இருக்கும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil