அக்குள் கருமை நீங்க இது போதும்..! | Underarms Black Removal Home Remedies in Tamil
பொதுவாக பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கழுத்துகே பகுதியில், தொடை பகுதியில் மற்றும் அக்குள் பகுதியில் அதிக கருமையாக இருக்கும். இந்த கருமை மற்ற ஸ்கினுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அதிக கருமையாகவே இருக்கும். குறிப்பாக குண்டாக இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும். இந்த பிரச்சனை வர நிறைய காரணங்கள் இருக்கிறது ஆண், பெண் என்று எந்த ஒரு பாகுபாடும்இன்றி அனைவருக்கும் வரும். சரியான பராமரிப்பு இல்லை என்றால் இது போன்ற கருமை பிரச்சனை ஏற்படும். இந்த கருமையை அகற்ற நிறைய வழிகள் இருக்கிறது. அவற்றை சிலவற்றை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
அக்குள், கழுத்து, தொடை உள்ள கருமை நீங்க குறிப்பு | Akkul Karumai Neenga Tips in Tamil
தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
- தக்காளி – ஒன்று
- அரிசி மாவு – ஒரு ஸ்பூன்
- சர்க்கரை – ஒரு ஸ்பூன்
- காபித்தூள் – ½ ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
பயன்படுத்து முறை:
ஒரு சிறிய பவுலில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ½ ஸ்பூன் மஞ்சள் தூள் மாற்று ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். பின் கருமையாக இருக்கும் இடத்தில் இதனை அப்ளை செய்து வட்ட வடிவில் 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 10 நிமிடம் காத்திருங்கள்.
பிறகு இன்னொரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, சர்க்கரை ஒரு ஸ்பூன், அரை தக்காளி பழத்தின் சாறு, காபித்தூள் ½ ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள், தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். பிறகு இதனை கருமை உள்ள இடத்தில் அப்ளை செய்து அரை தக்காளி பழத்தை கொண்டு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்தாலே போதும் இரண்டு வாரத்தில் கருமை மறைந்து வெள்ளைய காணப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அக்குள் கருமை 5 நிமிடத்தில் சரியாக.. இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!
Underarms Black Removal Home Remedies in Tamil – குறிப்பு 2:
தேவையான பொருட்கள்:
- கோல்கேட் – ஒரு ஸ்பூன்
- பேக்கிங் சோடா – ½ ஸ்பூன்
- அரிசி மாவு – ஒரு ஸ்பூன்
பயன்படுத்தும்:
மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருள்களையும் ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுதுகொள்ளுங்கள். பிறகு அதனை கருமை உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்து பல் துலக்கும் பிரஷை பயன்படுத்து நன்றாக ஸ்கரப் செய்ய வேண்டும்.
இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தாலே போதும் ஒரே வாரத்தில் கருமைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அக்குள் கருமை நீங்க இயற்கை அழகு குறிப்புகள்..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |