தலையில் சொட்டை விழுந்த இடத்தில் இந்த எண்ணெயை தடவுங்க.. அப்பறம் முடி எப்படி வளருதுன்னு பாருங்க ..

Valukkai Thalai Mudi Valara Tips in Tamil

Valukkai Thalai Mudi Valara Tips in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் எல்லாரும் சந்திக்க கூடிய பிரச்சனை முடி உதிர்வது. இந்த பிரச்சனைக்கான தீர்வை தான் பார்க்க போகிறோம். ஆண்கள், பெண்கள் என்று எல்லாருமே சந்திக்க கூடிய பிரச்சனை முடி உதிர்வு. முடி கொஞ்சம் தான் கொட்டுது என்று விட்டால் நாள் ஆக நாள் ஆக அந்த இடம் சொட்டை ஆகிவிடும். இளம் வயதிலே சொட்டை விழுகிறது. முடி உதிராமல் இருப்பதற்கு சத்தான உணவுகளை உண்ண வேண்டும். டென்சன் ஆகாமல் இருக்க வேண்டும். இந்த இரண்டையும் கடைபிடித்தாலே முடி உதிர்வதை தவிர்க்கலாம். இதை எல்லாம் நான் பண்ணி பார்த்து விட்டேன். இருந்தாலும் எனக்கு சொட்டை அப்படியே தான் இருக்கும் என்றால் அதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்.

இதையும் ட்ரை பண்ணுங்கள் ⇒ தலைமுடி வளர்ச்சிக்கு முட்டையை இப்படி பயன்படுத்துங்கள்..!

எண்ணெய் காய்ச்சுவதற்கு தேவையான பொருட்கள்:

  • கற்றாழை ஜெல்
  • தேங்காய் எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • இஞ்சி

ஸ்டேப்: 1

முதலில் கற்றாழையை எடுத்து சீவி அதில் இருக்கும் ஜெல்லை எடுத்து வைக்கவும். அந்த ஜெல்லை நன்கு கழுவி சுத்தமாக எடுத்து வைக்கவும்.

ஸ்டேப்: 2

பிறகு நெல்லிக்காய் அளவிற்கு இஞ்சி எடுத்து கொள்ளவும். பின் அதன் தோலை சீவி சிறியதாக நறுக்கி கொள்ளவும்.

ஸ்டேப்: 3

கற்றாழை ஜெல்லையும், நறுக்கி வைத்த இஞ்சியையும் சேர்த்து அரைக்கவும். தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.

ஸ்டேப்: 4

அடுப்பை பத்த வைக்கவும். அதில் கடாயை வையுங்கள். அதில் 200 மில்லி அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.

ஸ்டேப்: 5

அதில் அரைத்து வைத்த கற்றாழை கலவையை சேர்க்கவும். அடுப்பை குறைந்த தீயிலே கொதிக்க விடவும்.

ஸ்டேப்: 6

நன்கு கொதித்து சுண்டி வரும் நிலையில் மிளகை சேர்க்கவும். 1 நிமிடம் கழித்து கறிவேப்பிலை சேர்க்கவும். கறிவேப்பிலை முடியை கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர உதவி செய்கிறது.

ஸ்டேப்: 7

பிறகு 200 ml ஊற்றிய தேங்காய் எண்ணெய் பாதி குறைந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

எண்ணெய் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி வையுங்கள். நீங்கள் இதை எப்பொழுதும் பயன்படுத்தும் எண்ணெய் போலவே தலையில் தேய்க்கலாம். எண்ணெய் தேய்த்து கொஞ்ச நாளிலே சொட்டை தலையில் முடி வளர்ந்து விடும்.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil