காடு போல முடி வளர வெந்தயம் மட்டும் போதும்..

Advertisement

முடி கருமையாக அடர்த்தியாக வளர

முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றோம். ஆனால் இதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த எண்ணெய்களையும், ஷாம்புகளையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தும் போது முடி வளர்ந்தாலும், நாளடைவில் முடி உதிர்வு பிரச்சனை, ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். அதனால் இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருள் வெந்தயத்தை வைத்து முடியை எப்படி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர வைக்கலாம். வாங்க அது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வெந்தயம் முடி உதிர்வை தடுக்க:

fenugreek hair growth mask in tamil

 

வெந்தயத்தை தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி, வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த பேக்கை தலை முடி முழுவதும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை என்று தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது.

தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளையும் 1 மணிநேரத்தில் வேரிலிருந்து கருமையாக மாற்ற டீ தூளை இப்படி பயன்படுத்துங்கள் போதும்..!

வெந்தயம் முடி வளர:

fenugreek hair growth mask in tamil

வெந்தயம் முடி வளர உதவியாக இருக்கிறது, இதனுடன் தயிர் சேர்ப்பதால் பொடுகு பிரச்சனை மற்றும் முடியை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

முடி தேவையான அளவு வெந்தயத்தை முதல் நாள் இரவே  ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து கொள்ளவும். லேசாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனுடன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி மற்றும் வேர் வரை அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். தலை  குளிக்கும் போது எந்த வித ஷாம்பும் அப்ளை செய்ய தேவையில்லை. இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தவும்.

 வெந்தயம் குளிர்ச்சி தன்மை உடையதால் அடிக்கடி சளி பிடிக்கும் நபர்கள், சைனஸ், வீசிங், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இந்த பேக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.   

ஒரு முட்டை மொத்த வெள்ளை முடியையும் கருப்பாக மாற்றி விடும்..

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement