உச்சி முதல் பாதம் வரை விட்டமின் ஈ மாத்திரையின் அழகு குறிப்பு..!

Advertisement

உச்சி முதல் பாதம் வரை வைட்டமின் ஈ மாத்திரையின் அழகு குறிப்பு..! Vitamin E Capsule Uses for Face in Tamil..!

Vitamin E Capsule Uses for Face in Tamil:- வணக்கம் நண்பர்களே இன்று நாம் வைட்டமின் ஈ மாத்திரையை பயன்படுத்தி சரும அழகை எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் படித்தறிவோம். இந்த வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சரும அழகை மேம்படுத்த பெரிதும் பயன்படுகிறது. சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து நமது சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் கூந்தலின் வளர்ச்சிக்கு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மிகவும் சிறந்து விளங்குகிறது. சரி இந்த விட்டமின் ஈ மாத்திரையை பயன்படுத்தி உச்சி முதல் பாதம் வரை நமது சரும அழகை அதிகரிக்க எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

கூந்தலின் வளர்ச்சிக்கு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் அழகு குறிப்பு / Vitamin E Capsule Uses for Hair in Tamil:-

கூந்தலின் வளர்ச்சிக்கு விட்டமின் ஈ மாத்திரை மிகவும் உதவுகிறது. இப்பொழுது உள்ள லைப் ஸ்டையில் பெண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சனை என்றால் அது முடி உதிர்வு பிரச்சனை தான். அப்படி பட்டவர்கள் இந்த விட்டமின் ஈ மாத்திரையுடன் சில பொருட்களை சேர்த்து கூந்தலில் அப்ளை செய்யும்பொழுது கூந்தலின் வளர்ச்சி தூண்டப்படுகிறது. சரி அதை எப்படி தயார் செய்ய வேண்டும் என்று இப்பொழுது தெரிந்து கொள்வோமா..?

தேவையான பொருட்கள்:-

  1. விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – மூன்று
  2. ஆமணக்கு எண்ணெய் – ஒரு ஸ்பூன்
  3. தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
  4. Peppermint Essential Oil –  2 அல்லது 3 துளிகள்

செய்முறை:-

சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மூன்று மாத்திரைகளை பிழிந்து விடவேண்டும்.

அதன் பிறகு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்றுங்கள். பின் மேல் படத்தில் காட்டியுள்ளது போல் கலந்து வைத்துள்ள எண்ணெய்யை 2 அல்லது 3 நிமிடங்கள் சூடேற்ற வேண்டும்.

பின் அடுப்பில் இருந்து எண்ணெய்யை எடுத்து ஆறவிடுங்கள், எண்ணெய் ஆறியதும் 2 அல்லது 3 துளிகள் எசன்ஷியல் ஆயிலை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

இப்பொழுது முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய எண்ணெய் தயார். இதனை அப்படியே கூந்தலில் அப்ளை செய்யுங்கள். அதாவது கூந்தலின் வேர்ப்பகுதியில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு 1/4 மணி நேரம் காத்திருந்து பிறகு மையில்டு ஷாம்பை பயன்படுத்தி தலை அலசுங்கள். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர வெகு விரைவில் முடி அடர்த்தியாக மற்றும் நீளமாக வளர ஆரம்பிக்கும்.

முகம் வெள்ளையாக விட்டமின் ஈ கேம்ஸ்ட்யூல் / Vitamin E Capsule Uses for Face in Tamil:-

சிலருக்கு சருமம் எப்பொழுது பொலிவிழந்து காணப்படும், மேலும் சருமம் கருமையாக இருக்கும் அப்படி பட்டவர்கள் இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க. அதாவது ஒரு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு, ஒரு விட்டமின் ஈ மாத்திரை மற்றும் ஒரு ஸ்பூன் தேன் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் சருமத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமம் பொலிவாக காணப்படும் மேலும் சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கி வெள்ளையாக மற்றும் கவர்ச்சியாக காணப்படும்.

கருவளையம் நீங்க / Vitamin E Capsule Uses for Dark Circles:-

பொதுவாக அதிகம் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு, தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு, கம்ப்யூட்டரில் வேலை செய்ப்பவர்களுக்கு மற்றும் இரவில் சரியாக தூங்காமல் இருப்பவர்களுக்கு கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். அது சருமத்தின் அழகையே கெடுத்துவிடும். அப்படி பட்டவர்கள் இந்த டிப்ஸை தொடர்ந்து பாலோ செய்து வர குட் ரிசல்ட் கிடைக்கும். அதாவது இரவு தூங்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், ஒரு விட்டமின் ஈ மாத்திரையை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். பின் இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின் மறுநாள் காலை முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு இந்த டிப்ஸை தொடர்ந்து செய்து வர கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் மிக விரைவில் மறைந்து சருமம் அழகாக காணப்படும்.

இதையும் படியுங்கள்–> முகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..!

 

ஓகே ஃப்ரன்ஸ் நான் சொன்ன இந்த மூன்று டிப்ஸும் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம். இந்த பயனுள்ள டிப்ஸினை தங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுக அவர்களும் பயன்பெறட்டும்.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement