ஒல்லியாக வால் போல இருக்கின்ற முடியினை 2 செ.மீ வரை அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் வளர வைக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர

முடி என்பது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் ஒரு தனி அழகினை கொடுக்கிறது. ஆனால் இன்றைய காலத்தை பொறுத்தவரை யாருக்கும் முடி அவ்வளவாக நீளமாகவும் அடர்த்தியாகவும் இருப்பது இல்லை. அதற்கு ஏற்றவாறு யாரும் முடியினை சரியாக பராமரிப்பதும் இல்லை. இப்படியே நாம் விட்டு விட்டால் தலையில் இருக்கும் கொஞ்சம் முடி கூட உதிர்ந்து வழுக்கையாக மாறிவிடும் நிலைமை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. முடியினை எப்படியாவது வளர வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இன்றைய பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி 2 வாரத்தில் 2 செ.மீ வரை முடி நீளமாகவும் மற்றும் அடர்த்தியாகவும் வளர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.

What to Do to Grow Long and Thick Hair Faster Naturally:

அனைவருடைய வீட்டிலும் கிடைக்கக்கூடிய செம்பருத்தி பூ மற்றும் இலையினை வைத்த ஹேர் பேக் தயார் செய்து முடிக்கு எப்படி அப்ளை செய்வது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  • செம்பருத்தி பூ- 10
  • செம்பருத்தி இலை- 1 கைப்பிடி அளவு
  • சாதம் வடித்த தண்ணீர்- 1/2 கப்

இதையும் படியுங்கள்⇒ உங்க முகம் நாள் முழுவதும் பளப்பளப்பாக இருக்க அரிசிமாவுடன் இதை மட்டும் கலந்து போட்டால் போதும்.. 

செம்பருத்தி பூ தலைக்கு:

செம்பருத்தி பூ தலைக்கு

செம்பருத்தி பூவினை கழுவுதல்:

முதலில் எடுத்து வைத்துள்ள செம்பருத்தி பூவில் இருக்கும் காம்பினை நீக்கி விட்டு அதனுடைய இதழ்களை மட்டும் ஒவ்வொன்றாக பிரித்து தண்ணீரில் சுத்தமாக அலசி கொள்ளுங்கள்.

செம்பருத்தி இலையினை கழுவுதல்:

செம்பருத்தி பூவில் இருக்கும் சத்துக்களை போலவே செம்பருத்தி இலையிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.

அதனால் செம்பருத்தி இலையினை எடுத்து சுத்தமான தண்ணீரில் அலசி கொண்டு தனியாக வைத்து கொள்ளுங்கள்.

பவுலில் பொருட்களை சேர்த்தல்:

இப்போது ஒரு பவுலில் அலசி வைத்துள்ள செம்பருத்தி பூ மற்றும் இலையினை சேர்த்து கொண்டு அதனுடன் மிதமான சூட்டில் எடுத்து வைத்த அரிசி வடித்த தண்ணீரையும் சேர்த்து ஒரு 2 நிமிடம் ஊறவைத்து விடுங்கள்.

மிக்சி ஜாரில் பொருட்களை சேர்த்தல்:

கடைசியாக ஒரு மிக்சி ஜாரில் பவுலில் ஊறவைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் முடியின் வளர்ச்சியினை அதிகரிக்க கூடிய ஹேர் பேக்.

தக்காளியுடன் இதை கலந்து போட்டால் போதும் நீங்களே ஆச்சரிப்படும் அளவிற்கு முகம் பளப்பளப்பாகும்..

ஹேர் பேக் அப்ளை செய்தால்:

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர

முதலில் உங்களுடைய தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை முடியின் வேர் வரை படுமாறு நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.

ஒரு 20 நிமிடம் கழித்து வழக்கம் போல தலை குளித்து விடுங்கள். இதற்கு சிறிதளவு மட்டும் ஷாம்பு பயன்படுத்தினால் போதமானது.

இவ்வாறு நீங்கள் வாரம் 2 முறை செய்தால் போது நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முடி நீளமாகவும் மற்றும் அடர்த்தியாகவும் வளர்ந்து இருக்கும். அதோடு மட்டும் இல்லாமல் இந்த கோடை காலத்தில் வரக்கூடிய உடல் சூடும் குறையும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement