3 பொருள் போதும் ஒரே வாரத்தில் வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாறிடும்..!

White Hair to Black Hair Naturally in Tamil

முன்பெல்லாம் 40 வயதிற்கு பிறகு தான் தலையில் ஒருசில நரைமுடி தென்பட்டது.. ஆனால் இபொழுது 20 வயதுடையவர்களுக்கு கூட எளிதில் நரை முடி பிரச்சனை வந்துவிடுகிறது. இந்த நரை முடி பிரச்சனை சிறு வயதிலேயே வருவதற்கு மிக முக்கிய காரணம்.. என்னவென்றால் நமது உடலில் மெலட்டோன் ஹார்மோன் குறைவாக சுரப்பது தான்.. இதற்காக தான் நாம் சிறு வயதில் இருந்தே ஆரோக்கியமான உணவு முறையை மேற்கொள்ள வேண்டும் என்று நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் பரிந்துரைக்கின்றன. இருந்தாலும் அதனை நாம் துளிகூட காதில் கேட்கமாட்டோம். சரி விடுங்கள் யாருக்குத்தான் நல்லது சொன்னால் பிடிக்க போகிறது.. நாம் இப்பொழுது இயற்கையான முறையில் வீட்டிலேயே ஹேர் டை தயார் செய்வது எப்படி? மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • கேரட் பவுடர் – 4 டீஸ்பூன்
  • அவுரி பொடி – 3 ஸ்பூன்
  • டீத்தூள் – 3 ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 பொருள் போதும் 7 நாளில் வெள்ளை முடியை முழுமையாக மாற்றிடலாம்..! கருவேப்பிலை ஹேர் டை..!

ஹேர் டை செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்றாக கொதித்தபின் அதில் 3 ஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும். டீத்தூள் எசன்ஸ் தண்ணீரில் நன்றாக இறங்கிய பின் அடுப்பை அணைத்து மிதமான சூட்டிற்கு டீ டிக்காஷன் வரும் வரை நன்றாக ஆறவைக்கவும்.

மிதமான சூட்டிற்கு வந்தவுடன் டீ டிக்காஷனை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு ஒரு பவுலில் கேரட் பவுடர் 4 ஸ்பூன் (இது ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் கிடைக்கும்) அவுரி பொடி 3 ஸ்பூன் ஆகிவற்றை எடுத்துக்கொள்ளவும்.

பிறகு அவற்றில் டீ டிக்காஷனை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு பவுடரை மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

பின் இந்த பேஸ்ட்டை 10 முதல் 15 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்கவும்.

15 நிமிடம் கழித்து இந்த பேஸ்ட்டை பார்த்தோம் என்றால் ஹேர் டை மேல் உள்ள படத்தில் உள்ளது போல் நன்கு ஒரு அடர்ந்த பிரவுன் நிறத்தில் இருக்கும். அவ்வளவுதான் இப்பொழுது ஹேர் டை தயார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடி கொட்டுவதை நிறுத்தி முடி நீளமாக அடர்த்தியாக 100% வளர இந்த ஹேர் டானிக்

பயன்படுத்து முறை:

ஹேர் டையை பயன்படுத்தும் போது முதல் நாளே தலையை நன்றாக ஷாம்பு போட்டு தலை அலசிவிடுங்கள். பிறகு தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.

பிறகு மறுநாள் இந்த ஹேர் டையை தயார் செய்து தலைக்கு அப்ளை செய்யுங்கள். அப்ளை செய்த பிறகு 1/2 மணி நேரம் வரை காத்திருக்கவும். பிறகு தலைக்கு ஷாம்பு பயன்படுத்தாமல் தலையை நன்றாக அலசிவிடுங்கள். இந்த முறையை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்தாலே போதும். கொஞ்சம் கொஞ்சமாக நரை முடி கருமையாக மாறுவதை நீங்களே உணருவீர்கள்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami