வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எவ்வளவு வெள்ளை முடி வளர்ந்தாலும் கருமையாக மாறுவதற்கு இதை மட்டும் பண்ணுங்க..!

Updated On: March 17, 2023 12:54 PM
Follow Us:
White Hair to Black Hair Naturally in Tamil
---Advertisement---
Advertisement

White Hair to Black Hair Naturally in Tamil

அனைவருக்குமே தலை முடி பிரச்சனை இருக்கும். ஒரு சிலருக்கு நரை முடி பிரச்சனை இருந்துகொண்டு தான் உள்ளது. ஏன் இந்த நரை முடி வருகிறது என்றால் நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்கள் இல்லாமல் இருந்தால் இதுபோன்ற பிரச்சனை வரக்கூடும். இப்படி பட்ட இந்த நரை முடி பிரச்சனைக்கு மிகவும் எளிமையான முறையில் தீர்வு காண்போம்..! இந்த நரைமுடியை நீக்குவதற்கு அதிக செலவுகள் இல்லாமல் ஈஸியான முறையில் எப்படி நரை முடியை கருமையாக மாற்றுவது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

White Hair to Black Hair Naturally in Tamil:

முதலில் கருஞ்சீரகம்  – 2 ஸ்பூன் எடுத்து ஒரு கடாயில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து அதை ஆறவிடவும்.

 white hair to black hair naturally in tamil

அடுத்து ஒரு கைப்பிடி அளவிற்கு கருவேப்பிலை எடுத்து அதனை நன்கு கழுவிக்கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் கருவேப்பிலையை தண்ணீர் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும். அதன் பின்பு அதில் வறுத்து வைத்துள்ள கருஞ்சீரகத்தையும் எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இதன் கூடவே சேர்த்து அரைக்க தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். இப்போது இது மூன்றையும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்வோம். அதில் தண்ணீர் எதுவும் சேர்க்க தேவை இல்லை. அப்படியே தண்ணீர் இல்லாமல் பால் மட்டும் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்வோம்.

அடுத்து ஒரு துணியை வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்வோம். அதன் பின்பு கரிசலாங்கண்ணி பொடியை சேர்த்து கொள்ளவும். உங்கள் முடியின் நீளத்திற்கு தகுந்தது போல் எடுத்துக்கொள்ளவும்.

இப்போது பொடியை வடிகட்டி வைத்துள்ள ஹேர் பேக் இரண்டையும் நன்கு கலந்து எடுத்துகொள்ளவும். இப்பொது நாம் பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

தலையில் எப்போதும் போல் எண்ணெய் வைத்துக் கொள்ளலாம். அதேபோல் உங்கள் முடி முழுவதும் அப்ளை செய்துக் கொள்ளவும். அதன் பின்பு அதில் ஷாம்பு சீயக்காய் சேர்த்து குளிக்கலாம். இதனை தொடர்ந்து செய்து வர உங்கள் முடி அதிகம்  கருமையாக வளரும். அதேபோல் நரை முடி கருமையாக மாறும்.

ஒருமுறை இந்த தேங்காய் எண்ணெயை தடவினால் நரை முடி அனைத்தும் கருப்பாக மாறும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now