பனிக்காலத்தில் ஏற்படக்கூடிய பனி பத்து நீங்க 3 விஷயத்தை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

 பனி பத்து நீங்க | Pani Pathu Treatment in Tamil

கோடைகாலம் வந்தாலும் முகத்திற்கு பிரச்சனை பனிக்காலம் வந்தாலும் முகத்திற்கு பிரச்சனை அதற்கு என்ன செய்வது அனைத்து காலநிலையும் சிலருக்கு ஏற்றுக்கொள்ளும் சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது. கோடைகாலம் வந்துவிட்டால் முகத்தில் சூரிய ஒளி பட்டு முகம் சோர்வடைந்து விடும். அதேபோல் பனிக்காலம் வந்துவிட்டால் முகத்தில் வெள்ளை வெள்ளையாக பனி பத்து வந்து விடும். அதனை போக்குவதற்கு நிறைய கிரீம்கள் கடைகளில் விற்றாலும்  அதனை நாம் பயன்படுத்தும் போது நல்ல ரிசல்ட் கொடுத்தாலும் பிற்காலத்தில் நமக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆகையால் பனி பத்து நீங்க சூப்பரான இயற்கை Face pack பற்றி இங்கு தெரிந்துகொள்ளுவோம்.

Winter Season Face Pack at Home in Tamil:

டிப்ஸ்: 1
santhanam face pack

  1. சந்தனம் –  2 டீஸ்பூன்
  2. கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன்
  3. தேன் – 2 டீஸ்பூன்

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

ஸ்டேப்: 1

முதலில் சுத்தமான சந்தனத்தை 2 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். பின்பு அதனையுடன் கற்றாழை ஜெல் மற்றும் தேன் 2 டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

ஸ்டேப்: 2

இப்போது முகத்தை நன்கு தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்து பின்பு அதனை காட்டன் துணியால் துடைத்து எடுத்துக்கொள்ளவும்.

கடைசியாக நாம் எடுத்துவைத்துள்ள பேஸ்டை முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே ஊற விட்டு அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளவும். அவ்வளவு தான் இதனை தினமும் செய்தால் முகத்தில் பனி பத்து ஏற்படாது முகமும் பளபளப்பாக இருக்கும்.

டிப்ஸ்: 2

kadalai maavu face pack in tamil

  1. கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
  2. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  3. பச்சை பால் அல்லது தயிர் – சிறிதளவு

ஸ்டேப்: 1

ஒரு கிண்ணத்தில் கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும் அதனுடன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும் இது இரண்டையும் கலந்துகொள்ள பச்சை பால் சிறிதளவு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்துவிடவும்.

அதன் பின் இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்யலாம் இது கொஞ்சம் முகத்தில் காய்ந்த உடன் தண்ணீரால் முகத்தை கழுவிடலாம். இதனால் முகத்தை வறண்டு போகாமல் வைக்கும் மேலும் வெயிலில் மூலம் முகத்தில் ஏற்படும் கருமை நீங்கும்.

இதையும் Try பண்ணுங்க 👉👉 வீட்டிலேயே வெள்ளையாக கீரிம் செய்யலாம் அதுவும் இயற்கை முறையில் ..!

டிப்ஸ்: 3

வாழைப்பழம் – பாதி

பச்சை பால் – 1 டீஸ்பூன்

தேன் – 2  டீஸ்பூன்

 winter beauty tips in tamil

ஸ்டேப்: 1

முதலில் ஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்தை சேர்த்து நன்கு மதித்துக்கொள்ளவும், பின்பு அதனுடன் தேன் சேர்த்து கொள்ளவும். இரண்டும் ஒன்று சேர்ந்தவுடன்.

ஸ்டேப்: 2

அதில் பச்சை பாலையும் சேர்த்து மூன்றையும் கலந்துவிடவும். அதனை பின் முகத்தில் அப்ளை செய்துவிட்டு 10 நிமிடத்திற்கு பிறகு கழுவிக்கொள்ளலாம். இந்த மூன்று டிப்ஸ் உங்களுக்கு ஈசியாக இருக்கும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement