அக்ஷய திருதியை பூஜை செய்யும் முறை | Akshaya Tritiya Pooja in Tamil
அட்சயம் என்றாலே மென்மேலும் வளரும் என்பது நமக்கு தெரியும். எப்படி அட்சய பாத்திரத்தில் இருந்து பொருளை எடுக்க எடுக்க சுரக்குமோ அதே போன்று நீங்கள் அட்சய திருதியில் வாங்கும் பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது தான் இல்லத்தில் செல்வ செழிப்பு குறைவில்லாமல் இருக்கும். இந்த நல்ல நாளில் பொருட்களை வாங்குவது மற்றும் கொடுப்பது மட்டுமல்ல கடவுளை வழிபடுவது மிகவும் முக்கியமான விஷயம், அந்த வகையில் இந்த தொகுப்பில் அட்சய திருதியை பூஜை செய்யும் முறையை பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வழிபட வேண்டிய கடவுள்:
- அட்சய திருதியை அன்று நீங்கள் எந்த கடவுளை வழிபடுகிறீர்களோ அந்த கடவுளுக்கு பூஜை செய்வது நல்லது, அதிலும் இந்த நாளில் குலதெய்வ பூஜை மற்றும் பித்ரு பூஜை செய்தால் மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
- இந்த பூஜைகளை தவிர்த்து லட்சுமி குபேர பூஜை கட்டாயம் செய்ய வேண்டும். அட்சய திருதியில் இந்த பூஜை செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும், நல்லது நடக்கும்.
Akshaya Tritiya Pooja Procedure in Tamil:
- நீங்கள் எப்போதும் போல பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். இந்த பூஜை பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது சிறப்பு. வீட்டின் வாசலில் கோலம் இட்டு, இரண்டு விளக்கு ஏற்றி வைத்து கொள்ளவும்.
- பின் சுவாமி அறையில் ஒரு பலகையின் மேல் மஞ்சள் நிற துணியை போட்டு, துணிக்கு மேல் மஞ்சள் நிற அரிசியை பரப்பி ஸ்ரீ சக்கரம் வரைந்து கொள்ளுங்கள். பின் அதில் ஒரு மண்பானை வைத்து அதில் தண்ணீர், பால், சந்தனம், மஞ்சள், குங்குமம், கற்கண்டு, பன்னீர், மல்லிகை பூ, எலுமிச்சை, காசு சேர்க்கவும்.
- அதன் மேல் ஒன்பது மாவிலை காம்பு கீழே இருக்கும்படியாக வைக்கவும். பின்னர் அதன் மேலே மண் தட்டு வைத்து அதில் ஜாதிக்காய், மாசிக்காய், லவங்கம், ஏலக்காய், ஒரு நாணயம், வெள்ளி அல்லது தங்கம், வெற்றிலை, பூ, பாக்கு பழம் வைத்து கொள்ளவும்.
- இரண்டு பக்கவாட்டிலும் குத்து விளக்கு ஏற்றி வைக்கவும், மண் பானைக்கு முன் ஆறு வெற்றிலை, ஆறு எண்ணெய் வைத்து கொள்ளுங்கள்.
- ஒரு தட்டு எடுத்து அதன் மேல் கப் அல்லது டம்ளர் வைத்து கொள்ளுங்கள் அதில் அரிசி, தானியம், சர்க்கரை, உப்பு, நாணயம் போன்றவற்றை வைத்து கொள்ளுங்கள்.
அட்சய திருதியை பூஜை:
- பின்னர் நீங்கள் கடவுளுக்கு செய்த நெய்வேத்தியம் வைக்கவும். தட்டில் பிளவுஸ் பீஸ், வளையல், மஞ்சள், குங்குமம் வைத்து கொள்ளுங்கள்.
- மற்றொரு தட்டில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் வைக்கவும்.
- பின் மஞ்சள் பிள்ளையார் பிடித்து அதில் மேல் அருகம்புல் வைத்து விளக்கு ஏற்றி ஓம் கம் கணபதையே நமஹ என்ற மந்திரத்தை சொல்லி மனதார வழிபடவும்.
- சுவாமிக்கு பூஜை செய்து மகாலட்சுமி மந்திரம், பெருமாள் மந்திரம், குபேர மந்திரம் சொல்லி வழிபடவும்.
- மண்பானையில் ஊற்றிய நீரை மறுநாள் வீட்டில் மாவிலையால் தெளிக்கவும்.
- பானையின் மேல் வைத்திருக்கும் தட்டில் உள்ள பொருட்களை மஞ்சள் துணியில் கட்டி அடுத்த வருடம் வரும் அட்சய திருதியை அன்று தண்ணீரில் போடவும்.
அட்சய திருதியை மந்திரம்:
ஓம்| நமோ பகவதே வாசுதேவாய | தன்வந்திரியே| அமிர்தகலச ஹஸ்தாய|
சர்வ ஆமய நசனாய| த்ரைலோக்ய நாதாய| ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா |
அட்சய திருதியை என்றால் என்ன? |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |