எந்த அபிஷேகம் பார்த்தால் என்ன பலன் கிடைக்கும்..!

Advertisement

அபிஷேகம் பலன்கள்

பொதுவாக கோவில்களுக்கு செல்வது வழக்கம்..! கோவில் என்றால் ஒரு அமைதி கிடைக்கும் என்று அனைவருமே செல்வார்கள். அங்கு சிலர் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை செய்வதற்கு முன் சாமிக்கு அபிஷேகம் நடக்கும் அதனை பார்க்க தான் அவ்வளவு கூட்டம் வரும். என்றால் அந்த அபிஷேகம் பார்த்தால் அவ்வளவு நன்மைகள். சிலர் அந்த அபிஷேகத்திற்காக அவ்வளவு நேரம் கூட காத்திருப்பார்கள். அதில் அவ்வளவு நன்மைகள் உள்ளது. 32 விதமான பொருட்கள் ஏன் அதற்கு மேலும் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வார்கள் அதன் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்வோம்..!

32 அபிஷேக பொருட்கள்:

  1. தண்ணீர்
  2. நல்லெண்ணெய்
  3. பச்சரிசி மாவு
  4. மஞ்சள் பொடி
  5. திருமஞ்சனம்
  6. பஞ்சகவ்யம்
  7. பசும்பால்
  8. பசும் தயிர்
  9. பஞ்சாமிர்தம்
  10. தேன்
  11. நெய்
  12. சர்க்கரை
  13. இளநீர்
  14. கரும்புச்சாறு
  15. நார்த்தம் பழம்
  16. சாத்துக்குடி
  17. எலுமிச்சை
  18. திராட்சை
  19. வாழைப்பழம்
  20. பலாப்பழம்
  21. மாம்பழம்
  22. மாதுளம்பழம்
  23. தேங்காய் துருவல்
  24. திருநீறு
  25. சந்தனம்
  26. பன்னீர்
  27. கும்ப தண்ணீர்
  28. சங்காபிஷேகம்
  29. கோரோஜனை
  30. அன்னம்
  31. பச்சை கற்பூரம்
  32. கஸ்தூரி மஞ்சள்

அபிஷேகம் பலன்கள்:

தண்ணீர் அபிஷேகம் செய்யும் போது பார்த்தால் நம் மனதிலிருக்கும் கெட்டது விலகி நன்மையை அளிக்கும்.

நல்லெண்ணெய் நம் வாழ்வில் சுகத்தை கொடுக்கும்.

பச்சரிசி மாவு அபிஷேகம் பார்ப்பதால் வீட்டிலிருக்கும் கடனை போக்கும்.

மஞ்சள் பொடி அபிஷேகம் பார்த்தால் நல்ல நட்பு ஏற்படும்.

திருமஞ்சனம் அபிஷேகம் பார்த்தால் நமக்கு ஏற்பட்டிருக்கும் நோய் தீர்க்கும் அல்லது நோய் வராமலும் தடுக்கும்.

பஞ்சகவ்யம் அபிஷேகம் பார்ப்பதால் நீங்கள் செய்த பாவங்களை அளிக்கும்.

பசும்பால் அபிஷேகம் பார்த்தால் நீண்ட நாள் வாழும் ஆயுள் கிடைக்கும்.

பசும் தயிர் அபிஷேகம் பார்த்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பஞ்சாமிர்தம்  அபிஷேகம் பார்த்தால் உடலில் பலத்தை தரும்.

தேன் அபிஷேகம் மனதில் சுகத்தை அளிக்கும்.

நெய் அபிஷேகம் பார்த்தால் நல்ல முக்தி அளிக்கும்.

சர்க்கரை அபிஷேகம் பார்த்தால் எதிரியை வெல்ல முடியும்.

இளநீர் அபிஷேகம் பார்த்தால் நல்ல சந்ததி வாய்க்கும்.

கரும்புச்சாறு அபிஷேகம் பார்த்தால் உடலளவில் ஆரோக்கியம் தரும்.

நார்த்தம் பழம் அபிஷேகம் பார்த்தால் மிருத்யு பயத்தை போக்கும்.

சாத்துக்குடி அபிஷேகம் துக்கத்தை போக்கும்.

எலுமிச்சை அபிஷேகம் பார்த்தால் எமனால் ஏற்பட்டிருந்த பயம் நீங்கும்.

திராட்சை அபிஷேகம் பார்த்தால் திட சரீரம் தரும்.

வாழைப்பழம் அபிஷேகம் பார்த்தால் பயிர் செழிக்கும், மகசூல் பெருகும்.

பலாப்பழம் அபிஷேகம் பார்த்தால் மங்களம் உண்டாகும்.

மாம்பழம் அபிஷேகம் பார்த்தால்  செல்வம் பெருகும்.

மாதுளம்பழம் அபிஷேகம் பார்த்தால் கோபத்தை போக்கும்.

தேங்காய் துருவல் அபிஷேகம் பார்த்தால் அரசுரிமை கொடுக்கும்.

திருநீறு அபிஷேகம் சகல நன்மையையும் தரும்.

சந்தனம் அபிஷேகம் பார்த்தால் சுகம் பெருமை சேர்க்கும்.

பன்னீர் அபிஷேகம் சருமம் காக்கும்.

கும்ப தண்ணீர் அபிஷேகம் பார்த்தால் பிறவா பயன் அளிக்கும்.

சங்காபிஷேகம் சர்வ புண்ணியத்தை தரும்.

கோரோஜனை அபிஷேகம் பார்த்தால் நீண்ட ஆயுள் அளிக்கும்.

அன்னம் அபிஷேகம் பெரியோர் மகான் ஆசி கிட்டும்.

பச்சை கற்பூரம் அபிஷேகம் பார்த்தால் பயம் விலகும்.

கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் வெற்றி அளிக்கும்.

கோவிலை பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement