கோவிலை பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்..!

Advertisement

கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்.?

வணக்கம் நண்பர்களே.! இன்றைய கோவில்கள் பற்றிய அறிவியல் காரணத்தை தெரிந்துகொள்வோம். நம் நாடு முழுவதும் பல கோவில்கள் உள்ளன. பெரும்பாலானவர்கள் கோவிலுக்கு விஷேச நாட்களில் செல்லுவார்கள். இன்னும் சில நபர்கள் கஷ்டமாக இருக்கும் போது கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். நீங்கள் கஷ்டமாக இருக்கும் போது கோவிலுக்கு சென்றால் ஒரு புத்துணர்ச்சியுடனும், தெளிவான எண்ணத்தோடும் வருவீர்கள். இதற்கு அறிவியல் ரீதியாக காரணம் உள்ளது. மேலும் கோவில்களை பற்றிய அறிவியல் ரீதியான செய்திகளை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ கோவிலில் மணி அடிப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா..?

கோவில் கட்டிட அமைப்பு:

கோவிலின் கட்டிடம் எப்பொழுதும் காந்த ஈர்ப்பு தன்மை அதிகம் உள்ள இடத்தில் தான் கட்டுவார்கள். அதே போல் கர்ப்ப கிரகரத்திற்கு  சென்று வழிபடுவதால் நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும்.

கோவிலுக்கு செல்வதற்கு முன் காலணிகளை கழட்டி வைப்பது ஏன்.?

கோவிலுக்கு செல்வதற்கு முன் காலணிகளை வெளியில் கழட்டி விட்டு செல்லுவோம். அது ஏன் என்று தெரியுமா.? கோவிலுக்கு உள்ளே செல்லும் போது வெறும் காலுடன் தான் செல்ல வேண்டும். அப்போது தான் நேர்மறை ஆற்றல்கள் நமது பாதத்தின் வழியாக உடம்பிற்கு செல்லும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கோவிலுக்கு நகை அணிந்து செல்ல காரணம்:

கோவிலுக்கு செல்லும் பெண்கள் தங்க நகை அணிந்து செல்வார்கள். இதற்கு பின்னடியும் அறிவியல் காரணம் இருக்கின்றது. ஏனென்றால் தங்கத்தில் நேர்மறை ஆற்றல் அதிகம் இருக்கின்றது. அதனால் தான் கோவிலின் கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும்.

கோவிலை சுற்றி வருவதற்கு காரணம்:

கோவிலை சுற்றி வரும் போது உடலுக்கு முழுமையாக நேர்மறை ஆற்றல் கிடைக்கும். அதனால் தான் கடவுளை வழிப்பட்ட பிறகு சுற்றி வர சொல்கிறார்கள்.

கடவுளுக்கு அபிஷேகம் செய்வது ஏன்.?

கோவில்களில் உள்ள சிலைகள் நாட்கள் ஆக ஆக சிலையின் மீது வெடிப்பு ஏற்படும். குங்குமம், மஞ்சள், பஞ்சாமிர்தம், பால் போன்ற இயற்கையான பொருட்களை பயன்படுத்தி அபிஷேகம் செய்வதினால் சிலையின் மீது ஏற்படும் விரிசல் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

கோவிலின் சிலை உயரமாக இருப்பது:

நீங்கள் எல்லோரும் கவனித்திருப்பீர்கள். அனைத்து ஊர்களில் இருக்கும் கோவில்கள் வீடுகளை விட பெரிதாக இருக்கும்.  எதனால் இப்படி கட்டுகிறார்கள் என்றால் மின்னல் வந்தால் உயரமான கோவிலின் கோபுரத்தை தான் முதலில் தாக்கும். அந்த கோபுரத்தில் தானிய வகைகள் நிறைய சேர்க்கப்பட்டிருக்கும். அதில் உள்ள நெல்லானது மின்னலை உள்வாங்கி பூமியின் தரை பகுதிக்கு செலுத்தி விடும். இதனால் தான் கோவிலை உயரமாக கட்டுகிறார்கள்.

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts

 

Advertisement