ஆன்மிக தகவல்கள் – சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் தெரியுமா???

ஆன்மிக தகவல்கள்

ஆன்மிக தகவல்கள் – சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் தெரியுமா???

ஆன்மிக தகவல்கள் – காலம் காலமாக இந்து மதத்தினர்கள் தங்களது வீட்டில் நடைபெறும் சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் என்று தெரியுமா…?

சரி அதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

இதையும் படிக்கவும் ஆன்மிக தகவல்கள் – தமிழ்நாட்டில் உள்ள சக்தி வாய்ந்த 28 சிவன் கோவில் விவரங்கள்..!

ஆன்மிக தகவல்கள் – சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் தெரியுமா ???

முனை முறியாத அரிசி தான் அட்சதை, நல்ல மங்களங்களை நல்குவது மஞ்சள். அது சென்றடைய ஒரு ஊடகம் தேவை. அதுவே அரிசி இந்த இரண்டையும் இணைக்கும் இணைப்பான் பசு நெய், இது கோமாதாவின் திரவியம்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு கீழ் விளையும் பொருள் மஞ்சள், இந்த இரண்டையும் இணைக்க தூய பசு நெய் தேவை.

சற்றே யோசித்தால் இயற்கையில், மணமக்களை வாழ்த்தும் பொழுது, மணமக்கள் இரு மாண்பினர் வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள், ஒருமித்து வாழத்தக்கவர்கள் அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர் இதுவே தத்துவம்.

இதையும் படிக்கவும் வியாபாரம் செழிக்க வாஸ்து வழிமுறைகள்…!

 

ஆகவே உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும் பொழுது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவதே சரியான முறையாகும்.

மொத்தமாக மாங்கல்ய தானம் செய்யும் பொழுது தூவி வாழ்த்துவது நன்மையான பலன்களை, அதிகம் வழங்குவது இல்லை என்பது சாஸ்திர உண்மை.

மேலும் தமது வாரிசுகள் புதிதாக தொழில் துவங்கும் பொழுதும் சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும், குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும், மஹா லக்ஷ்மி பரிபூரண சக்தி கொண்ட நெய்யினை கலந்து, உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் அவர்களை ஆசி வழங்கும் பொழுது அந்த புதியதாக துவங்கப்பட்ட தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய முன்னேற்றத்தை வாரி வழங்கும் என்பது சாஸ்திர உண்மை.

இந்த அமைப்பில் அமையும் திருமணம், தொழில்கள் மற்றும் சுபகாரியங்கள் அனைத்தும் வெற்றிமேல் வெற்றி பெற்று, சகல நலன்களையும் அடையும் என்பது உண்மை.

இதையும் படிக்கவும் ஆன்மிக தகவல்கள் – மதுரை அருள்மிகு அழகர் கோவில் தல வரலாறு மற்றும் சிறப்புகள்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com