பணம் அதிகரிக்க கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வையுங்கள்
இன்றைய கால கட்டத்தில் பணம் என்பது மனித வழக்கில் மிக மிக முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டது. காரணம் அனைவரது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் அவசியமாகிவிட்டது. இத்தகைய பணம் உங்கள் வீட்டில் வற்றாத அளவிற்கு இருக்க கல் உப்பு ஜாடியில் நீங்கள் ஒரே ஒரு பொருளை வைத்தால் போதும். உங்கள் வீட்டில் பணம் வரவு அதிகரிக்கும், கடன் தொல்லை நீங்கும், குறிப்பக வீண் செலவுகள் குறையும். உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்து இருக்கும். சரி வாங்க கல் உப்பு ஜாடியில் எந்த பொருளை வைத்தால், செல்வம் அதிகரிக்கும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
பணம் அதிகரிக்க கல் உப்பு பரிகாரம்:
- உப்பு என்பது மகாலட்சுமியின் வடிவம் ஆகும். இதன் காரணமாக தான் வீட்டு கிரகப்பிரவேசம் நடைபெறும் போது கல் உப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த கல் உப்பை வைத்து வீட்டில் பணம் வரவை அதிகரிக்க ஒரு ஆன்மிக குறிப்பை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
- இந்த ஆன்மிக குறிப்பிற்கு உப்பை மண் பானை, அல்லது பீங்கான் பாத்திரத்தில் மட்டும் தான் வைக்க வேண்டும். வேறு எந்த பாத்திரத்தை பயன்படுத்தினாலும் இந்த ஆன்மிக குறிப்பு பலிக்காது.
- குறிப்பாக அந்த பாத்திரம் குறைந்தது மூன்று கிலோ கல் உப்பையாவது பிடிக்கும் அளவுக்கு அந்த கல் உப்பு ஜாடி இருக்க வேண்டும்.
- ஒன்பது கொட்டைப்பாக்கை வாங்கி கொள்ளுங்கள். இந்த கொட்டைப்பாக்கை அப்படியே சாமி அறைக்கு எடுத்து சென்று, சாமியிடம் வைத்து மனமார வணக்க வேண்டும்.
- பிறகு மஞ்சள் அல்லது சிவப்பு நிற துணியில் இந்த கொட்டைப்பாக்கை வையுங்கள், பின் அதனுடன் ஒரு கிராம் வெள்ளி காசி, ஐந்து ரூபாய் அல்லது 10 ரூபாய் காசை வைக்க வேண்டும். அடுப்பில் சிறிய தூண்டி உள்ள தங்கம் ஏதோ ஒன்று (மூக்குத்தியோ, திருகாணியோ) ஏதோ ஒன்று அத்தனையும் அவற்றில் வைத்து சிறிய முறையாக கட்டிக்கொள்ளுங்கள். (தங்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை)
- இந்த முட்டையை கல் உப்பு ஜாடியின் அடியில் வைக்க வேண்டும். பின் அவற்றில் உப்பை நிரப்பி சமையலையில் வைத்து எப்பொழுதும் போல் கல் உப்பை சமையலுக்கு பயன்படுத்துங்கள். ஜாடியில் உப்பு குறைய குறைய உப்பை நிரப்பி கொள்ளுங்கள்.
- இவ்வாறு செய்து மட்டும் பாருங்கள் சில நாட்களிலேயே பணம் சம்பந்தமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடன் பிரச்சனைகள் ஒளியும், வீட்டில் பணம் வரவு அதிகரிக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |