தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் வரலாறு..! Airavatesvara temple history in tamil..!
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் வரலாறு (Darasuram temple special):- தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்து சிவன் கோவில் தான் தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) ஆகும். இந்த சிவன் கோவில் இரண்டாம் ராஜராஜனால் 12 நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இக்கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து, அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
சரி இந்த பதிவில் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் வரலாறு (Airavatesvara temple in tamil) மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் சிறப்புகள் பற்றி இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க.
Thanjai periya kovil in tamil |
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் சிறப்பு / Airavatesvara temple in tamil:
Airavatesvara temple in tamil:- சிற்பங்கள் நிறைந்த கோயில், அதாவது சோழர் மன்னர்களில் 2-ம் ராஜராஜனால் கட்டப்பட்ட மிகவும் அழகிய கலைக்கூடம் இக்கோயில். இந்த கோவிலை சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.
தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும் நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களாகும்.
தேர் போன்று வடிவிலமைந்த மண்டபம் என பல சிற்ப கலைப் படைப்புகள் இக்கோயிலில் நிறைந்துள்ளது.
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் அமைப்பு / Airavatesvara temple in tamil:
இந்த தலம் முழுவதும் முற்றிலும் வித்தியாசமாக மற்றும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் அமைக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். இக்கோயில் கருவறை விமானம் ஐந்து நிலை மாடங்களுடன் 80 அடி உயரம் உள்ளது.
இக்கோயில் அர்த்த மண்டபம், முகமண்டபம், இராஜகம்பீர மண்டபம், கருவறை மண்டபம் எனும் நான்கு மண்டபங்களைக் கொண்டது. அடிப்பகுதி, தூண்கள் மற்றும் விதானங்களில் மூன்று பகுதிகளாகச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
அவற்றில் நடனக்காட்சிகள், போர்க்காட்சிகள், மதநிகழ்வுகள், ரிஷிகள், விலங்குகள், கற்பனை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கருவறை மண்டபத்தின் வெளிபுறச் சுவர்களில், கீழிருந்து மேற்புறம் வரை சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றின் நடுப்பகுதியிலேயே 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுவாரை தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் அமைப்பு பற்றி தெரிந்து கொண்டும் இப்பொழுது தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் வரலாறு பற்றி படித்தறிவோமா?
Palli Vilum Palan..! பல்லி விழும் பலன்..! Palli Vizhum Palan..! |
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் வரலாறு / Darasuram temple special in tamil:-
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் வரலாறு / Airavatesvara temple in tamil:- இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜேச்சுரம் என்று பெயரிடப்பட்டு. பின் தாராசுரம் என்று அழைக்கப்படுகிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி.
இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கின்ற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது.
தன் நிறம் மாறியதால் வருத்தம் அடைந்த ஐராவதம் இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால் தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று என்று தல புராணம் தெரிவிக்கிறது. இக்கோயிலுக்குள் காணப்படும் இந்திரன் அமர்ந்திருக்கும் ஐராவதத்தின் சிலை இக்கூற்றுக்குச் சான்றாக உள்ளது.
எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் “எமதீர்த்தம்” என அழைக்கப்படுகிற்து.
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் வரலாறு / Airavatesvara temple in tamil:- இத்திருத்தலம் தொடர்பான மற்றொரு புராணமும் உள்ளது. மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது.
இதுவரை தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் வரலாறு பற்றி தெரிந்து கொண்டோம் இப்பொழுது தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் (Airavatesvara temple in tamil) கட்டிடக்கலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Darasuram temple special – கட்டிடக்கலை:
ஐராவதேசுவரர் கோயில் திராவிட பணியில் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவிலமைந்த கரக்கோயில் என்ற வகையைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் காணப்படுகின்றன.
தஞ்சை பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீசுவரம் இந்த இரண்டு கோவிலை விட சிறிய கோவிலாக இருந்தாலும், இக்கோயில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது.
கோயிலின் முதன்மை நுழைவாயில் கிழக்குப்புறத்தே அமைந்துள்ளது. கோயில் விமானம் 24 மீ (80 அடி) உயரங்கொண்டது. இக்கோயிலின் கருவறையைச் சுற்றி உட்சுற்றுப்பாதையும் ஒருகோட்டச்சு மண்டபங்களும் அமைக்கப்படவில்லை. முன் மண்டபம் ராஜகம்பீரன் திருமண்டபம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.
முன் மண்டபத்தின் தென்பகுதி கல்லாலான சக்கரங்களுடன் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் தேர் வடிவிலுள்ளது. இம்மண்டபத்தின் தூண்கள் நுட்பமான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன.
Darasuram temple special – பிராத்தனை:-
சாப விமோசனம் கிடைக்க, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இந்த ஆலயத்திற்கு வந்து பிராத்தனை செய்கின்றனர்.
Airavatesvara temple in tamil – நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேயம் செய்து, புது வஸ்த்திரம் சார்த்தி பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
Airavatesvara temple in tamil – ஆலயம் திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல், 12 மணி வரை ஆலயம் திறக்கப்படும். பின் மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஆலயம் திறக்கப்படும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |