அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் சிறப்புகள்..!

Shiva Temple

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சிறப்பு:

அருள்மிகு அண்ணாமலையார் கோயில் சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்தலத்தில் சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி ஸ்தலமாக (Shiva Temple) விளங்குகிறது இந்த ஸ்தலம்.

மேலும் இந்த ஸ்தலத்தை திரு அண்ணாமலையார் என்றும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

இத்தல வரலாறு:

பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் எழ, இடையில் சிவபெருமான் நெருப்பு பிழம்பில் தோன்ற உங்களில் யார் எனது அடியையும், முடியையும் கண்டறிபவரே அவர்களே பெரியவரென உரைத்தார்.

எனவே அடியை காண திருமால் வராக (பன்றி) வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்று பல ஆண்டுகள் பயணம் செய்தும் அடியை காண இயலாமல் திருமால் திரும்ப சென்று, சிவனிடம் அடியை காண முடியவில்லை என்று திருமால் சிவபெருமானிடம் ஒத்துக்கொண்டார்.

அடுத்ததாக அன்னப்பறவையாக பிரம்மன் உருவெடுத்து சிவபெருமானின் முடியை காண சென்றார் பல ஆண்டுகள் பயணம் செய்து முடியை காண முறியவில்லை என்று பிரம்மாவும் திரும்பி வந்து பிரம்மா தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம் தான் தங்களது முடியை கண்டதாக சொன்னார்.

பிரம்மா உரைத்தது பொய் என்று அறிந்த சிவபெருமான்.உனக்கு பூமியில் கோயில்களும், பூஜைகளும் கிடையாது என்று பிரம்மாவை சபித்தார். விஷ்னு பொய் சொல்லாததால் உனக்கு பூமியில் கோயில்களும், பூஜைகளும் நிகழும் என்று வரம் அளித்தார்.

பொய் உரைத்த தாழம்பூவை தன்னை தீண்டக்கூடாது என்று சபித்தார். இந்த காரணமாகத்தான் இன்று வரை சிவ ஸ்தலங்களில் (Shiva Temple) மட்டும் தாழம்பூவை படைக்கமாட்டார்கள்.

பிரம்மர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் அவருக்கு வழிபாடு நிகழ்வதற்காகவும், திருமாலால் தனது அடியை கண்டறிய இயலாததால் திருமாலை சிறியவரென உரைப்பார்களென்பதால் கருணாமூர்த்தியான சிவன் உடனே நாம்மூவரும் ஒருங்கிணைந்து சிவலிங்கமாகலாமென உரைத்தார்.

அதன்படியே அடிபாகம் பிரம்மராகவும், நடுப்பாகம் திருமாலாகவும்,மேல்பாகம் சிவனாக மாறி வேதங்கள் புகழும் சிவலிங்கம் தோன்றிய நாளே மகா சிவராத்திரி நாளாகும்.

இத்தலத்தின் சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், லிங்கமே மலையாக அமைந்த மலை தென்னிந்தியாவிலேயே 2-வது, உயரமான கோபுரம் (217 அடி) கொண்ட மிகவும் அழகு கொண்ட (Shiva Temple) ஸ்தலம்.

இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும்.இது ஏகத்தை குறிக்கும். மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும் இது அர்த்தநாரீசுவரை குறிக்கும்.

மலையின் பின்னால் மேற்கு திசையில் இருந்து பார்த்தால் மூன்றாக தெரியும். இந்த மலை மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலையை சுற்றி முடிக்கும் பொது ஐந்து முகங்கள் காணப்படும்.

அது சிவபெருமானின் திருமுகத்தை குறிக்கிறது. முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும், இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்குகிறது. இத்தலத்தின் கிளிக்கோபுரத்தின் கீழ் பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.

நேர்த்திக்கடன்:

அண்ணாமலையரிடம் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை மொட்டை அடித்து, முடி காணிக்கை செய்கின்றனர், குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி போடுகின்றனர், இறந்தவர்களுக்கு மோட்சம் தீபம் ஏற்றுகின்றனர், தானியங்கள், எடைக்கு எடை நாணயம், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

சிறப்பு பூஜை:

சிவபெருமானுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் அதாவது அபிஷேக ஆராதனைகள் நடத்துகின்றனர்.

சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் தினமும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

பிராத்தனைகள்:

இத்தலத்தில் மனத்துயரங்கள் நீங்கி, கேட்கும் வரங்களை எல்லாம் அருளும் அருணாசலேஸ்வராக உள்ளார்.

கல்யாணம் வரம், குழந்தை வரம், வியாபாரத்தில் விருட்சம் பெற, உத்தியோகத்தில் உயர்வு பெற, வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று அனைத்து பிராத்தனைக்கு ஈசனிடம் முறையிட்டாள் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் அயராத நம்பிக்கையாக விளங்குகிறது.

திருவண்ணாமலை கிரிவலம்:

சித்திரை மாதம் கிரிவலம் வந்தால், தான தர்மம் செய்த பலன் கிடைக்கும்.

வைகாசி மாதம் கிரிவலம் வந்தால், செய்த பாவங்கள் தொலையும்.

ஆனி மாதம் கிரிவலம் வந்தால் உடல் ஆரோக்கியம் பலப்பட்டு நீண்ட ஆயுள் அடையலாம்.

ஆடி மாதம் கிரிவலம் வந்தால், உடற்பிணிகள், உள்ளப் பிணிகள் எல்லாம் விலகும்.

ஆவணி மாதம் கிரிவலம் வந்தால் சுபிட்சம் பொங்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறலாம்.

புரட்டாசி மாதம் கிரிவலம் வந்தால் சத்ரு நாசமடைவர். கேட்பது கிடைக்கும்.

ஐப்பசி மாதம் கிரிவலம் வந்தால் பட்டம், பதவி, புகழ், கீர்த்தி வந்தடையும்.

கார்த்திகை மாதம் கிரிவலம் வந்தால் அளவிட முடியாத சுக போகங்கள் கிட்டும். தலைமை தானாக வந்தடையும்.

மார்கழி மாதம் கிரிவலம் வந்தால் பதினாறு பேறும் பெற்று பெரு வாழ்வு கிட்டும்.

தை மாதம் கிரிவலம் வந்தால் செய்த பாவங்கள், தீவினைகள் நீங்கி நற்பயன்கள் தொடங்கும்.

மாசி மாதம் கிரிவலம் வந்தால் செல்வம் பெற்று கீர்த்தியுடன் வாழ்வர்.

பங்குனி மாதம் கிரிவலம் வந்தால் ஞானம் பெற்று மகானாய்த் திகழ்வர்.

சிவராத்திரி அன்று, தீபாவளி அன்று, கார்த்திகைத் தீபநாள் அன்று, வருடப்பிறப்பு அன்று அண்ணாமலையைக் கிரிவலம் வருபவர்கள் கோடிப் பங்கு அதிகப் பலனைப் பெறுவர்.

பவுர்ணமி அன்று அண்ணாமலையைக் கிரிவலம் வரும் பக்தர்களின் துயரங்கள் யாவும் தூள் தூளாகிச் சொல்லாமல் விலகும். ஒளி மிகுந்த எதிர்காலம் கண்களுக்குப் புலப்படும்.

தினந்தோறும் அண்ணாமலையைக் கிரிவலம் வருவோருக்கு கிடைக்கும் நன்மைகள் அளவிட முடியாது. அவர்களுக்கு இந்திர யோகம் கிடைக்கும்.

அண்ணாமலையைக் கிரிவலம் வரும் பக்தப் பெருமக்கள் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக் கிரிவலம் வந்தால் அவர்களது கஷ்டங்கள் கணப்பொழுதில் விலகும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE