தை அமாவாசை 2022 தேதி – Thai Amavasai Date
நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாள் அமாவாசை. இந்த தை அமாவாசை வரும் 31 ஆம் தேதி அதாவது 31.01.2022-ஆம் தேதி வருகிறது. இந்த நாள் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன் மூலம் நமது முன்னோர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று இந்து மதங்களில் நம்பப்படுகிறது. பித்ருகளுக்கு தர்ப்பணம் பூஜை செய்யாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். எனவே வரும் தை அமாவாசை நாளில் நாம் மறக்காமல் தர்ப்பணம் அளிக்க வேண்டும். சரி இந்த பதிவில் தை அமாவாசை அன்று என்ன செய்யலாம் என்பதை பற்றி படித்தறியலாம் வாங்க.
தை அமாவாசை 2022 எப்போது?
2022ல் தை அமாவாசை தை 18-ம் தேதி (ஜனவரி 31) திங்கட்கிழமை வருகிறது.
ஜனவரி 31ம் தேதி பிறபகல் 1.59 மணிக்கு அமாவாசை திதி தொடங்கி பிப்ரவரி 1ம் தேதி 12.02 வரை உள்ளது. அதனால் ஜனவரி 31ம் தேதி முழுவதும் முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுக்கலாம். பூஜை, பரிகாரத்திற்கு ராகு காலம், எமகண்ட காலத்தைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.
ஏன் முன்னோர்களை வணங்க வேண்டும்?
ஒருவர் தன் பெற்றோருக்கும், தன் முன்னோர்கள், குல தெய்வத்தையும் வணங்காவிட்டால், அவர்கள் மற்ற தெய்வங்களை வணங்கி பலனில்லை.
அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த முன்னோர்களை தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டிய முக்கிய திதி தான் அமாவாசை. ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதியில் நாம் விரதமிருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும், பெற்றோரை இழந்தவர்கள் தை, ஆடி, மகாளய அமாவாசை தினத்திலாவது நாம் விரதமிருந்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது அவசியம்.
உங்களால் முடிந்த வரை அன்னதானம் செய்வதும், எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து வயிறு நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசி கிடைக்கும்
தை அமாவாசை சிறப்புகள்
முன்னோர்களை வழிபட்டால் என்ன பலன்:
தை அமாவாசையில் வீட்டைசுத்தம் செய்து, வாசலில் கோலம் போடாமல் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.
தை அமாவாசை தர்ப்பணம் செய்வது எப்படி?
அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது. தர்ப்பணம் அளிப்பவர்களின் வீட்டில் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? |
அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடும் அர்க்கியம் செய்வது மிகுந்த நன்மை தரும். கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளையும் பூரணமாக பெறலாம். முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர் என்று சொல்வார்கள். அவர்களுக்கு செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் சூரியன் வழங்குகிறார். அந்த தேவதைகள் மறைந்த முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன என்பது ஐதீகம்.
அமாவாசை நாட்கள் நேரம் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |