எப்பேர்ப்பட்ட ஏழை கூட பணக்காரராக மாற்றும் வசம்பு..! பணம் பெருக வசம்பை உங்கள் வீட்டில் இப்படி வையுங்கள்..!

Advertisement

வீட்டில் செல்வம் பெருக வசம்பு பரிகாரம் | Vasambu Pariharam

பணம் சேர வசம்பு பரிகாரம் – அனைத்து நண்பர்களுக்கும் அன்பான வணக்கம்.. இன்றிய கால கட்டத்தில் பணம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த பணம் இருந்தால் மேட்டுமே நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். இத்தகைய பணம் நமது வீட்டில் அதிகம் பெருக ஒரு அருமையான ஆன்மிக டிப்ஸை பற்றி தான் பார்க்க உள்ளோம். அதாவது பெயர் சொல்லாத பொருள் என்று சொல்லப்படும் வசம்பை வைத்து ஒரு ஆன்மிக தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். வசம்பு பொதுவாக நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய பொருள். ஆக இந்த வசம்பை நமது வீட்டில் குறிப்பிட்ட இடங்களில் வைப்பதன் மூலம் பணம் வரவையும் அதிகரிக்க முடியும் மற்றும் நமது வீட்டிலும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கலாம். சரி வாங்க பணம் மற்றும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க வசம்பை எங்கெல்லாம் வைக்கலாம் என்பதை பற்றி இப்பொழுது இப்பொழுது பார்த்துவிடலாம்.

பணம் சேர வசம்பு பரிகாரம்:

No: 1

நாட்டு மருந்து கடைகளில் அதிகளவு கிடைக்ககூடிய பொருட்களில் ஒன்று தான் இந்த வசம்பு. இந்த வசம்பை நாட்டு மருந்து கடைகளில் தேவையான அளவு வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு அதனை முதலில் உங்கள் வீட்டு சமையறையில் உள்ள உப்பு ஜாதியின் அடிப்பகுதியில் வைத்து பிறகு அதன் மேல் கல் உப்பை நிரப்பிவிடுங்கள், இவ்வாறு செய்வதினால் வீட்டில் நல்ல ஆற்றல்கள் அதிகரிக்கும். பணம் வரவும் அதிகரிக்கும்.

No: 2

பிறகு பணம் வைக்கும் இடங்களில் இந்த வசம்பை வைக்கலாம், அதாவது மணிபர்ஸ், ஹேண்ட் பேக், பிரோல் போன்ற இடங்களில் இந்த வசம்பை வைக்கலாம். இப்படி வைப்பதினால் செல்வவளம் அதிகரிக்கும்.

No: 3

திருமணம் பெண்கள் கண்டிப்பாக வருடங்களுக்கு ஒரு முறையாவது தங்களது தாலிக்கயிறு நிச்சயம் மாற்றுவீர்கள். அப்பொழுது அந்த தாலிக்கயிறில் சிறிய அளவிலான வசம்பை வைத்து இறுக்கமாக கட்டி தாலிக்கயிற்றின் வலது புரம்வரம்படி கட்டிக்கொள்ளுங்கள், பிறகு அந்த தாலிக்கயிற்றை உங்கள் கழுத்து கட்டிக்கொள்ளுங்கள். இப்படி செய்வதினால் உங்கள் கணவரின் ஆயுள் அதிகரிக்கும், மாங்கல்யம் வலுப்பெறும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

No: 4

சிறிய அளவில் உள்ள ஒரு வசம்பு துண்டை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றை பூஜை அறையில் உள்ள விளக்கில் ஒரு பகுதியை மட்டும் எரித்துக்கொள்ளுங்கள், பிறகு அந்த எரித்தபகுதியை அந்த விளக்கில் உள்ள எண்ணெயிலேயே நனைத்து எடுத்துக்கொள்ளுங்கள், இப்பொழுது அவற்றில் இருந்து மைபோல் வரும் அவற்றை உங்கள் நெற்றியில் வைத்துக்கொள்ளலாம், அல்லது உங்கள் உச்சந்தலையில் வைத்துக்கொள்ளலாம். இப்படி செய்வதினால் உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகி, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 பணம் பெருக தண்ணீரை இப்படி செலவு பண்ணுங்க.. பணம் ஆறாக உங்கள் வீட்டில் பெருகும்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement