பன்றி வாகனத்தில் மோதினால் என்ன பலன் தெரியுமா.?

Advertisement

பன்றி வாகனத்தில் மோதினால் என்ன பலன் | பன்றி மீது வாகனம் மோதினால்

ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவு வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது நாம் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்ப்பதா விதமாக பன்றி மீது வாகனம் மோதிவிட்டால் அந்த வாகனத்தை உடனே விற்றுவிட வேண்டுமா? அல்லது அந்த வாகனத்தை பயன்படுத்தலாமா?, பலர் பன்றி வாகனத்தில் மோதிவிட்டால் உடனே விற்றுவிட வேண்டும் என்று கூறுகிறார்களே அந்த விஷயத்தை செய்வது சரியா என்று பல குழப்பங்கள் இருக்கும்.

அதற்கு தீர்வு அளிக்கும் வகையில் இந்த பதிவு இருக்கும். சரி வாங்க பன்றி வாகனத்தில் மோதினால் அந்த வாகனத்தை விற்க வேண்டுமா? அல்லது வேண்டாமா என்பதை பற்றி இப்பொழுது படிக்கலாம்.

பன்றி வண்டியில் மோதினால் வாகனத்தை விற்க வேண்டுமா? | Pandri Vaganathil Mothinal Enna Palan:

  • பொதுவாக பன்றி என்பது இந்தியாவை பொறுத்தவரை பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரமாக பன்றி கருத்தப்படுகிறது. ஆனால் ஜைனாவில் பன்றியை ஒரு துரதிருஷ்ட ஒன்றாக பார்க்கப்படுகிறது.
  • பன்றியை பார்த்தாலோ அல்லது அதன் மீது ஏதாவது மோதிவிட்டாலோ அந்த பொருள் துரதிருஷ்ட பொருளாக பார்க்கப்படுகிறது. ஆக அந்த விஷயத்தை நாமும் பின்பற்றுகிறோம்.
  • பன்றி வாகனத்தில் மோதிவிட்டால் நமக்கு ஒருசில பாதிப்புகள் ஏற்படும், அதாவது பன்றி மீது மோதிய வாகனத்தை நாம் மீண்டும் பயன்படுத்தினோம் என்றால் நமக்கு அது பெரிய நஷ்டங்களை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். அது என்ன நஷ்டங்கள் என்று இப்பொழுது பார்க்கலாம்.
  • நமக்கு அசுப விரயங்கள் ஏற்படும், மன அழுத்தங்களுக்கு நாம் அதிகளவு பாதிக்கப்படுவோம் இது போன்று பல பாதிப்புகள் ஏற்படும்.
  • ஆக நாம் அந்த வண்டியை விற்றுத்தான் ஆக வேண்டும். அதாவது அந்த வண்டியை நன்கு சுத்தம் செய்து வாட்டர் சர்விஸ் செய்து சிவன் அல்லது பொருமல் கோயிலுக்கு சென்று அந்த வண்டிக்கு ஒரு பூஜை செய்துவிட்டு பிறகு யாரிடமாவது விற்றுவிடுங்கள். வண்டியை அப்படியே விற்றுவிட கூடாது, ஏன் என்றால் வண்டியை வாங்குபவர்களும் அதனை பயன்படுத்துவார்கள் ஆக அவர்களும் நன்றாக இருக்க வேண்டும். எனவே வண்டியை அப்படியே விற்று விடாமல் சுத்தம் செய்துவிட்டு ஒரு பூஜை செய்து மற்றவர்களிடம் விற்றுவிடுங்கள்.
  • மீறி அந்த வண்டியை நீங்கள் பயன்படுத்தினால் அது உங்களுக்கு துரதிஷ்டமான  பலன்களை தான் உங்களுக்கு வழங்கும் ஆக அதன் வண்டியை உடனே மாற்றிவிடுங்கள். இதுவும் ஒரு சகுன சாஸ்த்திரங்களில் ஒன்று தான்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
வாகனங்களில் போகும் பொழுது நாய்கள் துரத்துவதற்கான காரணம் என்ன தெரியுமா.?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement