பழனி முருகனுக்கு செய்யும் அலங்காரம் மற்றும் அதனுடைய நேரம் தெரியுமா.?

Palani Murugan Alangaram in Tamil 

பழனி முருகன் அலங்காரம் வகைகள் | Palani Murugan Alangaram in Tamil 

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் பழனி முருகனின் அலங்காரம் வகைகள் மற்றும் நேரத்தை பற்றி காணப்போகிறோம். ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. திருப்பதி என்றால் லட்டு, திருநெல்வேலி என்றால் அல்வா என்று அனைவரும் அறிந்தது. அந்த வகையில் பழனி என்றால் நினைவுக்கு வருவது பஞ்சாமிர்தம் தானே. பஞ்சாமிர்தம் என்று சொன்னவுடன் உமிழ் சுரக்கிறதா.! பஞ்சாமிர்தம் என்றால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா. ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு அலங்காரங்கள், நேரங்கள் என்று இருக்கும். அந்த நேரத்தில் தான் அலங்காரங்களை செய்வார்கள். பழனி முருகனுக்கு என்னென்ன அலங்காரம் மற்றும் அதனுடைய நேரத்தை தெரிந்துகொள்வோம் வாங்க.

அறுபடை வீடு

பழனி முருகன் கோவில் சிறப்பு:

Palani Murugan Alangaram in Tamil 

 • பழனி மலையை அக்னி நட்சத்திர நாளில்  சுற்றி வருவது சிறப்பானதாகும். 450 மீட்டர் உயரத்தையும் 690 படிகள் கொண்டது பழனி மலை. முருகனின் சிலை மீது வைக்கும் சிரசு விபூதி சித்தர்களின் கட்டளை படி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சிரசு விபூதி அற்புதமான பிரசாதமாகும். பழனி முருகனுக்கு நல்லெண்ணய், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி போன்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதத்தில் பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
 •  ஒரு நாளில் ஆறு தடவை அபிஷேகம் செய்யப்படுகிறது. பழனி முருகனுக்கு பூக்கள் மாலை மற்றும் அர்ச்சனை போன்றவை செய்வது இல்லை. பழனி பஞ்சாமிர்த பிரசாதத்தை சாப்பிடுபவர்களுக்கு உடலில் உள்ள நோய்கள் சரி ஆகிவிடும்.
 • பழனி முருகன் கோவிலில் மட்டும் தான் கோடிக்கணக்கான காணிக்கைகள் பக்தர்களிடமிருந்து வருகிறது என்ற சிறப்பு உள்ளது.

பழனி முருகன் கோவில் நடை திறக்கும் நேரம்:

 • ஒவ்வொரு கோவிலுக்கும் இந்த நேரத்தில் மட்டும் தான் நடை திறந்திருக்கும் என்று உள்ளது. அந்த நேரத்தில் தான் கடவுளை திருப்தியாக தரிசிக்க முடியும். அதே போல் பழனி முருகன் கோவில் காலை 06 AM மணி முதல் இரவு 09 PM மணி வரை திறந்திருக்கும். அந்த நேரத்தில் முருகனை தரிசித்து அவருடைய அருளை பெறுங்கள்.

பழனி முருகன் அலங்காரம் வகைகள்:

palani murugan alangaram timings in tamil

 • ஒவ்வொரு கடவுளுக்கும் அலங்காரம் அற்புதமாக நடக்கும். அலங்காரத்தை பார்க்க இரண்டு கண்கள் போதாது என்றே சொல்லலாம். பழனி முருகனுக்கு எந்தெந்த அலங்காரம் செய்வார்கள் என்று பார்ப்போம்.
 • சன்யாசி அலங்காரம் 
 • பாலசுப்பிரமணியர் அலங்காரம் 
 • வைதிகாள் அலங்காரம்
 • இராஜ அலங்காரம்
 • புஷ்ப அலங்காரம்

பழனி முருகன் கோவில் பூஜை நேரம்:

 • பழனி முருகன் என்னென்ன பூஜையில் எந்த அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்று பார்ப்போம்.
 • பழனி முருகன் காலை 06.40 AM மணிக்கு விளா பூஜையில் சன்யாசி அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
 • காலை 08.00 AM மணிக்கு சிறுகாலசந்தி என்ற பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
 • காலை 09.00 AM  மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
 • மதியம்  12.00 PM மணிக்கு உச்சிக்கலாம் பூஜையில் வைதிகாள் அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
 • மாலை 05.30 PM  மணிக்கு சாயரட்சை பூஜையில் இராஜ அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
 • இரவு 08.00 PM மணிக்கு அர்த்தஜாம பூஜையில் புஷ்ப அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
 • மேல் கூறப்பட்டுள்ள நேரங்களில் சென்று முருகனை தரிசித்து  அருளை பெறுங்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்