வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

புரட்டாசி முதல் சனிக்கிழமையில் பெருமாளை தரிசனம் செய்தால் என்ன பலன்கள்..!

Updated On: September 13, 2024 6:43 PM
Follow Us:
Purattasi Sani Palangal in Tamil
---Advertisement---
Advertisement

புரட்டாசி முதல் சனிக்கிழமை பலன்கள் – Purattasi Sani Palangal in Tamil

வணக்கம் நண்பர்களே.. நமது தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு  சிறப்பினை கொண்டிருக்கும். அந்த வையில் இப்பொழுது புரட்டாசி மாதம் வந்து விட்டது. அதிலும் நாளை புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆகும். இந்த புரட்டாசி மாத சனிக்கிழமையில் பெரும்பாலும் பலர் பெருமாளுக்கு விரதம் இருப்பார்கள், அதிலுள்ள சிலர் தலியல் போடுவார்கள். இந்த புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை கோடி புண்ணியம் கிடைக்கும். மேலும் பல நன்மைகளும் கிடைக்கும். சரி இந்த பதிவில் புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளை தரிசித்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் தரிசனம் பலன்கள்:

  • புரட்டாசி முதல் சனிக்கிழமையில் பெருமாளை தரிசனம் செய்தால். சகல செளபாக்கியங்களையும் தந்தருள்வார்.
  • புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில், தினமும் பெருமாளை வழிபடுவது அதிக பலன்களை கிடைக்கும். பெருமாள் வழிபாட்டுக்கு உரியது புரட்டாசி மாதம். வேண்டுதலுக்கு உரிய மாதம் புரட்டாசி மாதம் ஆகும். வேண்டுதலையும் நேர்த்திக்கடனையும் செலுத்துகிற மாதமும் இதுவே.
  • புரட்டாசி மாதத்தில் குலதெய்வத்தை அவசியம் வழிபடுவார்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் பார்த்துவிட்டு, விரதம் மேற்கொள்வார்கள். பின்னர் மாலையில் பெருமாளை மீண்டும் தரிசித்துவிட்டு, விரதத்தை நிறைவு செய்வார்கள்.

புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரதங்கள்….அவை தரும் பலன்கள்…

  • புரட்டாசி மாதத்தில் அசைவம் சேர்க்கமாட்டார்கள். நாளைய தினம் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை. முதல் சனிக்கிழமை. பொதுவாகவே, பெருமாளுக்கு உரிய நாள் சனிக்கிழமை.. அதிலும் புரட்டாசியும் சரி.. சனிக்கிழமையும் சரி.. பெருமாளுக்கு உகந்தவை.
  • நாளை நாள் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை. ஆக இந்த நன்னாளில், பெருமாளை மனதார வழிபடுங்கள். அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளையும் தாயாரையும் மனதார வழிபடுங்கள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். தாயாருக்கு மல்லிகைப் பூ மாலை சார்த்தி வழிபடுவது சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுத் தரும்.
  • ஆலயத்தில் பெருமாளை வழிபாடு செய்துவிட்டு, வீட்டுக்கு வந்து பெருமாளுக்கு புளியோதரை அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து மனதார வழிபடுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு பிரசாதத்தை வழங்குங்கள்.
  • கஷ்டங்களில் இருந்தும் துன்பத்தில் இருந்தும் நம்மைக் காத்தருள்வார் வேங்கடவன். கடன் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து நம்மை மீட்டெடுப்பாள் மகாலக்ஷ்மிதேவி.
  • புரட்டாசி சனிக்கிழமையில், பெருமாளை ஆலயம் சென்று தரிசிக்கும் போது, அங்கே நம்மால் முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவதும், அன்னதானம் செய்வதும் பல மடங்கு பலன்களை தந்தருளுவார்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now