மகாளய அமாவாசை வழிபாடு | Mahalaya Amavasya 2022 in Tamil

Mahalaya Amavasya 2021 in Tamil

மகாளய அமாவாசை தினத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்..!

ஆன்மீக நண்பர்களுக்கு எங்களது வணக்கம். இந்த தினத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன.. இந்த மகாளய அமாவாசை தினத்தில் செய்ய கூடாத விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோமா? முதலில் நாம் இந்த மகாளய அமாவாசை என்றால் என்ன? என்பதை பற்றி பார்க்கலாம்.

Mahalaya Amavasya 2022 Date and Time:

ஸர்வ மகாளய அமாவாசை  (07:04 PM, Oct 05 to 05.36 PM, Oct 06)

மகாளய அமாவாசை என்றால் என்ன?

பொதுவாக அமாவாசை நாளன்று நமது முன்னோர்களை நினைத்து ஆற்றிலோ, கடற்கரையிலோ எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்வோம். இவ்வாறு தர்ப்பணம் செய்வதினால் நமது முன்னோர்களின் தாகமும், பசியும் அடங்கும் என்று நமது இந்து மதங்களில் நம்மப்படுகிறது. இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது. அதேபோல் அமாவாசையில் மூன்று அமாவாசை நாட்கள் மிகவும் உகந்ததாகும். அவை தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அம்மாவாசை. இந்த மூன்று அம்மாவாசையில் மிக முக்கிய அமாவாசையாக பார்க்கப்படுவது புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை ஆகும்.

மகாளய பட்சம் என்றால் என்ன?

ஒரு மாதத்தின் சரிபாதியே பட்சம் எனப்படும். அமாவாசையை நோக்கிச் செல்லும் நாட்களை கிருஷ்ண பட்சம் எனவும், பௌர்ணமியை நோக்கி செல்லும் நாட்கள் சுக்கில பட்சம் எனவும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அதே போல மகாளய பட்சம் என்பதும் பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலம் ஆகும். ஆவணி மாதப் பௌர்ணமியை அடுத்த பிரதமையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரை உள்ள நாட்கள் மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மகாளய பட்சம் பதினைந்து நாட்களிலும் நாம் நமது முன்னோர்களுக்கு மற்றும் நமக்கு நெருக்கமான அனைத்து உறவுகளுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம். ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.

15 நாட்களுக்கான மகாளய பட்சம் பலன்கள்:

தர்ப்பணம்

முதல் நாளான பிரதமை திதியன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் வீட்டில் செல்வங்கள் பெருகும். வியாபரம்/ தொழில்/ உத்தியோகம் போன்றவற்றில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

இரண்டாம் நாளான துதியை திதியில் நீங்கள் தர்ப்பணம் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வம்சம் விருத்தியடையும்.

மூன்றாம் நாளான திருதியை திதி அன்று நீங்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

நான்காம் நாளான சதுர்த்தி அன்று திதி கொடுத்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பகையில் இருந்து நீங்கள் விடுபெறலாம்.

ஐந்தாம் நாளான பஞ்சமி திதி அன்று தர்ப்பணம் கொடுத்தால் அசையா சொத்துக்கள் மற்றும் பூர்விக சொத்துக்களில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். மேலும் அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

ஆறாம் நாளான சஷ்டி அன்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் சமுதாயத்தில் தங்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

ஏழாம் நாளான சப்தமி அன்று தர்ப்பணம் கொடுத்தால் உங்கள் தகுதிக்கு தகுந்தது போல் நல்ல பதவிகள் தங்களுக்கு கிடைக்கும்.

எட்டாம் நாளான அஷ்டமி அன்று நீங்கள் திதி கொடுத்தால் தங்களுக்கு அறிவு கூர்மை மற்றும் அனைத்து விஷயங்களிலும் தெளிவான முடிவு எடுக்கும் திறன் உங்களிடம் அதிகரிக்கும்.

ஒன்பதாம் நாளான நவமி திதியன்று நீங்கள் தர்ப்பணம் கொடுத்தால், நல்ல வாழ்க்கை துணை உங்களுக்கு அமைவார்கள்.

பத்தாம் நாளான தசமி அன்று திதி கொடுத்தால் உங்களது நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

பதினோராம் நாளான ஏகாதசி அன்று நீங்கள் திதி கொடுத்தால் கல்வி, விளையாட்டு கலைகளில் நல்ல முன்னேற்றம் மற்றும் அரசின் உதவி கிடைக்கும்.

பனிரெண்டாம் நாளான துவாதசி அன்று திதி கொடுத்தால் தீர்க்க ஆயுள் கிடைக்கும் மற்றும் விவசாயம் மற்றும் மற்ற தொழில்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

பதிமூன்றாம் நாளான திரையோதசி அன்று திதி கொடுத்தால் விவசாயம் மற்றும் மற்ற தொழில்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

பதினான்காம் நாளான சதுர்த்தசி அன்று நீங்கள் தர்ப்பணம் செய்யும் போது முன்னோர்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு முழுமையாக கிடைக்கும் மற்றும் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

பதினைந்தாம் நாள் தான் மகாளய அமாவாசை இந்த புனிதமான நாளில் நீங்கள் தங்களது முன்னோர்களுக்கு அல்லது காருண்ய பித்ருக்கள் என்று சொல்லக்கூடிய நமது நெருக்கமான மற்ற உறவுகளுக்கு தர்ப்பணம் கொடுத்தால் மேலும் கூறப்பட்டுள்ள 14 நாட்களுக்கான பலன்கள் முழுவதும் மகாளய அமாவாசை நாளன்று தங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

மகாளய அமாவாசை வழிபாடு முறை:

அன்னதானம்

இந்த அமாவாசை நாளன்று நீங்கள் இப்படி தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு விதிமுறைகளும் இல்லை. தாங்கள் செய்யும் தர்ப்பணம் முறையை முழு மனதோடு கவனமாக செய்ய வேண்டும். குறிப்பாக இந்த நாளில் உங்களால் செய்ய முடிந்த அளவிற்கு அடுத்தவர்களுக்கு அதாவது ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யலாம். இவ்வாறு செய்யும்போது அன்னதானமானது நம் பித்ருக்களைச் சென்று சேர்ந்து திருப்திப்படுத்துகிறது. அவர்கள் ஆசிர்வாதம் நமக்குக் கிடைப்பதால் வாழ்க்கையில் வெற்றியும், மங்களமும் நிறைந்திருக்கும்.

தர்ப்பணம் செய்யும் முறை:

ஆற்றிலோ, கடற்கரையிலோ, முன்னோரை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று கூறுகின்றன புராணங்கள். அவர்கள் மனம் குளிர அன்னதானம், வஸ்திர தானம், பழ வகைகள் தானம் போன்றவற்றைச் செய்தால் நன்மை கிடைக்கும்.

அல்லது:

சூரிய பகவானை வணங்கி கிழக்கு பக்கம் நின்னு வலது கையில் எள் எடுத்து பின்பு தூய பாத்திரத்தில் தூய நீரை எடுத்து சூரியனை பார்த்து இறந்த முன்னோர்களை நினைத்து பெயர்களை கூறி எள் மீது நீர் விட்டு கீழே உள்ள பாத்திரத்தில் விட வேண்டும் பின்பு அந்த நீரை கடல், ஆறு, ஏரி, குளம் பகுதிகளில் விடலாம்.

அமாவாசை நாட்கள் 2021-2022

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்