மதுரை சித்திரை திருவிழா வரலாறு | Madurai Chithirai Thiruvizha History in Tamil
சித்திரை திருவிழா என்பது தமிழ்நாட்டில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். அதுவும் மதுரையின் அடையாளமாக இருப்பது சித்திரை திருவிழா தான். இந்த திருவிழாவிற்கு ஒரு மாதம் வரையிலும் பக்தர்கள் திருவிழாவிற்கு தயாராகி அதிக நாட்கள் வரையிலும் கொண்டாடப்படும் ஒரு விழா மதுரை சித்திரை திருவிழா. சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி சுந்தரேஸ்வரருடைய திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றல் எழுந்தருளல் போன்ற பல விழாக்கள் மதுரையில் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இது மாதிரியான விமர்சையான சில திருவிழாக்கள் நடைபெறாமலே இருந்தன. இந்த 2022-ம் ஆண்டின் மதுரை சித்திரை திருவிழாவின் தேதியினை படித்து திருவிழாவினை கண்டு களித்து இறைவனின் அருள் பெறுவோம்.
மதுரை அருள்மிகு அழகர் கோவில் தல வரலாறு மற்றும் சிறப்புகள்..! |
சித்திரை திருவிழா வரலாறு:
மதுரை என்றாலே அனைவருக்கும் திருவிழா உணர்வானது மனதிற்குள் தானாக வந்துவிடும். மதுரையில் வாழும் மக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள சம்பிரதாயங்களை ஆடி பாடி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
மதுரையில் கொண்டாடப்படும் சித்திரை திருவிழா மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. மதுரையில் உள்ளவர்கள் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கக்கூடியவர்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் சார்பாக தனித்தனியாக திருவிழாக்கள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், அந்த திருவிழாவானது பெரும்பாலும் சைவ-வைணவ மோதல்களாகவே திருவிழா முடிந்தது. சமயங்களிடையே ஒற்றுமையை உண்டாக்கவும், முயற்சியாகவே இரு விழாக்களும் இணைக்கப்பட்டுள்ளன.
மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண திருவிழாவை, அறுவடை முடியாத நிலையில் வேளாண்மை பெருமக்களால் காணமுடியாமல் இருந்ததால் அந்த விழா சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது. ஆரம்ப காலத்தில் மதுரை, சோழவந்தானில் நடைப்பெற்ற திருவிழா, பின்னர் மதுரை நகருக்கு மாற்றப்பட்டது. 400 ஆண்டுகளாக காலம் தொன்று தொட்டு, சித்திரைத் திருவிழா வரலாற்று பெருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
இன்றும் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாக்களை கண்டு ரசிப்பதற்கு, மதுரையில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் பொதுமக்கள் வந்து குவிகின்றனர். சித்திரை என்றால் சுட்டெரிக்கும் வெயில், ஆனால் மதுரை மக்களுக்கோ கொண்டாடி தீர்க்கும் திருவிழா இந்த சித்திரை திருவிழா.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிறப்பு |
மதுரை சித்திரை திருவிழா 2022 அட்டவணை:
தேதி | கிழமை | சித்திரை திருவிழா 2022 | வாகன விவரம் |
ஏப்ரல் 05, 2022 | செவ்வாய்க்கிழமை | சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் | கற்பக விருட்சம், சிம்ம வாகனம் |
ஏப்ரல் 06, 2022 | புதன்கிழமை | காலை மாலை நான்கு மாசி வீதிகள் புறப்பாடு | அன்ன வாகனம் |
ஏப்ரல் 07, 2022 | வியாழக்கிழமை | கைலாச பர்வதம் | காமதேனு வாகனம் |
ஏப்ரல் 08, 2022 | வெள்ளிக்கிழமை | காலை தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் செல்லுதல், மாலை தெற்குவாசல் வழியாக வீதியை சுற்றி கோவிலுக்கு சேர்தல் | தங்க பல்லக்கு |
ஏப்ரல் 09, 2022 | சனிக்கிழமை | வேடர் பறி லீலை | தங்க குதிரை வாகனம் |
ஏப்ரல் 10, 2022 | ஞாயிறுக்கிழமை | சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை | ரிஷப வாகனம் |
ஏப்ரல் 11, 2022 | திங்கட்கிழமை | காலை மாலை நான்கு மாசி வீதிகள் புறப்பாடு | யாளி வாகனம் |
ஏப்ரல் 12, 2022 | செவ்வாய்கிழமை | ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் | வெள்ளி சிம்மாசன உலா |
ஏப்ரல் 13, 2022 | புதன்கிழமை | ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் | இந்திர விமான உலா |
ஏப்ரல் 14, 2022 | வியாழக்கிழமை | ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் | யானை வாகனம் , புஷ்பபல்லக்கு |
ஏப்ரல் 15, 2022 | வெள்ளிக்கிழமை | திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) | சப்தாவர்ண சப்பரம் |
ஏப்ரல் 15, 2022 | வெள்ளிக்கிழமை | தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை | அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை |
ஏப்ரல் 16, 2022 | சனிக்கிழமை | ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் | 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு) |
ஏப்ரல் 17, 2022 | ஞாயிறுக்கிழமை | திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் | வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம்: ராமராயர் மண்டபம் |
ஏப்ரல் 18, 2022 | திங்கட்கிழமை | (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் | புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம். |
ஏப்ரல் 19, 2022 | செவ்வாய்க்கிழமை | ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருளல் | — |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |