மாசி மகம் 2022 தேதி | Masi Magam 2022 Date in Tamil

Masi Magam 2022 Date in Tamil

மாசி மகம் சிறப்பு | Masi Magam 2022 in Tamil | Masi Magam Sirappugal in Tamil

மாசி மகம் என்பது மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திரத்தில் இந்துக்கள் கொண்டாடப்படும் சிறப்பான நாள். ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்து போய்க் கொண்டு தான் இருக்கும். ஆனால் மாசியில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே விசேஷமாக கொண்டாடப்படுகிறது. நாம் இந்த பதிவில் 2022-ஆம் ஆண்டிற்கான மாசி மகம் எப்போது வருகிறது? மற்றும் மாசி மகத்தின் சிறப்புகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

மாசி மாத சிறப்புகள்

மாசி மகம் 2022 தேதி:

மாசி மாதம் நான்காம் தேதி புதன்கிழமை அதாவது 16.02.2022 அன்று கொண்டாடப்படுகிறது.

மாசி மகம் ஆரம்ப நேரம் & தேதி மாசி மகம் முடியும் நேரம் & தேதி 
16.02.2022 (03:14 PM)17.02.2022 (04:11 PM)

மாசி மகம் சிறப்பு:

  • மாசி மாதத்தில் கும்ப ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வார். மக நட்சத்திரத்திம்  சிங்க ராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்க ராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசி மகம் என்று சொல்லப்படுகிறது.
  • தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகாமகம்) சிறப்பாக நடைபெறும்.
  • மாசி மகம் என்பது தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவமாக இருக்கிறது.
  • ‘மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்.’ என்பது ஆன்மீக பழமொழி. அதாவது மகம் நட்சத்திரத்தில் பி‌றந்தவர்கள் இந்த உலகத்தையே ஆளும் தகுதியும், திறனும் உடையவர்களாக இருப்பார்களாம்.
  • ஆண் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் மாசி மக நாளில் முருக பெருமானை வேண்டி விரதம் இருப்பார்கள்.
  • மக நட்சத்திரத்தை “பித்ருதேவ நட்சத்திரம்” என்று அழைப்பார்கள்.
  • எந்த நல்ல காரியம் நடந்தாலும் பித்ருக்களை வணங்கிவிட்டு தொடங்கினால் அந்த காரியம்  தடையில்லாமல் நடக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும். அதனால் தான் மாசிமகம் அன்று பித்ருக்களுக்கு பூஜை செய்ய வேண்டும்.
  • மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை “பிதுர் மகா ஸ்நானம் ” என்கிறது சாஸ்திரம்.
  • முன் காலத்தில் செய்த சகல பாவங்களை போக்க இந்த மாசி மகம் நாளன்று குளம், ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளில் நீராடுவது அனைத்து பாவ தோஷங்களும் நீக்கிவிடும்.
  • எனவே மாசி மக விரதத்தை அனைவரும் கடைப்பிடித்து வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் இருங்கள்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்