ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

Advertisement

ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 | Rahu Ketu Peyarchi 2022 to 2023 in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் பொதுநலம்.காம்-யின் வணக்கங்கள்.. பங்குனி மாதம் 7-ம் தேதி அதாவது மார்ச் 21.03.2022 இந்து வாக்கிய பஞ்சாங்கத்தின் படி நிழல் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு கேது பெயர்ச்சி பகல் இரண்டு மணி ஐம்பது நிமிடத்திற்கு நிகழ இருக்கிறது. இதில் ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு சஞ்சாரம் செய்கிறார். அதேபோல் கேது பகவான் விருச்சிகம் ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சஞ்சரம் செய்கிறார். இந்த ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய இந்த ராகு கேது பெயர்ச்சி 12 ராசிக்காரர்களுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை கொடுக்கும். அந்த வகையில் இந்த வருடம் ராகு கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறது. எந்தெந்த ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப்போகிறது போன்ற வற்றை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!

Rahu Ketu Peyarchi 2022 Palangal in Tamil

ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 மேஷம்:

இப்பெயர்ச்சியில் ராகு ஜென்ம ராசியில் அமர்ந்து 7-ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுதுந ல்ல பலன் கிடைக்கக்கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். அலுவகத்தில் பணிபுரிபவர்க்ளுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். மாணவர்கள் கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு செல்வார்கள். மேலும் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கேது 7-ஆம் வீட்டில் இருப்பதால் வீண் விரைய செலவு அதிகரிக்கும் ஆகவே அதனை சுப செலவுகளாக மாற்றுவது உங்கள் கையில் தான் இருக்கிறது. அதேபோல் நீங்கள் செய்யும் காரியங்களில் அதிக கவனமும் விழிப்புணர்வும் தேவை.

பரிகாரம்:

செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் விளக்கு போடுவது நல்லது

ராகு கேது பெயர்ச்சி 2022 ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சியில் ராகு விரைய ஸ்தானத்திற்கும் கேது ஆறாம் வீடான நோய் எதிரி சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகின்றனர். ஆகவே இதுவரை உங்க ராசியில் அமர்ந்து ஆட்டிப்படைத்த ராகு இனி விரைய ஸ்தானத்திற்கு மாறுவது சிறந்த ஒன்று என்றும் சொல்லலாம். அதாவது இனி தங்கள் வீட்டில் திருமணம் சடங்குகளான கிரக பிரவேசம், திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். அதேபோல் ரிஷபம் ராசியில் பிறந்த சிலருக்கு வெளிநாட்டு பயணம், தொழில் அமையும் வாய்ப்பை ராகு பகவான் அமைத்துக்கொடுப்பார். கேது பெயர்ச்சியால் சிலருக்கு புது வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமையும். இது வரை தொந்தரவு செய்த ஆரோக்கிய பிரச்சனைகள் அனைத்து இப்பொழுது சரியாகும். அதேபோல் தங்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் ஒழியும்.

பரிகாரம்:

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் ராகு பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடலாம்.

ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 மிதுனம்

ராகு பகவான் இப்பெயர்ச்சியில் லாப ஸ்தானத்தில் அமர்ந்து வெற்றியை தரவிருக்கிறார். ஆகவே உங்கள் தொழில் வியாபாரத்தில் இரண்டு மடங்கு லாபத்தை தருவார் ராகு பகவான். மறைமுக வழியில் பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் தருவார் ராகு பகவான். எதிர்பார்ப்பு எண்ணங்கள் அனைத்தும் கைகூடும். கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார் ராகுபகவான். வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும். திடீர் பணம் வரவு அதிகரிக்கும். தங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

பரிகாரம்:

மேலும் நன்மைகள் நடக்க புதன்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகரிக்கும்.

ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 கடகம்:

இந்த ராகு தேது பெயர்ச்சியில் கடகம் ராசிக்காரர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியங்களும் வெற்றி பெரும். தங்களுக்கு பிடித்த இடத்தில் வேலை கிடைக்கும். அதேபோல் சொந்தமாக வீடு வாங்குவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். கணவன் மனைவி உறவுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தங்களுக்கு இருந்த கடன் பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.

பரிகாரம்:

திங்கட்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 சிம்மம்:

ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் ராகு பயணம் செய்யப்போகிறார். ஆகவே நல்ல விஷயங்கள் உங்களுக்கு இனி நிறைய நடக்கும் அதாவது ராகு தங்களுக்கு  அள்ளித்தரப்போகிறார். புதிதாக வீடு காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். குறைக்க இந்த ராகு கேது பெயர்ச்சியின் போது உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. யோகங்கள் நிறைந்த ராகு கேது பெயர்ச்சியாக உள்ளது. திடீர் அதிர்ஷ்டம் வாய்ப்புகள் தங்களை தேடி வரப்போகிறது.

பரிகாரம்:

ஞாயிறு மாலை ராகு காலத்தில் கால பைரவரை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும். பாதிப்புகள் குறையும்.

ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு வரும். எட்டாவது வீட்டில் மறையப்போகும் ராகு பகவான் மறைமுக வழியில் திடீர் பண வரவைத் தரப்போகிறார். எதிர்பாராத வழிகள் மூலம் பணம், சொத்து கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு உள்ளது. வரப்போகும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள். இது வரை கலங்கிய களங்கப்பட்ட வாழ்க்கை ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும்.

பரிகாரம்:

புதன்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 துலாம்:

துலாம் ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள். ஆகவே உங்களுக்கு நல்லதே நடக்கும். ராசியில் கேது சஞ்சரிப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் தரும். தங்களது வருமானமும் திருப்திகரமானதாக இருக்கும். வாழ்க்கையே போர்க்களம், ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் நல்லதொரு மாற்றம் உண்டாகும்.

பரிகாரம்:

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு ராசி நாதன் செவ்வாயைப் போல செயல்படப்போகிறார். ஜென்ம கேது மன ரீதியாக நிறைய வலிகளை கொடுத்து வந்தார். இனி இதற்கு ஒரு முடிவு பிறக்கப்போகிறது. இந்த ராகு கேது பெயர்ச்சியினால் புதிய தெம்பும் தைரியமும் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திடீர் பண வரவு அதிகரிக்கும். தங்களது முயற்சிகள் அனைத்தும் கைகூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். திருமணம் கை கூடி வரும்.

பரிகாரம்:

செவ்வாய்கிழமை மாலை நேரத்தில் ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 தனுசு:

5-ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமரப்போகும் ராகு பகவானால் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் கிடைக்க்க வாய்ப்புகள் உள்ளது. தங்கள் பிள்ளைகள் வழியில் யோகம் தேடி வரும். தங்களது பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். ஒன்றரை வருடத்தில் கோடீஸ்வர யோகத்தை தேடித்தருவார். ஆகவே தனுசு ரசிங்கரர்களுக்கு பணப்பிரச்சனை நீங்கும். வியபிரத்தில், தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் இருந்த மந்தத்தன்மை நீங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் முடிவுக்கு வரும். போட்டி பொறாமைகள் விலகும் காலம் வரப்போகிறது.

பரிகாரம்:

வியாழக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 மகரம்:

ராகு பகவான் இந்த பெயர்ச்சியில் சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கும், கேது பகவான் பத்தாம் இடத்திற்க்கும் மாறுகிறார்கள். ஆகவே இதுநாள் வரை தங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் ஆரம்பிக்கும். 4ம் பாவம் தாயார், சுகம், வாகனம், கல்வி, நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்க்கு ராகு வருகிறார். இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு ராகு பகவான் உதவுவார்கள். உங்கள் தாயார் வழியில் சில தேவைற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். இருப்பினும் உங்கள் பழைய கடன்கள் அடைப்படும். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும். வரவுகள் அதிகரிக்கும் சேமிப்பும் உயரும்.

பரிகாரம்:

காரிய வெற்றி உண்டாக சனிக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 கும்பம்:

Rahu Ketu Peyarchi 2022 Kumbha Rasi:- கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிக்கு மூன்றாவது வீட்டிற்கு ராகு வருவதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் கேது அப்பா வழி சொத்துக்களை தேடித்தருவார். முன்னோர் வழி சொத்துக்கள் மூலம் பண வரவு அதிகரிக்கும். வீண் விரைய செலவுகளைத் தவிர்த்தால் இந்த ராகு கேது பெயர்ச்சி காலத்தில் கோடீஸ்வரர் ஆகும் யோகம் தேடி வரும்.

பரிகாரம்:

சனிக்கிழமை ராகுகாலத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 மீனம்:

ராகு அள்ளிக்கொடுப்பார். திடீரென கோடீஸ்வர யோகத்தையும் தருவார். கேது மோட்ச காரகன் தடை செய்வார். மீன ராசி மீன லக்னகாரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தருவார். ஏதாவது ஒரு விதத்தில் பணம் வரும். பேசியே காரியம் சாதிப்பார்கள். ராகு 2ஆம் வீட்டில் குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்வதால் பணத்தை அள்ளிக்கொடுப்பார்.

பரிகாரம்:

பாதிப்புகள் நீங்க வியாழக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement