தினமும் சொல்லக்கூடிய விநாயகர் மந்திரம்.!

Advertisement

விநாயகர் மந்திரம் | Vinayagar Manthiram in Tamil | விநாயகர் மந்திரம் தமிழ்

பொதுவாக இந்து மாதங்களில் ஏராளமான தெய்வங்கள் இருக்கிறந்து. அவற்றில் ஒவ்வொருத்தவுங்களுக்கு ஒவ்வொரு தெய்வங்களை பிடிக்கும். ஒவ்வொருத்தவுங்க ஒவ்வொரு தெய்வங்களை தனது இஷ்ட தேவைங்களா வைத்து தெய்வத்தை வழிபடுவார்கள். அவற்றில் இந்துக்களின் முதல் கடவுளான விநாயகரை பெரும்பாலானோர் தினமும் மனதில் நினைத்து வழிபடுவார்கள். தெய்வங்களுக்கு எல்லாம் முதன்மை தெய்வமாக விளங்கும் விநாயகரை தினமும் வணங்கிட இங்கு சில மந்திரங்கள் பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து பயன்பெறுங்கள் நன்றி..

விநாயக பெருமானை தினமும் நினைத்து இந்த மந்திரங்களை தினமும் உச்சரித்து வந்தால் வாழ்வில் நன்மை உண்டாகும். முழுமுதற் கடவுளான பிள்ளையாரை வழிபட்டால் தொட்டதெல்லாம் தொடங்கும். எனவே, விநாயக பெருமானை வழிபாடு செய்து பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை உச்சரியுங்கள்.

விநாயகர் ஸ்லோகம்:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

விநாயகர் சகஸ்ரநாமம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

விநாயகர் சதுர்த்தி முடிந்து, பிள்ளையார் சிலையை ஏன் நீரில் கரைக்கிறார்கள் தெரியுமா..?

விநாயகர் ஸ்லோகம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

கணபதி ஸ்லோகம்:

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

விநாயகர் ஸ்லோகம் – Vinayagar Slokas:

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

விநாயகர் காயத்ரி மந்திரம்:

வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

கணபதி ஸ்லோகம்:

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.?

விநாயகர் மந்திரம்:

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.

மேல் கூறப்பட்டுள்ள மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை தினமும் கூறி விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபட்டு வந்தால் அன்றைய நாளில் நீங்கள் செயல்படுத்தும் ஒவ்வொரு காரியங்களும் நல்லபடியாக நடந்து முடியும்.

ஓம் கம் கணபதயே நமஹ:

இந்த மந்திரத்தை தினமும் கூறி வருவதன் மூலம் உங்களின் வாழ்க்கையில் தீமைகள் ஏற்படாமல் இருக்கும். உங்களின் வாழ்க்கையில் உள்ள எதிர்மறை விஷயங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். ஏதாவது சுப காரியங்கள் செய்கிறீர்கள் என்றால் அதில் வெற்றியை அடைய வேண்டும் என்றால் இந்த மந்திரத்தை கூறி ஆரம்பியுங்கள்.

ஓம் கபிலாய நமஹ:

நமக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்ய கூடியது இந்த மந்திரமாகும். உங்களுக்கோ அல்லது உங்களின் கூட பிறந்தவர்களுக்கோ உடலில் ஏதும் நோய்கள் இருந்தால் இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம்.

ஓம் கணேசாய நமஹ:

இந்த மந்திரமானது நினைவாற்றலை அதிகப்படுத்தக்கூடியது. அதனால் குழந்தைகளை இந்த மந்திரத்தை தினமும் கூறி வருவதன் மூலம் அவர்களுக்கு நினைவாற்றல் திறன் அதிகரிக்கும்.

விநாயகர் துதி மந்திரம்:

ஓம் அல்லல் அறுப்பவனே சரணம் கணேசா
ஓம் ஆனந்த உருவே சரணம் கணேசா..

ஓம் ஆனை முகத்தோனே சரணம் கணேசா
ஓம் ஈஸ்வரன் மகனே சரணம் கணேசா..

ஓம் எங்குமிருப்பவனே சரணம் கணேசா
ஓம் ஏற்றம் அளிப்பவனே சரணம் கணேசா..

ஓம் கருணாகரனே சரணம் கணேசா
ஓம் சுருதிப் பொருளே சரணம் கணேசா..

ஓம் கலியுக நாதனே சரணம் கணேசா
ஓம் கருணையூற்றே சரணம் கணேசா..

ஓம் துயர் துடைப்பவனே சரணம் கணேசா
ஓம் வேத முதல்வனே சரணம் கணேசா..

ஓம் வேதாந்த சாரமே சரணம் கணேசா
ஓம் ஞான மூர்த்தியே சரணம் கணேசா..

ஓம் தோஷம் தீர்ப்பவனே சரணம் கணேசா
ஓம் நவக்கிரஹ நாயகனே சரணம் கணேசா..

ஓம் வினை தீர்க்ககும் வினையாகனே சரணம் கணேசா
ஓம் எங்கும் நிறைந்த இறைவனே சரணம் சரணம் சரணம் கணேசா..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement