குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 விருச்சிகம் – Guru Peyarchi Palangal 2021 to 2022 Viruchigam
ஆன்மீக நண்பர்களுக்கு எங்களது அன்பான வணக்கம்.. நல்லதோ.. கெட்டதோ.. அதை மனதில் வைத்து மறைக்காமல் எல்லோரிடமும் நேருக்கு நேராகச் சொல்லிவிடும் நல்ல உள்ளம் கொண்ட விருச்சிகராசி அன்பர்களுக்கும் வணக்கம். 2021 நவம்பர் மாதம் 13 தேதியன்று குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். பொதுவாக குரு பகவான் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை மட்டுமே வழங்கக்கூடியவர். ஆகவே இந்த பெயர்ச்சியின் போது குரு பகவான் தங்களுக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறார் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக படித்தறியலாம் வாங்க.
விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு 4-ம் இடத்தில் பெயர்ச்சி ஆகிறார் ஆகவே குருபகவான் இந்த பெயர்ச்சியில் 60% நல்ல பலன்களை தங்களுக்கு வழங்குவார். இருப்பினும் ஒரு சில விஷயங்களை நீங்கள் கஷ்டப்பட்டுத்தான் பெற வேண்டியதாக இருக்கும். உங்களிடம் விடா முயற்சி இருக்க வேண்டும். அனைத்து விஷயங்களையும் சகஜமாக எதிர்கொள்ள வேண்டும். இருப்பினும் இந்த பெயர்ச்சியில் குருபகவானின் பார்வை பலன் நன்றாகவே விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இருக்கிறது. குருவின் பார்வை பலன்களினால் உங்களுக்கு நிறைய நற்பலன்கள் கிடைக்க போகிறது.
வேலை:
விருச்சகம் ராசியில் பிறந்தவர்களுக்கு புதிய மாற்றம் நிகழப்போகிறது. அதாவது வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து சலுகைகள் மற்றும் விருப்பங்களும் பூர்த்தி ஆகும். குறிப்பாக அலுவலகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலும் உங்கள் உழைப்பிற்கான சம்பளம் உயர்வு கிடைக்கும். உங்கள் புதிய முயற்சிகளில் தெளிவு பிறக்கும்.
நிதி நிலை:
இதுவரை தங்களுக்கு இருந்த பொருளாதார சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். தங்களது கடன் தொல்லை நீங்கும். வாராது என்று நினைத்து கொண்டிருந்த நபர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்வீர்கள். உங்கள் தேவைக்கு ஏற்றது போல் பணம் வரவு கிடைத்து கொண்டே இருக்கும். இதனால் உங்களது நிதி நிலை சிறப்பாக இருக்கும். மேலும் வீண் செலவுகள் எதுவும் இல்லை என்றாலும். சுப காரியங்களுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். குறிப்பாக தங்களுக்கு பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் இந்த பெயர்ச்சியின் போது நீங்கும்.
கல்வி:
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு 4-ம் இடத்தல் குருபகவான் பெயர்ச்சி ஆவதால், இதுவரை படிப்பில் மந்தமாக இருந்த மாணவர்கள் அனைவரும் இப்பொழுது படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள்.
திருமணம்:
திருமணம் ஆகாத விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இப்பொழுது திருமணம் நிச்சகிக்கப்படும். திருமணமான தம்பதியருக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனை அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும்.
பெண்களுக்கு:
வீட்டை நிர்வாகம் செய்யும் பெண்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் இல்லத்தரசிகளுக்கு தங்களது குடும்பத்தில் நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்த கடமைகளை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
ஆரோக்கியம்:
நான்காம் இடத்தில் குருபகவான் பெயர்ச்சி ஆவதால் தங்களுக்கு இருக்கும் ஆரோக்கியம் பிரச்சனைகளை குருபகவான் குணப்படுத்துவார். ஆகவே உங்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
வியாபரம்:
குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை வழங்கினாலும் சரி.. அல்லது கெட்ட பலன்களை வழங்கினாலும் சரி.. நீங்க முதலீடு செய்யணும்னு நினைக்குற விஷயத்தில் உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருந்துச்சுன்னா கண்டிப்பா முதலீடு செய்யுங்கள் நல்லதே நடக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். மேலும் வியாபாரத்தில் லாபம் நன்றாகவே இருக்கும்.
பரிகாரம்:
திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ அக்னீஸ்வரரை வணங்குங்கள். வாரிசு இல்லாத வயதான தம்பதியருக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.
இதையும் படியுங்கள்–> குரு பெயர்ச்சி 2022 எப்போது வருகிறது? |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |