வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

விளக்கு வகைகள் | Vilakku Vagaigal | விளக்குகள் இத்தனை வகையா?

Updated On: December 12, 2024 6:22 PM
Follow Us:
Vilakku Vagai in Tamil
---Advertisement---
Advertisement

குத்து விளக்கு வகைகள் | Vilakku Vagai in Tamil | விளக்குகளின் பெயர்கள்

விளக்கு வகைகள்: எந்த ஒரு சுப காரியத்திற்கும் நாம் முதலில் செய்வது பூஜை அறையில் விளக்கு ஏற்றுவதை வழக்கமாக வைத்திருப்போம். பூஜை அறையை தூய்மையாக வைத்திருந்தோம் என்றால் வீட்டில் எப்போதும் லட்சுமி குடியிருப்பாள் என்பது ஐதீகம். வீட்டில் எந்த பூஜையையும் செய்வதற்கு முன் விளக்கை நன்றாக கழுவி பூவும், பொட்டும் வைத்து மங்களகரமாக தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.

இன்றும் பலரது வீட்டில் வழக்கம் மாறாமல் காமாட்சியம்மன் விளக்கினை பொன் போன்று பாதுகாத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு விளக்கிற்கு பெரும்சக்தி உள்ளது. விளக்குகளில் பல வகையான விளக்கு வகைகள் உள்ளன. அவற்றை படித்து தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..!

கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம்

குத்து விளக்கு:

குத்து விளக்கு

குத்து விளக்கும், வீட்டில் வழக்கமாக வைத்து வழிபாடு செய்யும் காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நிற்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கானது அனைத்து பூஜையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐந்துமுகக் குத்து விளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம்.

பாவை விளக்கு:

பாவை விளக்கு

பாவை விளக்கானது ஒரு பெண் கையில் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் இருப்பது பாவை விளக்கு ஆகும். இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம்.

தீபத்தின் வகைகள்:

தீபத்தின் வகைகள்

தூபம், தீபம், புஷ்பதீபம், நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத தீபம், வியாக்ர தீபம், ஹம்ஸ தீபம், கும்ப தீபம், குக்குட தீபம், விருக்ஷ தீபம், கூர்ம தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் பதினாறு வகை உள்ளது.

தூக்கு விளக்கு வகைகள்:

தூக்கு விளக்கு வகைகள்

வாடா விளக்கு, தூக்கு விளக்கு, தூண்டாமணி விளக்கு, நந்தா விளக்கு, கூண்டு விளக்கு, புறா விளக்கு, சங்கிலித் தூக்கு விளக்கு, கிளித்தூக்கு விளக்கு.

கார்த்திகை தீபம் முறையாக ஏற்றுவது எப்படி..?

பூஜை விளக்கு வகைகள்:

பூஜை விளக்கு வகைகள்

சர்வராட்சத தீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாதர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் போன்ற 9 வகை பூஜை விளக்குகள் உள்ளது.

கோவில் விளக்கு வகை:

கோவில் விளக்கு

கோவில் விளக்குகளின் வகை சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் வகைகளாகும்.

கை விளக்குகள்:

 vilakku vagaigal

கை விளக்குகளானது கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, கணபதி விளக்கு போன்றவை கை விளக்குகளாகும்.

நால்வகை திக்பாலர் தீபங்கள்:

 விளக்குகளின் பெயர்கள்

ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம் போன்றவை நால்வகை திக்பாலர் தீபங்கள்.

அஷ்ட கஜ தீபங்கள் வகை:

 vilakku vagai in tamil

ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சார்வ பௌம தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம் போன்ற 8 வகை தீபங்களும் அஷ்ட கஜ தீபங்கள் ஆகும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now