வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்கள் வீட்டில் தங்கம் சேர வேண்டுமா? அப்போ ஒரு முறை இந்த நேரத்தில் மட்டும் தங்கம் வாங்கி பாருங்கள்..!

Updated On: September 28, 2022 2:02 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

வீட்டில் தங்கம் தாக்குவதற்கு இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

Veetil Thangam Sera – வணக்கம் நண்பர்களே.. பொதுவாக நாம் எந்த பொருளை வாங்கினாலும் நேரம், காலம் பார்த்து வாங்குவது தான் வழக்கம். அதிலும் தங்கம் வாங்கும் போது நாள், கிழமை, நட்சத்திரம் போன்ற பலவகையான நல்ல விஷயங்களை பார்த்து தான் வாங்க வேண்டும். அப்படி நாம் நல்ல நாள் மற்றும் நேரம் பார்த்து வாங்கும் போது நாம் வாங்க கூடிய பொருட்கள் மேலும் மேலும் பெருகும். அந்த வகையில் நாம் தங்கம் வாங்கும் போது குறிப்பிட்ட நேரத்தில் வாங்கினால் வீட்டில் வாங்கிய தங்கம் தங்கி இருக்கும் அதேபோல் மேலும் மேலும் தங்கம் சேரும். சரி தங்கம் வாங்கும் போது எந்த நேரத்தில் வாங்கலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தங்கம் எந்த நேரத்தில் எந்த நாளில் எந்த கிழமையில் வாங்க வேண்டும்?

தங்கம் சேருவதற்கு அட்சய திருதி அன்று தங்கம் வாங்குவது வழக்கம். அதை தவிர்த்து மற்ற நாட்களில் தங்கம் வாங்க நினைப்பவர்கள் பரணி, பூரம், பூராடம், போன்ற நட்சத்திரம் வரும் புதன், வெள்ளி கிழமைகளில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரம், அமிர்தயோகம் மூன்றும் சேர்ந்து வரும் நாளை தங்க கணபதி தினமாக அனுஷ்டித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இந்த நாளில் காலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டிலோ அல்லது கோவிலிலோ ‘ஓம் தங்க கணபதி வஸ்ய வஸ்ய நம’ என 108 முறை பாராயணம் செய்துவிட்டு தங்கம் வாங்கினால் தங்கம் பெருகும். அதோடு இதை செய்வதால் சகலமும் கூடி வரும்.

லக்கினத்தில் குரு, 10ல் சந்திரன், 11ல் புதன் போன்ற நிலைகள் இருக்கும் காலகட்டத்தில் தங்கம் வாங்கினாலும் வீட்டில் தங்கம் அதிகரிக்கும்.

குளிகை நேரத்தில் நாம் செய்யும் காரியங்கள் திரும்ப திரும்ப தொடருமாம். ஆக அந்த நேரத்தில் நல்ல காரியங்கள் செய்தோம் என்றால் து திரும்ப திரும்ப தொடர்ந்துகொண்டே போகும் எனவே அந்த நேரத்தில் நீங்க தங்க நகைகளை வாங்கலாம். அப்படி வாங்கும் போது தங்க நகைகள் திரும்ப திரும்ப அதிகரித்து கொண்டே போகும்.

ஆக நீங்கள் தங்கம் வாங்க செல்கிறீர்கள் என்றால் மேல் கூறப்பட்டுள்ள நேரங்களில் வாங்குங்கள் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்க கூடும்.

தங்கம் அதிகம் சேர பரிகாரம் – Veetil Thangam Sera:

புதிதாக தங்கம் வாங்கி அதை ஒரு சுத்தமான வெள்ளை துணியிலோ அல்லது வெள்ளை காகிதத்திலோ சுற்றி உப்பில் சிறிது நேரம் புதைத்து வைத்தால் தங்கத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் விலகும். இதனால் வீட்டில் தங்கம் பெருகும்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now