வீட்டை விட்டு வெளியே செல்லும் போது இதை செய்யுங்கள்! நல்லதே நடக்கும்!

Advertisement

ஒரு காரியதற்க்காக வீட்டை விட்டு வெளியே செல்லும்போது இதை செய்யுங்கள்! நல்லதே நடக்கும்!

ஆன்மீக தகவல்கள்: நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் ஒரு நல்ல காரியத்திற்க்காக வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். பொதுவாக நாம் செயல்படுத்தும் எந்த ஒரு காரியத்திலையும் வெற்றி பெற வேண்டும் என்றால் அதனுடைய துவக்கம் சிறப்பாக அமைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் செயல்படுத்திய காரியங்கள் வெற்றி பெரும். அந்த வகையில் ஒரு காரியத்திற்க வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அதில் வெற்றி, கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் சில விஷயங்களை செய்ய வேண்டும். அதாவது சாதாரணமாக வெளியே சென்றாலும் சரி, குழந்தைகள் பள்ளிக்கு செல்வதாக இருந்தாலும் சரி, வீட்டில் உள்ளவர்கள் அலுவலகத்திற்கு சென்றாலும் சரி இது போன்று எந்த விஷயமாக இருந்தாலும் சரி வீட்டை விட்டு வெளியே செல்லும் போது நாம் செய்ய வேண்டிய விஷயங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது இதைச் செய்யுங்கள்:

No: 1

வீட்டில் உள்ள பூஜை அறைக்கு சென்று முதலில் மனதில் நினைனைத்த காரியம் வெற்றி பெற வேண்டும் என்று தெய்வங்களையும், குலதெய்வங்களை வணக்க வேண்டும். பிறகு தங்கள் அன்னையின் கையில் ஒரு டம்ளர் தண்ணீரை குடித்துவிட்டு செல்லுங்கள்.. அன்னை இலையென்றால் ஆண்களாக இருந்தால் தங்கள் மனைவியிடம் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு செல்லுங்கள். நீங்கள் நினைத்து செல்லும் காரியம் வெற்றி பெரும்.

No: 2

நீங்கள் எதாவது ஒரு நல்ல விஷயத்திற்க்காக உதாரணத்திற்கு: திருமணத்திற்கு வாழ்க்கைத்துணையை பார்க்க செல்வது, வளைகாப்புக்கு நாள் குறிக்க செல்வதற்கு, நல்ல வேலை கிடைக்க நேர்காணலுக்கு செல்கிறீர்கள், வீடு வாங்க, நிலம் வாங்க,  தங்கம் வாங்க இது போன்ற நல்ல காரியங்களுக்கு செல்லும் போது இதை செய்துவிட்டு செல்லுங்கள்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 காலை எழுந்தவுடன் எதை முதல் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

உங்கள் உள்ளங்கையில் மூன்று மிளகாய் எடுத்து மடித்து கொள்ளுங்கள்.. பின் நேராக பூஜை அறைக்கு செல்ல வேண்டும்.. கடவுளிடம் நீங்கள் மனதில் நினைத்த காரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள.. பின் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது அந்த மிளகை கையில் எடுத்துக்கொள்ளுங்கள், இப்பொழுது உங்கள் வீட்டின் நிலைவாசலை தாண்டுங்கள், பின் வீட்டின் வாசலில் அந்த மூன்று மிளகினை வைத்து தாண்ட வேண்டும். பின் திரும்ப பார்க்காமல் செல்லுங்கள்.

இந்த மிளகை வீட்டில் உள்ளவர்களை கையில் படாமல் ஏதாவது பேப்பர் அல்லது துணியை பயன்படுத்தி எடுக்க சொல்லி குப்பையில் தூக்கி எரிய சொல்லுவிடுங்கள். இப்படி செய்யும் பொழுது நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

No: 3

சாதாரண நாட்களில் அன்றாட வேலைக்காக வெளியில் செல்லும்போது கோளாறு பதிகத்தை படித்துவிட்டு செல்லலாம். கோளாறு பதிகத்தை முழுமையாக படிக்கமுடியாது என்றாலும் கூட கோளாறு பதிகத்தின் முதல் பாடலை படித்துவிட்டு செல்லலாம்.. இவ்வாறு படித்துவிட்டு செல்லும்போது அன்றைய நாள் சிறப்பாக இருக்கும். பாடலை தெரிந்துகொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்👇

👉👉 கோளறு பதிகம் முதல் பாடல்

இந்த மூன்று விஷயங்களில் எதாவது ஒன்றை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியில் சென்றால் நல்ல பலன்களை பெறமுடியும்.. பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி.. மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 ஆன்மீக தகவல்கள்

Advertisement