வேதை பொருத்தம் | Vedai Porutham in Tamil

Vedai Porutham in Tamil

வேதை பொருத்தம் என்றால் என்ன? | Vethai Porutham Endral Enna in Tamil 

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் வேதை பொருத்தம் என்றால் என்ன என்பதை படித்து தெரிந்துக்கொள்ளலாம். திருமணம் என்றாலே முதலில் பார்க்கப்படுவது பொருத்தம் தான். திருமண பொருத்தங்களில் பல வகையான பொருத்தங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சாஸ்திர பலன்களை கூறுகிறது. வேதை பொருத்தம் என்பது ஆண் பெண் இருவரின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை அறிந்து அவர்களை இன்பமாக வாழ வைக்கும் ஆற்றல் கொண்ட பொருத்தமாகும். சரி வாங்க வேதை பொருத்தம் பற்றிய மேலும் தகவலை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

திருமணத்திற்கு ஏன் ரஜ்ஜு பொருத்தம் பார்க்கப்படுகிறது தெரியுமா?

வேதை என்பதற்கு அர்த்தம்:

வேதை என்றால் தடை அல்லது இடைஞ்சல் என்று பொருளாகும். ஜாதகத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் அதற்கான வேதை நட்சத்திரங்கள் உள்ளது.

வேதை பொருத்தம்:

வேதை பொருத்தம் என்பது திருமண வாழ்க்கையில் வேதனையில்லாத வாழ்க்கையை அமையக்கூடிய பொருத்தமாகும்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரேயொரு நட்சத்திரம் வேதையாக அமையக்கூடும். இந்தவித வேதை நட்சத்திரம் ஒரே ரஜ்ஜுவாக, ரஜ்ஜு பொருத்தம் இல்லாத நட்சத்திராகவே அமையும்.

ரஜ்ஜு பொருத்தமானது குறுகிய கால மணவாழ்வு கூட சந்தோஷமாக இருக்கு. ஆனால் வேதை நட்சத்திரம் சேர்ந்தால் குறுகிய காலம் மணவாழ்வு கூட ஆனந்தம் இல்லாமல் போய்விடும்.

சரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?

 

பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம் வேதை நட்சத்திரமாக இருந்தால் அவர்கள் தம்பதியான பிறகும் அவர்களுக்குள் வாழ்க்கையானது சண்டை சச்சரவாகத்தான் இருக்கும்.

ஒருவருக்கு வேதை பொருத்தம் சரியாக இருந்தால் அந்த தம்பதிகளின் வாழ்க்கையில் எக்காலத்திற்கும் துன்பம் வராமல் சந்தோசம் நிலைத்து இருக்கும்.

வேதை நட்சத்திரங்கள்:

வேதை நட்சத்திரங்கள் 
அசுவினி கேட்டை 
பரணி அனுஷம் 
கார்த்திகை விசாகம் 
ரோகிணி சுவாதி 
திருவாதிரை திருவாதிரை 
புனர்பூசம் உத்திராடம் 
பூசம் பூராடம் 
ஆயில்யம் மூலம் 
மகம் ரேவதி 
பூரம் உத்திரட்டாதி 
உத்திரம் பூரட்டாதி 
அஸ்தம் சதயம் 
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று வேதை ஆகும். 

வேதை பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்?

வாழ்க்கையில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இல்லாமல் இருப்பதற்கு ஜாதக பொருத்தத்தில் வேதையை அறிய வேண்டும். வேதை என்றால் ஒன்றுக்கொன்று தாக்குதல் என்பது பொருளாகும்.

எனவே வேதை உள்ள பொருத்தத்தை திருமணம் செய்யாமல் தம்பதிகளின் வாழ்வை சிறப்பாக மாற்றுவோம்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்