வீடு வாசல் திசை ராசி
வணக்கம் நண்பர்களே.! சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களுக்கு பெரிய கனவாக இருக்கிறது. வீட்டில் உள்ள எல்லோரும் சம்பாதிக்கின்றனர். ஆனால் வாடகை வீட்டில் தான் இருப்பார்கள். சொந்த வீடு வாங்குவதற்காகவும், கட்டுவதற்காகவும் ஓடி ஓடி உழைக்கின்றனர். வருகின்ற 2023 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு வீடு வாங்கும் யோகம் சில ராசிகளுக்கு உண்டு என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அது என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ரொம்ப நாட்களாக வீடு வாங்க வேண்டும் அல்லது வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். உங்களது ஆசை 2023 ஆம் ஆண்டு நிறைவேற போகிறது. வருடத்தின் ஆரம்பம் நீங்கள் எதிர்பார்த்த வகையில் இருக்காது. அதனால் கொஞ்சம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். வீடு வாங்கும் யோகம் மட்டுமில்லை நிலம் கூட வாங்குவீர்கள். நீங்கள் புதிதாக வீடு வாங்கினாலும் சரி, கட்டினாலும் சரி ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் செய்வது நல்லது.
இதையும் படியுங்கள் ⇒ 2023 ஆம் ஆண்டு இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது..! இதில் உங்கள் ராசி இருக்கா
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் கஷ்டங்களை சந்திக்க நேரிடும். கவலை வேண்டாம் கொஞ்ச நாட்கள் மட்டும் தான் பிறகு நீங்கள் நினைத்த படி வீடு மட்டுமில்லை அசையா சொத்துக்களும் வாங்குவீர்கள். இதனால் வீட்டில் உள்ளவர்களிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டு என்ற ஆசை வருகின்ற 2023 ஆம் ஆண்டு நிறைவேறும். அடுத்த ஆண்டு வீடு மட்டுமில்லை உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். அதாவது வீடு மற்றும் நிலம் வாங்குவீர்கள். பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மே முதல் அக்டோபர் வரை வீடு வாங்குவதற்கும் சரி, கட்டுவதற்கும் சரி உகந்த மாதமாக இருக்கும்.
மிதுனம்:
மிதுனம் ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆண்டு அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக இருக்கும். வருடத்தின் ஆரம்பத்தில் நீங்கள் நிலம் மற்றும் வீடு வாங்குவதை தவிர்க்க வேண்டும். மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வீடு மற்றும் நிலம் எது வாங்கினாலும் அது பலமடங்காக அதிகரிக்கும். இந்த இரண்டு மாதங்களில் நீங்கள் நல்ல விஷயத்தை செய்வது நல்லது.
மேஷம்:
மேஷம் ராசிக்காரர்களுக்கு நிலம், வீடு வாங்குவதற்கு உகந்த வருடமாக இருக்கும். மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை வீடு கட்டுவது, வாங்குவது மற்றும் நிலம் வாங்குவது போன்ற விஷயங்களை செய்வது நலல்து. அடுத்த வருடம் உங்களுக்கு வெற்றியை அள்ளி கொடுக்கும் மாதமாக இருக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ 2023 ஆம் ஆண்டு அடுத்த சனி பெயர்ச்சி யாருக்கு? சனி பெயர்ச்சி இருந்து விடுபடுபவர் ராசி எது ?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |