இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை உங்கள் மனதில் நினைத்து கொள்ளுங்கள் உங்களை பற்றி சொல்கிறேன்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. திருநீறு, குங்குமம், சந்தனம் இதில் ஏதேனும் ஒன்றை மனதில் நினைத்து கொண்டால் நீங்கள் எப்படி பட்டவர்கள் என்று இப்பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம். இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது உங்களை பற்றி அறிந்துகொள்ள அதிக ஆர்வமாக இருக்கிறதா? அப்படியென்றால் திருநீறு, குங்குமம், சந்தனம் இவற்றில் ஏதேனும் ஒன்றை உங்கள் மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்ளலாம்.
திருநீறு:
நீங்கள் திருநீறு அதிகமாக பயன்படுத்துவீர்கள் மற்றும் உங்களுக்கு திருநீறு பூசிக்கொள்ள மிகவும் பிடிக்கும் என்றால் உங்களுக்கு முருகன், சிவன், எல்லை காவல் தெய்வங்கள், குலதெய்வம் இவர்கள் மீது அதிக பற்று இருக்கும். பெரும்பாலான ஆண் கோவில்களில் திருநீறு பிரசாதமாக கொடுக்கப்படும்.
திருநீற்றின் மிக முக்கிய அர்த்தம் என்னவென்றால் அது மனித வாழ்க்கையின் இறுதி சாம்பல் இதனுடைய சுருக்கம் தான் திருநீறு என்று நமது முன்னோர்களும் பெரியவர்களும் சொல்லியுள்ளனர்.
திருநீறு அதிகம் பயன்படுத்துபவர்கள் ஏதன் மீதும் அதிக பற்றின்றி இருப்பார்களாம். உங்கள் கடமைகளை சரியாக செய்யக்கூடியவர்கள். இவர்களிடம் நல்ல உள்ளம் இருக்கும். தான் என்ற எண்ணம் இருக்காது. அனைவருமே இந்த உலகத்தில் சமம் என்று நினைக்ககூடியவர்.
தனக்கு கிடைப்பதையும், தன்னிடம் இருப்பதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இவர்களிடம் இருக்கும்.
ஆசை தான் ஒருவருடைய வாழ்க்கையில் அதிக துன்பம் தரும், என்பதை புரிந்த இவர்களுக்கு ஆசை என்பது அதிகம் இருக்காதாம். நிலையற்ற இந்த வாழ்க்கையில் அனைவர் மீது அன்பு காட்டி, மற்றவருக்கு உதவி செய்து, மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்.
இந்த குணங்கள் அனைத்தும் திருநீறு பூசிக்கொள்ளும் நபர்களிடம் இருக்குமாம்.
நெற்றியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் வைப்பதில் இப்படி ஒரு அறிவியல் காரணம் இருக்கிறதா..!
குங்குமம்:
நீங்கள் அதிகம் குங்குமம் வைத்துக்கொள்வீர்கள் என்றால், உங்களுக்கு குங்குமம் அதிகம் பிடிக்கும் என்றால் உங்கள் குணம் எப்படி இருக்கும் என்பதை இப்பொழுது நாம் பார்த்து விடலாம். பொதுவாக குங்குமம் பெண் தெய்வங்கள் இருக்கும் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும். இந்த குங்குமம் சக்தியின் அமைப்பாக சொல்லப்படுகிறது.
பொதுவாக சக்தி, ஆற்றல் போன்றவற்றில் அதிகம் ஆர்வம் உள்ளவர்களுக்கு குங்குமம் பிடிக்குமாம். எதையும் சாதிக்க வேண்டும் என்ற மனம் வலிமை இவர்களிடம் நிறைந்து காணப்படும்.
அதிகாரம், செல்வாக்கு இதன் மீது அதிக ஈடுபாடு இவர்களிடம் இருக்கும், குறிப்பாக இவர்கள் யாருக்கும் அஞ்சாமல் வாழவும், பேசவும் தெரிந்த திறன்கள் இருக்கும். அனைவரையும் சரியான வழியில் வழிநடத்தும் வல்லமை இவர்களிடம் இருக்கும்.
தீய எண்ணம் மற்றும் தீய நபர்கள் இவர்களை நெருங்காது. இவர்களிடம் விடாமுயற்சி அதிகமாக இருக்கும். இந்த குணங்கள் அனைத்தும் குங்குமம் மீது அதிகம் பற்று இருக்கும் நபர்களுக்கு இருக்குமாம்.
சந்தனம் மற்றும் மஞ்சள்:
உங்களுக்கு சந்தனம் மற்றும் மஞ்சள் மீது அதிக பற்று இருந்தால் உங்கள் குணம் எப்படி இருக்கும் தெரியுமா? நீங்கள் செல்வ செழிப்பாக வாழ வேண்டும் என்று விரும்புவீர்கள். அனைவரையும் கவரும் தோற்றமும், அழகும் உங்களிடம் இருக்கும். காந்தம் போல் அனைவரையும் தன் பக்கம் ஈர்க்கும் ஈர்ப்பு சக்தி உங்களிடம் இருக்கும். செல்வாக்கு மற்றும் செல்வாக்கு அதிகம் நிறைந்திருக்கும் இடத்தில் இருக்க உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். அனைவரிடமும் இனிமையாக பேசக்கூடிய திறமை உங்களிடம் இருக்கும். கஷ்டம் என்று வந்தால் உதவி செய்யும் மனம் உங்களிடம் இருக்கும். உங்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் அதிக குறிக்கோள் இருக்கும். அதனை அடைவதற்கான திறமையும் உங்களிடம் இருக்கும்.
இந்த குணங்கள் அனைத்தும் சந்தனம் மற்றும் மஞ்சள் மீது அதிக பற்று உள்ளவர்களுக்கு இருக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |