உங்களுக்கு பிடித்த நிறம் உங்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

Advertisement

உங்களுக்கு பிடித்த நிறம் உங்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

Colour Psychology in Tamil – ஹாய் நண்பர்களே வணக்கம்.. பொதுவாக எல்லோருக்குமே ஒவ்வொரு விஷயம் பிடிக்கும், அதாவது மழையில் நனைவதற்கு சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு கடலில் இன்று கடல் அலையை ரசிப்பது பிடிக்கும், சிலருக்கு இயற்கை காட்சிகளை பார்க்க விரும்புவார்கள், சிலருக்கு நீண்டதூரம் பயணம் செல்ல பிடிக்கும் இது போன்று நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த விஷயங்களில் ஒன்று தான் நிறம், நிறங்களில் பலவிதமான நிறங்கள் உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நிறங்கள் பிடிக்கும். ஆக நிறத்தை வைத்து ஒருவரது ஆளுமையை தெரிந்துகொள்ள முடியும். ஆக இந்த பதிவு அதனை பற்றியது தான், இங்கு சில நிறங்களை பற்றியும், அந்த நிறம் ஒருவரது மனநிலையை பற்றி என்ன கூறுகிறது என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாமா..

Colour Psychology in Tamil:

கருப்பு நிறம் (Black):

black

உங்களுக்கு கருப்பு நிறம் மிகவும் பிடித்தமான நிறம் என்றால் உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே மாட்டீர்கள்.

வெண்மை (White):

white

வெள்ளை நிறம் என்பது ஒரு அழகான தேவதையை குறிப்பது என்று சொல்லலாம். உங்களுக்கு வெள்ளை நிறம் மிகவும் பிடித்த நிறம் என்றால் நீங்கள் மிகவும் வெளிப்படையான மனதை கொண்டவர்கள். எதையும் மனதில் வைத்துக்கொள்ளமாட்டீர்களாம், உங்களுக்கு சுத்தமாக இருக்க மிகவும் பிடிக்கும். உங்கள் மனமும் வெண்மையாக தான் இருக்கும், உங்கள் சொந்த வாழ்க்கையில் மிகவும் சுதந்திரமாகவும், எளிமையாகவும் இருக்க விரும்புவீர்கள். உங்கள் மனம் மிகவும் வெண்மையானது.

ஆரஞ்சு நிறம் (Orange):

உங்களுக்கு ஆரஞ்சு நிறம் மிகவும் பிடித்த நிறம் என்றால் நீங்கள் உங்கள் குடும்பத்தை மிகவும் நேசிக்கும் நபர் என்று சொல்லலாம். ஆனால் அதனை வீட்டில் இருப்பவர்களுடன் வெளிப்படுத்த மாட்டீர்கள்.

சிவப்பு நிறம் (Red):

உங்களுக்கு சிவப்பு நிறம் மிகவும் பிடித்த நிறம் என்றால் நீங்கள் மிகவும் பாசமான நபர். அனைவரிடமும் அன்பாக இருப்பீர்கள். நீங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வீர்கள்.

நீலநிறம் (Blue):

உங்களுக்கு நீலநிறம் மிகவும் பிடித்த நிறம் என்றால் உங்களுக்கு மிகவும் நெருக்கமான நபர்களிடம் மட்டும் ரொம்ப குறும்பு தனமாக இருப்பீர்கள். ஆனால் வெளியிடங்கள் மற்றும் மற்றவர்களுடன் கண்ணியமாக இருப்பீர்கள்.

பச்சை நிறம் (Green):

Green

உங்களுக்கு பச்சை நிறம் மிகவும் பிடித்த நிறம் என்றால் உங்களுடைய சந்தோசத்தை விட மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பீர்கள் மற்றும் அதனையே விரும்புவீர்கள்.

சியான் நிறம் (Cyan):

பச்சை கலந்த நீல நிறமான சியான் நிறம் உங்களுக்கு மிகவும் பிடித்த நிறம் என்றால் உங்கள் மனதில் பல கஷ்டங்கள் இருந்தாலும், வெளியே அதனை காட்டிக்கொள்ளமாட்டீர்கள். மனதில் பல கஷ்டங்கள் இருந்தாலும் அதனை வெளிப்படுத்தாமல் அனைவருடனும் மகிழ்ச்சையாகவே இருப்பீர்கள்.

பர்புல் நிறம் (Purple):

உங்களுக்கு பர்புல் நிறம் மிகவும் பிடித்த நிறம் என்றால் உங்களுக்கு மிகவும் பிடித்த நபர்களுடன் எப்பொழுதுமே ஈர்ப்பாகவே (Crush) இருப்பீர்கள்.

மஞ்சள் நிறம் (Yellow):

தங்களுக்கு மஞ்சள் நிறம் மிகவும் பிடித்த நிறம் என்றால் யாருக்கும் தெரியாமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள் மற்றும் உதவி செய்வதையே விரும்புவீர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement