தனுசு ராசி திருமண வாழ்க்கை | Sagittarius Marriage Prediction in Tamil

Advertisement

தனுசு ராசி திருமண வாழ்க்கை 2022 | Sagittarius Marriage Life 2022

ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் ராசி அதிபதியை பொறுத்து அவர்களின் குண நலன்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை வேறுபடும். ஒவ்வொருவரின் ராசிக்கு ஏற்ப அவர்களின் திருமண வாழ்க்கை அமைந்திருக்கும். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் தனுசு ராசியினருக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தனுசு ராசி திருமண வாழ்க்கை

Dhanusu Rasi Marriage Life in Tamil:

  • நட்சத்திரங்கள்: மூலம், பூராடம், உத்திரம்
  • அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, வெள்ளை, பச்சை
  • அதிர்ஷ்ட நாள்: புதன்கிழமை
  • அதிர்ஷ்ட எண்: 3, 12, 21

தனுசு ராசி பொதுப்பலன்கள் – Dhanusu Rasi Marriage Life in Tamil

  • தனுசு ராசிக்காரர்கள் பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாக எடுத்து கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் அடுத்தவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்படுபவர்களாக இருப்பார்கள். எப்பொழுதும் உற்சாகமாகவும், அனைவரிடமும் நன்றாக பழகும் குணத்தையும் உடையவர்களாக இருப்பார்கள்.

தனுசு ராசி திருமண வாழ்க்கை – Dhanusu Rasi Marriage Life in Tamil:

  • இந்த ராசிக்கார்கள் விரைவாக திருமணம் செய்து கொள்ளாமல் சற்று தாமதமாக செய்து கொண்டால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • தனுசு ராசியில் உள்ளவர்கள் (ஆண்/ பெண்) மேஷம், சிம்மம் ராசியினரை திருமணம் செய்து கொண்டால் இருவருக்கும் இடையே நல்ல புரிதலும், அன்பும் வெளிப்படும்.
  • வாழ்க்கைத்துணை உங்களுடைய அறிவுரையை கேட்டு நடப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களை மதித்து செல்வார்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உங்களுடைய முயற்சிக்கு ஆதரவு அளிப்பார்கள். தனுசு ராசிக்காரர்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை கடின உழைப்பாளியாகவும், பொறுமைசாலியாகவும் இருப்பர்.
  • மூல நட்சத்திரத்தில் பிறந்த ராசிக்காரர்கள் பரணி நட்சத்திரத்தில் பிறந்த மேஷ ராசியினரை திருமணம் செய்து கொள்ளலாம். வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.

Sagittarius Marriage Life 2022 | தனுசு ராசி திருமண வாழ்க்கை:

  • தனுசு ராசிக்காரர்கள் ரிஷபம், மிதுனம், கடகம், மீனம், கன்னி, துலாம் போன்ற ராசி உள்ளவர்களை (ஆண்/ பெண்) திருமணம் செய்து கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கொண்டே இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்லும் மனப்பக்குவம் இருக்காது.
  • விருச்சிகம், மகரம், கும்பம் போன்ற ராசி உள்ளவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் இருவரும் ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம்.
  • தனுசு ராசியில் உள்ளவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய துணைவி/ துணையை அனுசரித்து செல்ல வேண்டும்.
  • காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். இருப்பினும் காதலில் வெற்றி அடைய அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

தனுசு ராசி பெண்கள் எப்படி இருப்பார்கள்:

  • இந்த ராசியில் பிறந்தவர்கள் தெய்வாம்சம் பொருந்தியவராக, கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் தோற்றத்தில் மற்றும் குணத்தில் மென்மை கொண்டவர்களாக இருப்பார்கள். யாரையும் எளிதில் நம்பி விட மாட்டார்கள். மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதில் கில்லாடியாக இருப்பார்கள்.
தனுசு ராசி பலன் இன்று
நாளைய ராசி பலன்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement