அழுக்கு துணிகளை
வணக்கம் ஆன்மிகம் நண்பர்களே.! அந்த காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம் அவர்கள் பயன்படுத்தும் துணிகளை கிழிந்து போகின்ற அளவிற்கு பயன்படுத்தி தூக்கி எறிவார்கள். ஆனால் இப்பொழுது அப்டியா.! புதிதாக துணி வாங்கினால் அந்த துணியின் நிறம் லேசாக மாறினாலும் தூக்கி போட்டு விடுவார்கள். நம் முன்னோர்கள் எல்லாம் துணிகள் கிழிந்து போய் விட்டது என்றால் ஆற்றில் தூக்கி போடுவார்கள். இப்பொழுது அப்படியில்லை என்றால் தானமாக கொடுக்கிறார்கள். இப்படி தானமாக கொடுக்கும் போது சில நபர்களுக்கு தானமாக கொடுக்க கூடாது என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. யார் யாருக்கு கொடுக்க கூடாது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் துணிகளின் நிறம் மாறாமல் புதிய ஆடை போலவே இருக்க இதை செய்யுங்கள்.!
துணி தானம் கொடுக்கும் முறை:
பழைய துணிகள் கூட இல்லாமல் கிழிந்த துணிகளை அணிந்து ரொம்ப கஷ்டப்படுகிறவர்கள் இருப்பார்கள் அவர்களிடம் கொடுக்கலாம். இல்லையென்றால் ஆசிரமத்தில் உள்ளவர்களிடம் கொடுக்கலாம்.
நன்றாக இருக்கின்ற துணியை தானமாக கொடுக்கலாம். ஆனால் ஒருபோதும் கிழிந்த துணிகளை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்க கூடாது. கிழிந்த துணிகள் இருந்தால் மற்றவர்களுக்கு கொடுக்காமல் தூக்கி போட்டு விடுங்கள். மற்றவர்களுக்கு கொடுத்து பாவத்தை சேர்த்து கொள்ளாதீர்கள். அதுமட்டுமல்லாமல் நீங்கள் பயன்படுத்திய துணியை மற்றவர்களுக்கு துவைக்காமல் கொடுக்க கூடாது.
உங்களது துணிகளை ஒரு போதும் பிராமிணர்கள், திருநங்கைகள், கோவில் பூசாரி போன்றோர்களுக்கு தானமாக கொடுக்க கூடாது. இவர்களுக்கு நீங்கள் தானம் கொடுக்க விரும்பினால் புதிதாக தான் வாங்கி கொடுக்க வேண்டும். இந்த மூவர்களுக்கு பழைய துணிகளை தானமாக கொடுத்தால் பாவங்கள் வந்து என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.அதனால் துணிகள் வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள், ஆசிரமம் போன்றவற்றிற்கு தானமாக கொடுக்கலாம் தவறில்லை நண்பர்களே..!
இதையும் படியுங்கள் ⇒ பீரோவில் இப்படி துணியை அடுக்கி வைத்தால் 10 நபரின் துணிகளை கூட வைக்கலாம்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |