உங்கள் துணிகளின் நிறம் மாறாமல் புதிய ஆடை போலவே இருக்க இதை செய்யுங்கள்.!

Advertisement

துணியில் சாயம் பட்டால் எப்படி நீக்குவது

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் இரு அருமையான டிப்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். அது என்னவென்றால் துணியில் சாயம் போவாமல் இருப்பதற்கு என்ன செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம். இதை படிக்கும் போதே பல முகங்கள் பிரகாசிக்கும். கடைக்கு துணி எடுக்க சென்றால் அந்த நிறமெல்லாம் பிடித்திருக்கும். ஆனால் இந்த கலர் சாயம் போகும் அதனால் இந்த கலரை எடுக்காதே..! என்று சொல்வார்கள். இனிமேல் நீங்கள் எந்த பிரச்சனையும் இல்லை. எந்த நிற ஆடை வேண்டுமானாலும் எடுக்கலாம். துணிகள் சாயம் போகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று படித்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் துணியில் எந்த வித கறை படிந்தாலும் இனி கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்கள் போதும்

துணியில் சாயம் போகாமல் இருக்க: 

இந்த குறிப்பை சாயம் போக கூடிய ஆடையை வாங்கினீர்கள் என்றால் ஒரு முறை  பயன்படுத்திய பிறகு துவைப்பீர்கள். அப்போது மட்டும் இந்த குறிப்பை பய்னபடுத்தினால் காலத்துக்கும் அந்த ஆடையிலுருந்து சாயம் போகாது. வாங்க இப்போது சாயம் போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

ஸ்டேப்:1

முதலில் ஒரு வாலி எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நீங்கள் எவ்வளவு துணிகள் வைத்திருக்கிறீர்களோ அந்த அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் ஐஸ் கட்டி அல்லது குளிர்ச்சியான தண்ணீராக இருக்க வேண்டும்.

ஸ்டேப்:2

பின் அந்த தண்ணீரில் 2 தேக்கரண்டி வினிகர், ஒரு கைப்பிடி கல் உப்பு போன்றவை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு அந்த தண்ணீரில் சாயம் போகின்ற துணியை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஸ்டேப்:3

இப்படி ஊற வைப்பதால் அதிலிருந்து சாயம் போகுமோ என்ற பயம் வேண்டாம். பின் ஊறிய துணியை துவைத்து நன்றாக அலசி காய வையுங்கள். துணி காய்ந்ததும் அயன் செய்து வைத்திடுங்கள். குறிப்பாக உள்ளாடைகள் எல்லாம் அயன் செய்ய முடியாது. அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை. அயன் செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை ஒரு தடவை மட்டும் பயன்படுத்துங்கள். உங்களது துணி காலத்துக்கும் சாயம் போகாது.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement