Elakkai Pariharam
மனிதாக பிறந்த அனைவருக்கும் பிரச்சனைகள் இருந்துகொண்டு தான் இருக்கும். பிரச்சனைகள் இல்லாத வீடுகளே கிடையாது. எனவே இப்பிரச்சனையை தீர்க்க நாம் அனைவருமே கோவிலுக்கு சென்று கடவுளிடம் வேண்டி கொள்வோம். கடவுளிடம் தனக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் கூறுவதன் மூலம் விரைவில் சரியாகும் என்பது அவர் அவரின் நம்பிக்கை. அதுமட்டுமில்லாமல் வீட்டில் சில பரிகாரங்களை செய்வதன் மூலமும் பிரச்சனையிலிருந்து விடுபடலாம் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. எனவே உங்கள் பிரச்சனைகள் எல்லாம் நீங்கி நினைத்தது நடக்க வைக்கக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். எனவே உங்களுக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இருந்தால் இப்பதிவை படித்து பயனடையுங்கள்.
பணம் மலை போல் குவிய ஏலக்காயை இப்படி வைத்து பாருங்கள்
நினைத்தது நடக்க ஏலக்காய் பரிகாரம்:
இப்பரிகாரத்தை நீங்கள் வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டும். வியாழன்கிழமை அன்றே வீட்டை துடைத்து சுத்தம் செய்து விடவேண்டும்.
பிறகு, மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் பூஜை அறையில் உள்ள மஹாலக்ஷ்மி பாதத்தில் 3 ஏலக்காயை வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள்.
அதன் பின், ஒரு சிறிய சிகப்புநிற துணியை எடுத்து அதில் இந்த 3 ஏலக்காயை வைத்து முடிச்சு போட்டு கொள்ளுங்கள். இதனை உங்கள் வலது கையில் வைத்து உங்கள் பிரச்சனை சரியாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டே தலையை 27 முறை சுற்றுங்கள். பிறகு, அதேபோல் இடது கையில் வைத்து தலையை 27 முறை சுற்றுங்கள்.
இவ்வாறு தலையை சுற்றிய பிறகு, இம்முடிச்சினை பூஜை அறையில் வைத்து விடுங்கள். பிறகு மஹாலக்ஷ்மியை மனதார நினைத்து ஏதாவதொரு மஹாலக்ஷ்மி மந்திரத்தை கூறுங்கள்.
27 நாட்கள் பூஜை அறையில் இந்த 3 ஏலக்காயை அப்படியே வைத்து விடுங்கள். பிறகு அந்த ஏலக்காயை எடுத்து உங்கள் வீட்டில் உள்ள செடிகளில் போட்டு விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் 27 நாட்களில் உங்கள் வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருப்பதை நீங்களே பார்ப்பீர்கள். அதுமட்டுமில்லாமல் நீங்கள் நினைத்த காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
இந்த பரிகாரத்தை செய்து முடித்ததோடு மட்டும் விட்டு விடாமல் நினைத்து நடக்க விடாமுயற்சியும் அவசியம் தேவை.
எந்தவொரு பரிகாரத்தையும் முழுமனதோடும் நம்பிக்கையுடனும் செய்தால் அதற்கான பலன்கள் நிச்சயமாக கிடைக்கும். எனவே இப்பரிகாரத்தை செய்து பயனடையுங்கள்.
ஒரு கைப்பிடி கல் உப்பு போதும் 10 நாட்களில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற..
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |