நமது முகம் அமைப்பு நமக்கு எப்படிப்பட்ட பலன் தரும் தெரியுமா?

Advertisement

உங்கள் முகம் உங்களுக்கு எப்படிப்பட்ட பலன் தரும் தெரியுமா? – Face Personality Test in Tamil

Face Personality Test in Tamil: – நண்பர்களுக்கு வணக்கம்..! நமது முகம் அமைப்பை வைத்து நமக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்று நம்மால் ஓரளவு கணிக்கமுடியும். அதாவது ஒருவரது முகத்தைப் பர்த்தே சிலர் பலன்கள் அல்லது அந்த நபரைப் பற்றி சில விபரங்களை நாம் அறியமுடியும் அது எப்படி என்று தானே யோசிக்கிறீங்க. அதனை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள். அதாவது உங்களை பற்றி கூறும் முகத்தில் உள்ள உறுப்புகள். அதாவது நமது முகத்தில் உள்ள உறுப்புகளின் அமைப்பை வைத்து பலன்களை அறிய முடியும். அதை எப்படி அறிய முடியும் என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

நெற்றி:

forehead

ஒருவருடைய நெற்றி அவரது இளம் வயதில் அவருடைய அதிர்ஷ்டம் தந்தை, தாய், திருமணம் வாழ்கை, தொழில், வேலைவாய்ப்பு, சிந்தனை, திறமை போன்ற பல விஷயங்களை குறிக்கும். ஆக உங்கள் முக அமைப்பில் எந்த ஒரு தழும்புகளும், சீரற்ற கோடுகளும், முறையற்ற மச்சங்கள் இல்லாத, குழிவான அல்லது முடியே இல்லாமல் இருத்தல், குறுகலாகவோ அல்லது பெரிய நெற்றி, கருமையான தழும்பு போன்ற அமைப்பு இல்லாத நெற்றி கொண்டவர்கள் நல்ல நெற்றி கொண்டவர்கள் ஆவர். இவர்களுக்கு ஜோதிடம் ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்க கூடும்.

கண்கள்:

செல்வம் மற்றும் அந்தஸ்து தொடர்பான விஷயங்களை கண்களின் அமைப்பு, குறிக்கிறது. அழகான கண்களை கொண்டவர்களுக்கு அவர்களது, வாழ்க்கையில் செல்வம் மற்றும் அந்தஸ்துக்கும் குறைவிருக்காது.

புருவம்:

ஒருவருடைய புருவத்தின் அமைப்பு அவர்களது உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. சகோதரர்கள் மற்றும் நண்பர்களைக் குறிப்பதோடு புகழ், அந்தஸ்து மற்றும் அதிர்ஷ்டத்தை உணர்த்துவதாகும். மீறும் ஒருவருடைய புருவம் அவர்களது மனநிலையையும் குறிக்கும். புருவம் அடர்த்தியாக உள்ளவர்களின் நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் உறவு வலுவாக இருக்காது.

மூக்கு:

மூக்கு செல்வத்துடன் தொடர்புடையது. மூக்கின் நுணி சீராகவும், இரண்டு பக்க நாசி அமைப்பு ஒருவரின் நிதி நிலையைக் குறிப்பதாகும். மூக்கு ஆரோக்கியத்துடன் தொடர்புடையது மற்றும் சீரற்ற மூக்கு மோசமான அதிர்ஷ்டத்தைத் தரக்கூடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 மூக்கின் வடிவத்தை வைத்து நாம் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்..!

வாய்:

ஒருவரது முகத்தின் மிக முக்கியமான உறுப்பு வாய் ஆகும். வாய் பொதுவாக திறமையுடன் தொடர்புடையதாகும். ஆக தொங்கும் வாய் இதழ்கள் இல்லாமல் சீரான வாய் அமைப்பு உடையவர்கள் பல வகையில் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 பற்களின் வடிவத்தை வைத்து உங்கள் குணத்தை தெரிந்துகொள்ளலாம்.!

உதடு:

உதடு

அதிர்ஷ்டத்தைக் கணிக்க உதடு அமைப்பைப் பார்ப்பார்கள். உதட்டின் மீது வடு, சீரற்றதாக இருக்கும் உதடு நற்பலனைத் தருவதாக இருக்காது. மற்ற அமைப்புகள் நல்ல பண்களை அளிக்கும் என்று கருதப்படுகிறது.

கன்னங்கள்:

ஜோதிட ரீதியாக பரந்த, வட்டமான மற்றும் குண்டான கன்னம் செல்வத்தின் சின்னம். வடு, சுருக்கம் அல்லது மோசமான மச்சம் கொண்ட அமுங்கிய கன்னம், கூரான அல்லது சதைப்பற்றுள்ள கன்னம் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. மற்ற  அமைப்புகள் நல்ல பலன்களை கொடுக்கும்.

காது:

காது

காதுகள் நல்ல அதிர்ஷ்டம் இருக்கிறதா என்பதை குறிப்பது ஆகும். புருவங்களை விட உயர்ந்த இடத்தில் இருக்கும் மற்றும் பெரிய காது மடல்கள் சிறந்தவை.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement