உங்கள் வீட்டில் செல்வம் பெறுக வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கினால் போதும்..!

Friday Kal Uppu Pariharam

வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்..!

Friday Kal Uppu Pariharam – வணக்கம் நண்பர்களே.. தினமும் ஒவ்வொரு விதமான ஆன்மிக குறிப்பில் உப்பை வைத்து நமது வீட்டில் செல்வதை அதிகரிக்க பலவகையான பரிகாரங்களை பற்றி பார்த்து வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வெள்ளிக்கிழமை அன்று கல் உப்பை காசு கொடுத்து கடைகளில் வாங்கினால் ஆன்மிகம் ரீதியாக என்ன பலன் என்று தான் பார்க்க போகிறோம். பதிவை முழுமையாக படித்து பயன்பருங்கள்..

வெள்ளிக்கிழமை கல் உப்பு பரிகாரம் – Friday Kal Uppu Pariharam:

கல் உப்பை லட்சுமியின் வடிவம் என்று சொல்லுகின்றன. செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள். லட்சுமி தோன்றிய அந்தக் கடலில் தான் உப்பும் கிடைக்கிறது. உப்பில் லட்சுமி வாசம் செய்கிறாள். அதனை வெள்ளிக் கிழமை வாங்குவது நல்லது.

இதன் அடிப்படையில் தான் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது. எனவே தான் கிரகப் பிரவேசத்தில் புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லும் பொருட்களாக உப்பு முதன்மை பெறுகிறது.

லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று அவளுக்கு அம்சமாக விளங்கும் உப்பை நாம் வாங்கினால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்று கூறுகின்றார்கள். ஆகையால் கல் உப்பாக வாங்கி வைப்பது நல்லது.

வீட்டில் பண வரவு அதிகரிக்க, வெள்ளிக்கிழமைகளில் காலை 6 முதல் 6.15-க்குள்ளும், மதியம் 1 முதல் 1.15-க்குள்ளும், இரவு 8 முதல் 8.15-க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும். இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர, செல்வச் செழிப்பு அதிகமாகுமாம், உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்.

அல்லது உங்கள் வீட்டில் கல் உப்பு திருந்துபோகும் சமயத்தில் மற்ற கிழமைகளில் வாங்குவதை விட வெள்ளிக்கிளை அன்றாவது 6 முதல் 6.15-க்குள்ளும், மதியம் 1 முதல் 1.15-க்குள்ளும், இரவு 8 முதல் 8.15-க்குள்ளும் கடையில் உப்பை வாங்கிவிடுங்கள்.

தொடர்புடைய பதிவுகள்..👇👇👇
💁‍♀️வீட்டில் பணம் மழை பொழிய வேண்டுமா அப்போ இதை மட்டும் செய்ங்க..!
💁‍♀️நினைத்தது நிறைவேற கல் உப்பை வீட்டில் இந்த இடத்தில் வைத்து பாருங்கள்..!
💁‍♀️வற்றாத பண வரவிற்கு கல் உப்பு மந்திரம்
💁‍♀️சுக்கிர ஹோரையில் கல் உப்பை தொட்டால் இத்தனை மகிமையா?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்