திருக்கருகாவூர் கோவில் ஸ்தல புராணம்..! Garbarakshambigai Temple..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் கர்ப்பிணி பெண்களுக்கு கண் கண்ட தெய்வமாக விளங்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில் வரலாறு(thirukarukavur temple history in tamil) சிறப்புகளை பற்றி இன்று முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுவோம் வாங்க..!
![]() |
Garbarakshambigai Temple / திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில்:
தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூரில் முல்லைவனநாதர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் அருள்பாலிக்கும் கர்ப்பரட்சாம்பிகை,திருமணம் ஆகாத பெண்களுக்கு, குழந்தை இல்லாத பெண்களுக்கு கண் கண்ட தெய்வமாய் கர்ப்பரட்சாம்பிகை விளங்குகிறது.
இந்த திருக்கருகாவூர் கோவிலின்(முல்லைவன நாதர் கோயில் திருக்கருகாவூர்) கிழக்கு பகுதியில் ராஜகோபுரம், தெற்கு பகுதியில் கோவிலின் நுழைவு வாசல் அமைக்கப்பட்டிருக்கும். கோவிலின் உள்ளே நுழைந்த உடன் தென்புறம், மற்றும் பின்புறம் நந்தவனமும், வடக்கு பகுதியில் வசந்த மண்டபமும் இருக்கிறது.
அந்த திருக்கருகாவூர் – கர்ப்பரட்சாம்பிகை ஆலயம்(Thirukarugavur) முன்புறம் கொடிமரம், பலிபீடம், நந்தி போன்றவை காட்சி அளிக்கின்றன. முல்லைவனமாக இந்த கோவில் தலத்தில் இரண்டு பேர் வாழ்ந்து வந்தனர். நித்துருவர், வேதிகை என்ற இரு தம்பதியர்கள் வாழ்ந்தனர். குழந்தை பேரு இல்லாத இவர்கள் முல்லைவனத்து நாதரையும், அம்மனையும் கும்பிட்டு வந்தனர்.
இதனை அடுத்து வேதிகை கருவுற்றாள், ஒரு நாள் நித்துருவர் வெளியில் சென்றிருக்கும் நேரத்தில் வேதிகை மிகவும் கர்ப்பத்தில் அவதிப்பட்டாள். அந்த நிலையில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் பிச்சை கேட்டு வந்தார். வேதிகை மயக்க நிலையில் இருந்ததால் பிச்சை கேட்டு வந்தவருக்கு உணவு கொடுக்க இயலவில்லை.
அவள் அவதி நிலையில் இருப்பதை அறியாத இந்த முனிவர் கோபம் கொண்டு சாபமிட்டார். சாபத்தால் கருவில் உள்ள குழந்தை கலைந்தது. வேதிகை மனமுருகி வழிபட, அம்மன் நேரில் தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரை காப்பாற்றி கொடுத்தாள்.
இந்த தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி கர்ப்பிணி பெண்களை காக்கும்படி வேதிகை வேண்டினாள். இதனடிப்படையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு(Garbarakshambigai Temple History) கூறப்படுகிறது.
கர்ப்பரட்சாம்பிகை கண் கண்ட தெய்வம்:
கர்ப்பரட்சாம்பிகை கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். கர்ப்பரட்சாம்பிகை இடது கையை இடுப்பில் வைய்த்த நிலையில் காட்சி தருகின்றாள். சதுர்புஜ அம்பிகையாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
குழந்தை இல்லாதவர்கள் அம்மன் பாதத்தில் மந்திரித்து வைத்த நெய்யை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு வாய்க்கப்பெறும்.
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில் – குழந்தை செல்வம்:
திருமணம் ஆன தம்பதிகளுக்கு எவ்ளோ செல்வம் வந்து போனாலும் குழந்தை இல்லையென்றால் வெறும் வாழ்க்கையாய் போய்விடும். இந்தத் திருக்கோவில்(Garbarakshambigai Temple) அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள்.
இந்த திருக்கோவிலுக்கு குழந்தை பேரு வேண்டியும், சுகப்பிரசவம் ஆக தமிழகத்தில் மட்டும் அல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் வருகிறார்கள். திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் நேரடியாகவே கோவிலுக்கு(Garbarakshambigai Temple History) வந்து நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்கிறார்கள்.
திருக்கருகாவூர் கோவிலின் அனுக்கிரக மூர்த்திகள்:
இந்த கோவிலில் சுவாமி, விநாயகர், நந்தி மூன்றுமே சுயம்பு மூர்த்திகள் என்று கூறுகிறார்கள். இந்த மூன்றிலும் சுவாமி மட்டும் மண்ணால் ஆனவர். மீதமுள்ள இருவரும் சிலை வடிவில் தோன்றியவர். சூரியனுக்கு எதிரில் குருபகவான் தோன்றியிருக்கிறார்.
அதனால் இந்த கோவிலின் எல்லா கிரகங்களும் அனுக்கிரக மூர்த்திகளாக இருக்கின்றனர். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இத்தலம் ஞான சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்றவையாகும். கோவிலின் தலவிருட்சமாக முல்லைக்கொடி இருக்கிறது. பால்குளம் என்னும் தீர்த்தம் இங்கே கிடைக்கிறது.
இந்த கோவிலில் முருகப்பெருமான் தனி சன்னதியில் காட்சி தருகின்றார். சன்னதியில் வள்ளி தெய்வானை ஆகிய இருவரும் காட்சி தருகின்றனர். ஆறுமுகனாக முருகப்பெருமானும் அருள் தருகிறார்.
சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையில் முருகப்பெருமான் சன்னிதியும் அமைந்துள்ளதால், இந்த முல்லைவன நாதர் கோயில் திருக்கருகாவூர் சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது என்றும் கூறப்படுகிறது.
திருக்கருகாவூர் கோவில் நன்றி கடன்:
பக்தர்களின் வேண்டிய காரியம் அனைத்தும் பலித்ததும் தம்பதியினர்கள் அனைவரும் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பின்னர் அம்பாளின் சன்னிதிக்கு வந்து அவர்களின் சக்திக்கு ஏற்றவகையில் கற்கண்டு, வாழைப்பழம், பணம், சர்க்கரை போன்றவற்றை எடைக்கு எடை துலா பாரம் செய்கிறார்கள்.
மேலும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை செய்வதும், புடவை சாத்துவதும் போன்றவை செய்கிறார்கள். அம்பிகை சன்னிதியிலேயே ஒரு துலாக் கோல் இருக்கிறது.
சுயம்புவான முல்லைவன நாதருக்கு, புனுகு சட்டம் சாத்தி வழிபட்டால், தோஷம் போன்ற பிரச்சனை நிவர்த்தியாகும். குறிப்பாக தோல் சம்மந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பதும் அனுபவப்பட்டவர்களின் வாக்காகும்.
![]() |
திருக்கருகாவூர் கோவில் தரிசன நேரம் / Thirukarukavur Temple Timings:
இந்த கோவிலின்(Garbarakshambigai Temple) தரிசன நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை நடை திறந்திருக்கும்.
மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில் முகவரி / Thirukarukavur Temple Address:
திருக்கருகாவூர் செல்லும் வழி: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவில், தஞ்சாவூர்– நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது(Garbarakshambigai Temple) திருக்கருகாவூர் கோவில்.
கும்பகோணத்தில் இருந்து பட்டீஸ்வரம், ஆவூர் வழியாக 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்கருகாவூர் கோவில்.
தொலைபேசி: 04374 – 273 423.
![]() |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Aanmeega Thagaval in Tamil |