கோமதி சக்கரம் பலன்கள் மற்றும் வழிபாடும் முறை | Gomati Chakra Benefits in Tamil

Gomati Chakra Benefits in Tamil

கோமதி சக்கரம் பலன்கள் | Gomati Chakra Benefits in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதில் கோமதி சக்கரம் என்றால் என்ன?, அதனை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் (Gomati Chakra Benefits in Tamil) மற்றும் இந்த கோமதி சக்கரம் வழிபாடும் முறை போன்ற ஆன்மீக தகவல்களை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

கோமதி சக்கரம் என்றால் என்ன?

Gomati Chakra Benefits in Tamil – கோமதி சக்கரம் சங்கு வடிவில் உள்ள ஒரு கல். கோமதி சக்கரம் கோமதி நதிக்கரையில் இருந்து கிடைப்பதால் இதற்கு கோமதி சக்கரம் என்று பெயர் வந்தது. மஹாலக்ஷிமிக்கு பிரியமானது இந்த கோமதி சக்கரம். கோமதி சக்கரம் இருக்கும் வீட்டில் மஹாலக்ஷ்மி தங்குவார் என்பது ஐதீகம். இயற்கையின் படைப்பில் கோமதி சக்கரம் என்பது மிகவும் அற்புதமான ஒன்றாகும்.

இந்த கோமதி சக்கரத்தை தங்க நகைகளான மோதிரம், செயின், கம்மல் போன்ற தங்க நகைகளில் அணிகிறார்கள். இதனால் உடம்பில் உள்ள நோய்கள் குணமாகுமாம்.

செல்வம் செழிக்கும் செல்வம் தங்கும் என ஐதிகம். ஆணோ, பெண்ணோ முக்கியமான வேலை சம்பந்தமாக வெளியில் செல்லும் பொழுது இந்த கோமதி சக்கரத்தை இரண்டு இலக்காக அதாவது 2,4,6 என்ற இரட்டை முறையில் அணிதோ அல்லது பையில் வைத்து சென்றால் நிச்சயமாக செல்லும் காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

அதேபோல் இந்த கோமதி சக்கரத்தை வீட்டில் வைத்து வைப்படுவதாக இருந்தால் பச்சை அல்லது மஞ்சள் துணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கோமதி சக்கரம் எங்கு கிடைக்கும்?

இந்த கோமதி சக்கரம் கோமதி நதிக்கரையில் இருந்து கிடைக்கிறதாம். கோமதி நதி கரை கிரிஷ்ணற்கு உரிய இடமாகும். கோமதி சக்கரத்தை வாங்குவதை விட பெரியோர்களிடம் இருந்து அன்பளிப்பாக வாங்கினால் மிக மிக நல்லதாம். கடையில் வாங்குவதாக இருந்தால் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து வாங்குவது சிறப்பு.

யாரெல்லாம் இந்த கோமதி சக்கரத்தை அணியலாம்:

இயற்கையாகவே நமக்கு கிடைக்கக்கூடிய பொருளை என்பதால் ஜாதி மதம் இனம் என்று எந்த ஒரு வேறுபாடும் இன்கிரி அனைவருக்கே இதனை அணிந்துகொள்ளலாம். குறிப்பாக ராகு கேது தோஷம் உள்ளவர்கள் காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த கோமதி சக்கரத்தை அணிந்து வழிபட்டு வந்தால் தோஷம் நிவர்த்தியாகி நல்ல பலனை தரும்.

இந்த கோமதி சக்கரத்தை பெண்கள் இடது கையிலும் ஆண்கள் வலது கையிலும் அணிய வேண்டும். பெண்கள் இடது கை ஆல்காட்டி விரலில் அணியலாம் மற்றும் மோதிர விரல்களில் கூட அணியலாம் நடு விரலில் அணிய கூடாது.

கோமதி சக்கரம் என்ன விலை:

இந்த கோமதி சக்கரம் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் கிடைக்கின்றது. விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

கோமதி சக்கரம் பலன்கள் | Gomati Chakra Benefits in Tamil:

  • கோமதி சக்கரம் பெரும்பாலும் வாஸ்து கோளாறுகளை நீக்குகிறது.
  • ஒருவருடையன் ஜாதக கோளாறுகளை நீக்குகிறது.
  • குழந்தைகளுக்கு தங்கம் அல்லது வெள்ளி சைனில் இந்த கோமதி சக்கரத்தை அணிந்து விட்டால் குழந்தை நன்றாக படிப்பார்கள் மற்றும் குழந்தையின் புரிந்து கொள்ளும் சக்தி நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
  • கோமதி சக்கரத்தை வாங்கி பூஜை அறையில் வைத்து தினமும் பூஜை செய்து வந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
  • கோமதி சக்கரம் அணிந்து எந்த வேலையை செய்தாலும் வெற்றி கிடைக்கும்.
    குலதெய்வம் முன் கோமதி சக்கரத்தை வைத்து பூஜை செய்து வீட்டின் வெளிப்புறம் மேல் கட்டினால் வீட்டில் உள்ள கண் திருஷ்டி அனைத்தும் நீங்கும்.
  • பதினொன்று கோமதி சக்கரத்தை சிவப்பு துணியில் கட்டி பூஜையின் அறையில் வைத்து பூஜை செய்து வந்தால் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
  • கோமதி சக்கரம் தீராத தலை வலி, கடன் பிரச்சனை, வேலை பிரச்சனை போன்றவற்றிற்க்கு கோமதி சக்கரம் சிறந்த தீர்வாகும்.
    கோமதி சக்கரம் நாக தோஷத்தை நீக்கும் வல்லமை கொண்டது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்கள்