தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 | Guru Peyarchi Dhanusu Rasi

Advertisement

குரு பெயர்ச்சி 2021 to 2022 தனுசு

Guru Peyarchi 2021 Dhanusu Rasi: நல்ல கிரகமாக விளங்கும் குரு பகவான் பெயர்ச்சி ஆகும் பொழுது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் கட்டாயம் தங்களுடைய ராசிக்கு என்ன பலன் தர போகிறார் என்ற ஆர்வம் இருக்கும். அந்த வகையில் இரண்டாம் வீட்டில் அமர்ந்து நல்ல பலன்களை கொடுத்துக் கொண்டிருந்த தனுசு ராசிகாரர்களுக்கு இவ்வருடம் முதல் மூன்றாம் வீடான கும்ப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாக போகிறார். அவரால் கிடைக்கப் போகும் இன்ப துன்பங்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்களில் எப்படி இருக்க போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Dhanusu Rasi Guru Peyarchi Palangal | குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 தனுசு

Dhanusu Guru Peyarchi Palangal 2021 - 2022

இந்த குரு பெயர்ச்சியானது தனுசு ராசிக்கு பண வரவையும் புகழையும் தரக்கூடிய மூன்றாம் இடத்திற்கு மாறப்போகிறது. தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரித்து காணப்படும். கடின முயற்சி மற்றும் உங்களின் நேர்மறையான எண்ணங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். உற்சாகம் நிறைந்து காணப்படுவீர்கள். எதிர்ப்பாராத பல நல்ல விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பார்வை சிம்மத்தில் விழுவதால் கௌரவம், புகழ் அந்தஸ்து உயரும்.

தொழில் – குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 dhanusu:

  • தொழில் பொறுத்தவரை உங்களது தொழிலை விரிவுபடுத்த விரும்புபவர்களுக்கு  இப்பொழுது அந்த முயற்சி வெற்றி பெரும். தொழில் சம்மந்தமான பிரச்சனைகளை திறமையுடன் சமாளிப்பீர்கள் தைரியம் அதிகரிக்கும். தொழில் ரீதியான போட்டிகள் குறையும். குரு பார்வை லாபஸ்தானம் என்று சொல்லக்கூடிய துலாம் ராசியில் விழுவதால் லாபம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி பெருகும்.

பொருளாதாரம் – Dhanusu Rasi Guru Peyarchi Palangal:

  • பொருளாதாரம் பொறுத்தவரை வரவும் செலவும் சமமாக இருக்கும். செலவு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். கடன் வாங்கும் போது கவனம் தேவை. வீண் செலவுகளை தவிர்ப்பது சிறந்தது. சிலர் வண்டி வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

உத்தியோகம் – Guru Peyarchi Dhanusu Rasi 2021

  • பணிபுரிபவர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக உள்ளது. உங்களது வேலையை சிறப்பாக செய்து அதற்கான பாராட்டை பெறுவீர்கள். உங்களது திறமையின் மூலமாக பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு எதிர்பார்த்த படி கிடைக்கும். புதிதாக வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

குடும்ப உறவு – Dhanusu Rasi Guru Peyarchi 2021

  • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு பெருகும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இது வரை குடும்பத்தில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் குறைய ஆரம்பிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

திருமணம் – Dhanusu Rasi Guru Peyarchi Palangal:

  • குரு பார்வை 7-ம் இடத்தில் இருப்பதால் திருமணம் சம்மந்தமான பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். நீண்ட நாட்களாக திருமணம் தள்ளி போனவர்களுக்கு இப்பொழுது திருமணம் நிச்சயிக்கப்படும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

இல்லத்தரசிகள்:

  • வீட்டை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆதரவு பெருகும். உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

கல்வி:

  • மாணவர்களுக்கு குரு பெயர்ச்சி 3-ம் இடத்தில் இருப்பதால் கல்வி வளர்ச்சி நன்றாக இருக்கும். இதுவரை படிப்பில் ஈடுபாடு இல்லாதவர்கள் இனிமேல் நன்றாக படிப்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் அவர்களை படிக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஆரோக்கியம் – Guru Peyarchi Dhanusu Rasi:

  • ஆரோக்கியம் பொறுத்தவரை சுமாராக இருக்கும். வெளிப்பயணம் மேற்கொள்பவர்கள் சற்று நிதானமாக செல்ல வேண்டும். பெரிய அளவிற்கு உடல் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
  • எந்த ஒரு செயலையும் நிதானமாகவும், பொறுமையாகவும் செய்தால் மேற்கூறிய நல்ல பலன்களை அடையலாம்.

பரிகாரம்:

  • காஞ்சிபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ ஏகாம்பரநாதேஸ்வரரை கடவுளை வணங்க வேண்டும். மன நிலை சரியில்லாதவர்களுக்கு உதவினால் தடைகள் நீங்கி மேலும் நல்ல பலன்களை அடையலாம்.
ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 கடகம்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement