வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஹனுமான் சாலிசா லிரிக்ஸ் மற்றும் எப்படி கூற வேண்டும் மற்றும் பலன்கள்

Updated On: December 19, 2025 5:49 PM
Follow Us:
Hanuman Chalisa in Tamil
---Advertisement---
Advertisement

அனுமன் சாலிசா பாடல் வரிகள் |ஸ்ரீ ஹனுமான் சாலிசா தமிழ்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளை வணங்குவோம். அப்படி வணங்கும் போது கடவுளுக்கு பிடித்த பாடல்கள் அல்லது மந்திரங்களை கூறி வழிபடுவதன் மூலம் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பல நபர்களுக்கு கடவுளுக்கு உரிய மந்திரங்கள், பாடல்களை அறிந்திருக்க மாட்டார்கள். நம்முடைய பதிவில் கடவுளுக்குரிய மந்திரங்கள், பாடல்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அனுமன் சாலிசா பாடல் வரிகளை அறிந்து கொள்வோம்.

மேலும் இந்த பாடல் பாடுவதால் கிடைக்கும் நன்மைகள், எப்படி கூற வேண்டும் என்ற முழு விவரத்தையும் இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

மந்திரம் கூறும் முறை:

19-12-2025 அனுமன் ஜெயந்தி | Hanuman Jayanti 19-12-2025

இந்த மந்திரதத்தை கோருவதற்கு முன்னால் உங்கள் உடம்பு மற்றும் மனதை தூய்மையப்படுத்தி கொள்ள வேண்டும். அதன் பிறகு பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்ற வேண்டும். அதன் பிறகு இங்கு கீழே கூறப்பட்டுள்ள 40 துதிகளையும் 11 முறை கூற வேண்டும். 11 கூறமுடியவில்லை என்றால் உங்களால் எத்தனை முறை கூற முடியுமோ அத்தனை முறை கூற வேண்டும். அதாவது 1,3,5 ,7, 9 போன்ற முறைகளில் கூறுங்கள். இந்த மந்திரங்களை கூறும் போது மலர்களை அனுமான் பாதத்தில் வைக்க வேண்டும்.

இந்த மந்திரத்தை வீட்டிலோ அல்லது கோவிலிலோ கூறலாம். மேலும் இதனை செவ்வாய் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் கூறலாம். இதனை கூறும் போது அனுமானையும், ராமரையும் மனதில் நினைத்து கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

மந்திரத்தை கூறுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • ஆன்மிக உணர்வு அதிகரிக்கும்.
  • சனி பகவானால் ஏற்பட்ட பிரச்சனை நீங்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
  • வீட்டில் பணவரவிற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. செல்வ செழிப்போடு இருக்கலாம்.

ஹனுமான் சாலிசா பாட்டு | ஹனுமான் சாலிசா லிரிக்ஸ் இன் தமிழ்

ஜெய ஹனுமானே! ஞானகுணக் கடலே!
உலகத்தின் ஒளியே வானரர் கோனே. (1)

ராமதூதனே! ஆற்றலின் வடிவமே!
அஞ்சனை மைந்தனே! வாயு புத்திரனே. (2)

மாபெரும் வீரனே! பெருந்திறல் வடிவே!
ஞானத்தை அருள்வாய், நன்மையை
தருவாய். (3)

தங்க மேனியனே, பட்டாடை அணிபவனே!
மின்னும் குண்டலமுடன் அலைமுடியும்
கொண்டவனே. (4)

இடி,கொடிமிளிரும் கரங்கள் கொண்டோனே!
முஞ்சைப் பூணூல் தோ ளணிவோனே! (5)

சிவனின் அம்சமே ! கேசரி மகனே!
உனதொளி வீரத்தை உலகமே வணங்குமே! (6)

பேரறி வாளியே! நற்குண வாரியே!
ராமசேவைக்கென மகிழ்வுடன் பணிவோனே! (7)

உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்!
ராமனின் புகழை கேட்பது பரவசம்! (8)

நுண்ணிய உருவாய் அன்னைமுன் தோன்றினாய்!
கோர வுருவினில் இலங்கையை எரித்தாய்! (9)

அசுரரை அழித்த பெரும்பல சாலியே !
ராம காரியத்தை முடித்த மாருதியே ! (10)

அபிராமி அந்தாதி பாடல் வரிகள்

சஞ்சீவி கொணர்ந்தே இலக்குவனை எழுப்பிட
விஞ்சிய அன்புடன் ராமனுனைத் தழுவினார்! (11)

ராமன் உன்னை பெரிதும் புகழ்ந்து
பரதனைப் போல நீ உடனுறை என்றார்! (12)

ஆயிரம் நாவுடை ஆதி சேஷனுன்
பெருமையைப் புகழ்வதாய் அணைத்தே சொன்னார்! (13)

சனகாதி முனிவரும் பிரம்மாதி தேவரும்
ஈசனும் நாரதர் கலைமகள் சேஷனும் (14)

எமன், குபேரன், திசைக் காவலரும், புலவரும்
உன் பெருமை தனை சொல்ல முடியுமோ? (15)

சுக்ரீவனுக்கு அரசை அளித்திட
ராமனின் நட்பால் உதவிகள் செய்தாய்! (16)

உன் அறிவுரையை வீடணன் கொண்டதால்
அரியணை அடைந்ததை இவ்வுலகு அறியும்! (17)

தொலைவினில் ஒளிரும் ஞாயிறைக் கண்டே
சுவைதரும் கனியெனப் பிடித்து விழுங்கினாய்! (18)

வாயினில் ராமனின் மோதிரம் கவ்வியே
ஆழியைக் கடந்ததில் வியப்பெதும் உண்டோ! (19)

உலகினில் முடியாக் காரியம் யாவையும்
நினதருளாலே முடிந்திடும் எளிதாய்! (20)

ராமராச்சியத்தின் வாயிற் காவலன்நீ!
நுழைந்திட வியலுமோ நின்னருள் இன்றி! (21)

உனைச் சரணடைந்தால் இன்பங்கள் நிச்சயம்!
காவலாய் நீவர ஏதிங்கு எமக்கு அச்சம்! (22)

நின்னால் மட்டுமே நின்திறல் அடங்கும்!
மூவுலகும் அதன் முன்னே நடுங்கும்! (23)

பூதப் பிசாசுகள் நெருங்கிட வருமோ!
மஹாவீர னுன் திருநாமம் சொல்வாரை! (24)

நோய்களும் அகலும் துன்பங்கள் விலகும்!
பலமிகு நின்திரு நாமம் சொல்லிட! (25)

தொல்லைகள் தொலைந்திட அனுமன் அருள்வான்!
மனம், வாக்கு, செயலால் தியானிப் பவர்க்கே! (26)

தவம்புரி பக்தர்க்கு வரங்கள் நல்கிடும்
ராமனின் பணிகளை நீயே செய்தாய்! (27)

வேண்டிடும் பக்தர்கள் ஆசைகள் நிறைவுறும்!
அழியாக் கனியாம் அனுபூதி பெறுவார்! (28)

நான்கு யுகங்களும் நின்புகழ் பாடிடும்!
நின்திரு நாமமே உலகினில் சிறந்திடும்! (29)

ஞானியர் நல்லோரைக் காப்பவன் நீயே!
தீயவை அழிப்பாய்! ராமனின் கனியே! (30)

எட்டு ஸித்திகளும் ஒன்பது செல்வங்களும்
கேட்டவர்க்கு அருள்வரம் சீதையுனக் களித்தார்! (31)

ராம பக்தியின் சாரமே நின்னிடம்!
என்றும் அவனது சேவகன் நீயே! (32)

நின்னைப் பற்றியே ராமனை அடைவார்!
தொடர்வரும் பிறவித் துன்பம் துடைப்பார்! (33)

வாழ்வின் முடிவினில் ராமனடி சேர்வார்!
ஹரியின் பக்தராய்ப் பெருமைகள் பெறுவார்! (34)

மறுதெய்வம் மனதில் நினையா பக்தரும்
அனுமனைத் துதித்தே அனைத்தின்பம் பெறுவார்! (35)

துன்பங்கள் தொலையும் துயரங்கள் தீர்ந்திடும்!
வல்லிய அனுமனை தியானிப் பவர்க்கே! (36)

ஆஞ்ச நேயனே! வெற்றி! வெற்றி! வெற்றி!
விஞ்சிடும் குருவே! எமக்கருள் புரிவாய்! (37)

நூறுமுறை இதைத் துதிப்பவர் எவரோ
அவர் தளை நீங்கியே ஆனந்தம் அடைவார்! (38)

அனுமனின் நாற்பதைப் படிப்பவர் எல்லாம்
சிவனருள் பெற்றே ஸித்திகள் அடைவார்! (39)

அடியவன் துளஸீ தாஸன் வேண்டுவான்
அனைவர் உள்ளிலும் திருமால் உறையவே! (40)

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now