சிவன் கோவில் சென்றால் இப்படி வணங்கி தவறு செய்யாதீர்கள்…!

Advertisement

சிவன் கோவில் வழிபடும் முறை

சிவன் என்றால் இங்கு அனைத்து நண்பர்களுக்கும் பிடிக்கும். ஆனால் அவர்கள் கோவில்களுக்கு செல்லும் போது அவரை வணங்கும் போது சில தவறுகளை செய்தி விடுகிறார்கள். பெருமாள் கோவில்களுக்கு என்று சில சாஸ்திரம் உள்ளது அதேபோல் சிவன் கோவில்களுக்கு என்று சில சாஸ்திரம் உள்ளது.

சிவ பெருமாளை பற்றி நன்கு அறிந்தவர்கள் சில விசயங்களை சரியாக செய்வார்கள். நாம் சிவன் கோவில்களுக்கு என்றால் தவறாகத்தான் வழிபாடுவோம். ஆகையால் இனி அந்த தவறை செய்தால் அதனை மாற்றி கொள்ளுங்கள்.

சிவன் கோவில் வழிபடும் முறை:

விநாயகர்

எந்த கோவில்களுக்கு சென்றாலும் அங்கு முதலில் விநாயகர் இருப்பார் அவரை வணங்க வேண்டும், அவரை வணங்கும் போது தலையில் குட்டி கொண்டு, தோப்புக்கரணம் போட்டு வணங்க வேண்டும்.

சிவன்

அதன் பின் உள் சென்றால் பக்கத்தில் முருகப்பெருமான் இருப்பார் அவரை வணங்க வேண்டும். அடுத்து தாயாரின் சன்னதிக்கு சென்று அவரிடம் என்னுடைய பிரச்சனையை சிவ பெருமாளிடம் கொண்டு சேருங்கள் என்று சொல்லவேண்டும்.

அடுத்து சுவாமி சன்னதிக்குள் செல்லவதற்கு முன்பே நந்திதிஸ்வரர் இருப்பார் அவரை வணங்கி விட்டு அதன் பின்பு தான் சிவ பெருமாளை வணங்க வேண்டும்.

சிலர் நந்தியை வணங்கும் போது அவரின் காதில் சொல்கிறேன் என்று வணங்குவதை தவிர்க்கவும். அவர்கு நன்கு காதுகள் கேட்கும்.

நாம் அனைவரும் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று எந்த கோவில்களுக்கு சென்றாலும் அங்கு சாமியை வணக்கும் போது கண்களை மூடி கொள்கிறோம் அது முற்றிலும் தவறு சாமியை வழிபடும் போது கண்களை மூடி கொள்ளக்கூடாது.

தீப ஆராதனை காட்டும் போது கைகளை தலைக்கு மேல் தூக்கி வணங்கவேண்டும்.

சிவன் கோவிலில் ஒவ்வொரு சன்னதியாக வழிபடும் போது சண்டிகேஸ்வர் இருப்பார் அவரை நாம் காது கேட்காது என்று சொல்லியும் அவர் தூங்குவார் என்று சொல்லியும் கைகளை தட்டி வழிபட்டு வருகிறோம் ஆனால் அது தவறு.

அவரை வழிபடும் போது கைகளை துடைத்து சிவபெருமாளிடமிருந்து அருளை மட்டுமே எடுத்து செல்கிறோம் என்பதை கைகளை துடைத்து சொல்கிறோம். இப்படி தான் சண்டிகேஸ்வவரை வணங்க வேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 சிவன் தமிழ் பெயர்கள்

கொடி மரம்

 

 

அதன் பின் இருக்கும் சுவாமிகளை அப்படியே வழிபட்டு வந்து கடைசியாக நவகிரகங்கள் இருக்கும் அவர்களையும் வணங்கிவிட்டு கடைசியாக தான் வந்து கொடி மரம் இருக்கும்.

அங்கு வந்து தான் உங்களின் அனைத்து பிராத்தனைகளையும் சொல்லிவிட்டு விழுந்து வணங்கி விட்டு அப்படியே அங்கு சிறிது நேரம் அமர்ந்து விட்டு ஆலயத்தை விட்டு செல்லலாம். இப்படி தான் சிவன் கோவிலை வணங்க வேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 தமிழ்நாட்டில் உள்ள சக்தி வாய்ந்த 28 சிவன் கோவில் விவரங்கள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement